சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

’நெஞ்சில் குடியிருக்கும்’ நம்பிக்கை! நான் வர்றேன் தனியா.. 2026ல் தனித்து களமிறங்கும் ‘தளபதி’ விஜய்?

Google Oneindia Tamil News

சென்னை : ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தனித்து களமிறங்கலாம் என நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்க மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்கின்றனர் இயக்க நிர்வாகிகள்.

நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் குறித்து நேரடியாக கருத்துக்களை தெரிவிக்கவிட்டாலும் அது தொடர்பாக நீண்ட ஆலோசனையில் இருக்கிறார்.

இதன் விளைவாகவே கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டனர்.

ஆனந்தம்.. ஆனந்தம் பாடும்! அப்பாவை விஜய் வெறுக்க இவர்தான் காரணமா? வெளியான பகீர் தகவல்! உண்மையா? ஆனந்தம்.. ஆனந்தம் பாடும்! அப்பாவை விஜய் வெறுக்க இவர்தான் காரணமா? வெளியான பகீர் தகவல்! உண்மையா?

தளபதி விஜய்

தளபதி விஜய்

அதில் ஓரளவு கிடைத்த வெற்றி விஜய்யை உற்சாகத்தில் ஆழ்த்தி இருந்தாலும் தற்போதைய சூழ்நிலையில் அரசியல் வேண்டாம் என்றும், பிற்காலத்தில் வேண்டுமானால் நேரடி அரசியலில் இறங்கலாம் என திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காகவே பலமுறை தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். ஆனால் தேர்தல்களில் நேரடியாக யாருக்கும் ‘வாய்ஸ்' கொடுக்கவில்லை.

விஜய் மக்கள் இயக்கம்

விஜய் மக்கள் இயக்கம்

முதன்முதலாக திமுக ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு நடைபெற்ற ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டனர். இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்தலில் பல இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் சுயேட்ச்சையாக போட்டியிட்டனர். அவர்கள் பிரச்சாரத்தின் போது விஜய் படம் பதித்த கொடியையும் விஜயின் புகைப்படங்களையும் கையில் ஏந்தியதோடு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் என்று வாக்கு சேகரித்தனர்.

உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தல்

அந்த தேர்தலில் சுமார் 51 பேர் வெற்றி பெற்றதாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவர் கூறி இருந்தார். அதே நடிகர் விஜயின் ஒப்புதலுடன் தான் தேர்தலில் அவர்கள் போட்டியிட்டதை உறுதி செய்யும் வகையில் பனையூரில் தனது வீட்டில் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்ததோடு அவர்களுக்கு விருந்தும் வைத்து அசத்தினர். இதை அடுத்து நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் களமிறங்கினர்.

நம்பிக்கை

நம்பிக்கை

பெரிய அளவிலான வெற்றி இல்லை என்றாலும் விஜயின் புகைப்படம் மற்றும் கொடியை எடுத்துச் சென்றதற்கே அவர்களுக்கு ஓரளவுக்கு வாக்குகள் கிடைத்தது. இதனால் உற்சாகத்தில் இருக்கும் விஜய் தரப்பு தனது அரசியல் ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடலாமா என நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும் வரும் தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கான வாய்ப்பு அதிகம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். அரசியல் ஆசை விஜய்க்கு வந்தது தற்போது அல்ல.

Recommended Video

    Rajinikanthஐ தொடர்ந்து வீட்டில் தேசியக்கொடி ஏற்றிய Actor Vijay! *Politics
    சட்டமன்ற தேர்தல்

    சட்டமன்ற தேர்தல்

    அதிமுகவுக்கும் திமுகவுக்கும் மறைமுக ஆதரவை அளித்து வந்த விஜய், அதிமுக இரண்டாவது முறை ஆட்சி அமைத்த போது தான் ஆளும் கட்சி என அதிமுகவுக்கு நேரடியாக ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அதிமுக தலைமையுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் காரணமாக அமைதியாக இருந்து வந்த விஜய் விஜய் மக்கள் இயக்க பணிகளில் தீவிரம் காட்டி வந்தார். இந்த நிலையில் தான் தற்போது நடிகர் விஜய் அடுத்ததாக சட்டமன்ற தேர்தலை நோக்கி களம் இறங்கி இருக்கிறார் எனவும் அது எந்த அளவு கை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

    English summary
    Actor Vijay Plans to Contest 2026 Assembly Elections Alone Actor Vijay plans to stand alone in the upcoming assembly elections following the response received in the rural and urban local body elections ; ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தனித்து களமிறங்கலாம் என நடிகர் விஜய் திட்டம்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X