புத்தாண்டில் “புரட்சி”.. ஜாதி மறுப்பு திருமணம் செய்ய “மனிதம் மேட்ரிமோனி” - வழக்கறிஞர் அசத்தல்
சென்னை: இணையதள தொழில்நுட்பம் வளர்ந்து திருமணம் நிச்சயங்கள் சமூக வலைதளங்களில் நடைபெற்று வந்தாலும், மறுபக்கம் மேட்ரிமோனி தளங்கள் சாதி, மத பெயர்களை கொண்டு தனி தனியாக செயலிகள், இணையதளங்களை உருவாக்கி வரும் நிலையில், சாதி, மதம் கடந்து திருமணம் செய்ய விரும்புவோர்களுக்கான புதிய செயலி ஒன்றை தொடங்கி இருக்கிறார் வழக்கறிஞர்.
சென்னையை சேர்ந்தவர் ரமேஷ் பெரியார். வழக்கறிஞரான இவர்
சென்னையில் அறிஞர் அண்ணா சுயமரியாதைத் திருமண நிலையம் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தையும், மனிதம் என்ற பெயரில் சட்ட நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
இதன் மூலமாக சாதி, மத மறுப்பு திருமணம் செய்ய விரும்பும் தம்பதிகளுக்கு சட்ட உதவிகளையும், திருமணங்களையும் நடத்தி வருகிறார். சுயமரியாதை திருமணம் செய்துகொண்ட இவர் ஏராளமான தம்பதிகளுக்கு தன்னை போன்றே சுயமரியாதை திருமணத்தை செய்து வைத்து வருகிறார்.

மனிதம் மேட்ரிமோனி
ஏராளமான தம்பதிகள் இவரின் சட்ட உதவி சேவையால் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் தன்னுடைய சேவையை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் நோக்கில் மேட்ரிமோனியை தொடங்கி இருக்கிறார் ரமேஷ் பெரியார். கூகுளிலும், ப்ளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் மேட்ரிமோனியை தேடினாலே நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் பெயருக்கு முன்னாள் சாதி, மத பெயர்களுடன் செயலிகளும், இணையதளங்களும் வருகின்றன.

சாதிய மேட்ரிமோனிகள்
தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலத்திலும் சாதி அடிப்படையில் திருமணம் செய்கிறார்களே என்று ஏங்கும் அளவிற்கு அதில் ஆயிரக்கணக்கான பேர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். தொலைக்காட்சி, இணையதளங்களில் சாதி மேட்ரிமோனி இணையதளங்கள், செயலிகள் நிறைந்து காணப்படும் நிலையில், அதில் வேறுபட்டு நிற்கிறது மனிதம் மேட்ரிமோனி.

மாற்றம் நம்மிடம் இருந்து தொடங்கட்டும்
"மாற்றம் நம்மிடம் இருந்து தொடங்கட்டும். சமூக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் முன்முடிவுகளுக்கு எதிராக இந்த புதிய உலகை நாம் இணைந்து கட்டமைப்போம். சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்துடன் இந்த சமுதாயத்தை கட்டமைக்க இணைந்திடுங்கள்" என்று அந்த செயலியின் அறிமுகத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ரமேஷ் பெரியார் விளக்கம்
இதுகுறித்து வழக்கறிஞர் ரமேஷ் பெரியார் பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கையில், "தோழர்களே ஜாதி மத மறுப்பு இணையர்களுக்கான நமது மனிதம் மேட்ரிமோனி செயலி தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. செயலியின் லிங்கை பின்னூட்டத்தில் இடுகின்றேன். அதன் வழியே அனைவரும் நமது மனிதம் மேட்ரிமோனி செயலியை பதிவிறக்கம் செய்து பார்வையிடுங்கள்.

ஜாதியற்றவர்களுக்கான செயலி
இயன்றால் ரிவியூவ் பகுதியில் 5 Star தந்து உங்கள் கருத்தை பதிவு செய்தால், நமது மனிதம் மேட்ரிமோனி கூகுள் பிளே ஸ்டோரில் தேடும் போது முதன்மையாக வந்து நிற்கும். பெரு முதலாளிகள் நடத்தும் ஜாதிய மேட்ரிமோனிகள் 424 கூகுள் பிளே ஸ்டோரில் காணக்கிடைக்கிறது. இவர்களோடு இன்று உதயமான நமது ஜாதியற்றவர்களுக்கான மனிதம் கீழே கிடக்கிறது.

ரூ.10ல் இருந்து பிளான்
இதை தூக்கி மேலே கொண்டு வரும் பொறுப்பு என்னை நேசிக்கும், என்னுடைய இந்த எளிய பணிக்கு துணை நிற்கும் உங்கள் அனைவரையும் சார்ந்தது. யார் யார் ரிவியூவ் செய்திருக்கிறீர்கள், எத்தனை ஸ்டார் வழங்கியிருக்கிறீர்கள் என்ற தகவல் எனக்கு உடனுக்குடன் வந்துவிடும் என்ற செய்தியை சொல்லிக்கொண்டு நன்றியோடு நிறைவு செய்கின்றேன்." என்று குறிப்பிட்டு உள்ளார். வெறும் 10 ரூபாயில் இருந்து செயலியில் திட்டங்கள் தொடங்குகின்றன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications