சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்க இருக்காங்கன்னே தெரியலை! ‘சூப்பர் மாடல்’ மீரா மிதுனை கைது செய்ய முடியவேயில்லை! திணறும் போலீஸ்!

Google Oneindia Tamil News

சென்னை : பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகை மீரா மிதுன் தலைமறைவாகி உள்ளதாகவும், அடிக்கடி இருப்பிடத்தை மாற்றி வருவதால் அவரை கைது செய்ய முடியவில்லை என சென்னை காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் நடிகை மீரா மிதுன்.

சூப்பர் மாடல் என தன்னைத் தானே கூறிக் கொண்ட அவர் நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து நடிகர்கள் குறித்தும் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

ஓபிஎஸ் கையில் 3+1 ஆப்ஷன்கள்.. டெல்லி கைவிட்டாலும்.. இருக்கு மெகா அஸ்திரம்.. ரிப்போர்ட் லீக் ஆகுமாம்! ஓபிஎஸ் கையில் 3+1 ஆப்ஷன்கள்.. டெல்லி கைவிட்டாலும்.. இருக்கு மெகா அஸ்திரம்.. ரிப்போர்ட் லீக் ஆகுமாம்!

சர்ச்சை மீரா

சர்ச்சை மீரா

மீதுன் இந்த வீடியோ பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

அதிரடி கைது

அதிரடி கைது

பட்டியலின மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் திரைத் துறையில் பெற்றுள்ள முன்னேற்றம் குறித்த தனது கருத்தை வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன் மீதும், இதற்கு உடந்தையாக இருந்ததாக அந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

 கைது வாரண்ட்

கைது வாரண்ட்

பின்னர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர். இந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி முன்பு ஆகஸ்ட் 6 ஆம் தேதி சாட்சிகள் விசாரணைக்கு வந்தபோது, மீரா மீதுன் ஆஜராகவில்லை எனவே அவருக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

கைது செய்ய முடியவில்லை

கைது செய்ய முடியவில்லை

ஆனால் இதுவரை மீரா மிதுனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் இருமுறை இந்த மனு விசாரணைக்கு வந்தபோது நடிகை மீரா மிதுன் பெங்களூருவில் இருப்பதாகவும் விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என காவல்துறை அதிகாரிகள் கூறினர். ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை இந்நிலையில் இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நடிகை மீரா மிதுன் அடிக்கடி தலைமறைவாகி இருக்கும் இடத்தை மாற்றி வருவதாகவும் அதனால் அவரை கைது செய்ய முடியவில்லை விரைவில் அவர் கைது செய்யப்படுவார் எனக் கூறியுள்ளனர். எதை அடுத்து இந்த வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

English summary
Actress Meera Mithun, who was issued a warrant in the case of posting defamatory comments about a listed person, is absconding and has not been able to arrest her as she often changes her location, the Chennai police told the court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X