இலங்கை ராணுவம் அட்டூழியம்.. சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்.. பிரதமருக்கு, ஓ.பி.எஸ் கடிதம்!
சென்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளது. மீனவர்களை சிறைப்பிடித்தும், படகுகளை, வலைகளையும் சேதப்படுத்துகின்றனர். உடனடியாக இதற்கு அரசியல் கண்டனம் தெரிவிப்பதும், ஆனால் அதன்பிறகு மீண்டும் இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை சீண்டுவதையும் வழக்கமாக நடந்து வருகிறது.
கடந்த 11-ம் தேதி நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த சகோதரர்கள் சிவநேசன் சிவக்கும் ஆதியோரது இரண்டு விசைப்படகுகளில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற 23 மீனவர்கள் இலங்கை ராணுவம் சிறை பிடித்து ஊர்க்காவல் பகுதியில் வைத்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை ராணுவத்தினர் பறிமுதல் செய்து வைத்துள்ளனர். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் நாகைக்கு வருகை புரிந்து மீனவர்களின் குடும்பத்தினரை பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மீனவர்களை மீட்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
இந்த நிலையில் இலங்கை ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருபப்தாவது:- நாகையை சேர்ந்த 23 தமிழக மீனவர்கள் கடந்த 11-ம் தேதி 2 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்களை கடந்த 13-ம் தேதி இலங்கை கடற்படையினர் பருத்தித்துறை கடல் பகுதியில் கைது செய்துள்ளனர்.

கவலைக்குரியதாக உள்ளது
அவர்களது இரு படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை காரைநகரில் உள்ள கடற்படை தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்டு உள்ளனர்.இலங்கை கடற்படையின் இந்த செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இலங்கை கடற்படையினரால் அடிக்கடி மேற்கொள்ளப்படும் கைது மற்றும் பறிமுதல் நடவடிக்கை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.

நடவடிக்கை வேண்டும்
இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவோமோ என்ற அச்சத்திலேயே தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழக மீனவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே, நீங்கள் உடனே இவ்விவகாரத்தில் தலையிட்டு 23 மீனவர்களின் விடுதலையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications