சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கம்யூனிஸ்டுகளுக்கு 25 கோடி.. விசாரணை கோரும் அதிமுக, தேமுதிக.. சிக்கலில் திமுக?

கூட்டணி கட்சிகளுக்கு பணம் தந்த விவகாரத்தில் திமுக விமர்சிக்கப்பட்டு வருகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    கம்யூனிஸ்டுகளுக்கு 25 கோடி..விசாரணை கோரும் அதிமுக, தேமுதிக.. சிக்கலில் திமுக? | TN By Election 2019

    சென்னை: ஏன் தான் கணக்கு காட்டினோமோ என்று நொந்து கொள்ளும் அளவுக்கு... திமுகவை அரசியல் கட்சிகள் வட்டமடித்து கேள்வி கேட்க தொடங்கி உள்ளனர். இது கம்யூனிஸ்ட்களுக்கும் தர்மசங்கடத்தை தந்துள்ளது!

    2 கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட கூட்டணி கட்சிகளுக்கு, 40 கோடி ரூபாய் வழங்கியதாக, பிரமாண பத்திரத்தை திமுக தாக்கல் செய்திருந்தது. யாருக்கு எவ்வளவு ரூபாய் தரப்பட்டது என்ற விவரத்தை இதற்கு முன்பு இப்படி திமுக சொன்னதே இல்லை. இப்போது கட்சி பெயர்கள் + அவர்களுக்கு வழங்கிய தொகையை வெளிப்படையாக சொன்னது அனைத்து தரப்புக்கும் அதிர்ச்சிதான்!

    இதற்கான விளக்கத்தை 2 கம்யூனிஸ்ட்களும் அறிக்கைகளாக தெளிவுபடுத்தினர். கூட்டணி கட்சிகளுக்குதான் அந்த பணத்தை செலவு செய்தோம் என்று சொல்கிறார்கள். ஆனால் பாஜகவின் எச்.ராஜாவோ, கம்யூனிஸ்ட்கள் அந்த பணத்தை என்ன செய்தார்கள், யாருக்கு எவ்வளவு செலவு செய்தார்கள் என்று தேர்தல் ஆணையம் நேரிடையாக கணக்கு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    மிட்டா மிராசுகளுக்கு தான் காங்கிரஸ் சீட் கொடுக்கும்... அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்மிட்டா மிராசுகளுக்கு தான் காங்கிரஸ் சீட் கொடுக்கும்... அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

    தேர்தல் நிதி

    தேர்தல் நிதி

    இதைதவிர, திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் இந்த விவகாரத்தை கிண்ட ஆரம்பித்துவிட்டார்கள். நேற்று பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, தேர்தல் நிதியாக திமுக ரூ.25 கோடி கொடுத்தது குறித்து அக்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் விளக்கமளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

    கருப்பு பணம்

    கருப்பு பணம்

    இதில் ஒரு படி அமைச்சர் ஜெயக்குமார் மேலே சென்று, சிபிஐ விசாரணையே தேவை என்று சொல்லிவிட்டார். இவர் சொல்லும்போது, "ஜனநாயகத்தை நம்பி இருக்கிற இயக்கங்களுக்கு, திமுக பேரதிர்ச்சியை தந்துள்ளது. வெள்ளையில் இவ்வளவு வழங்கினால், கருப்பில் எவ்வளவு வழங்கி இருப்பர்? கட்சிகளுக்கு, 40 கோடி ரூபாய் கொடுத்துள்ளனர்.

    பிரேமலதா

    பிரேமலதா

    வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும், 20 கோடி ரூபாய் வரை, வழங்கி உள்ளனர். இதை, மத்திய அரசு எளிதில் விட்டு விடக்கூடாது. உண்மை நிலையை கண்டறிய, வேட்பாளர்களுக்கு எவ்வளவு கொடுத்தனர் என்பதை, விசாரிக்க வேண்டும். 1,000 கோடி ரூபாய் வரை விளையாடி உள்ளது. சிபிஐ. விசாரித்தால் நல்லது" என்றார்.

    கடும் நெருக்கடி

    கடும் நெருக்கடி

    பிரமாண பத்திரத்தையும் தாண்டி, கருப்பு, வெள்ளை என்ற ரீதியில் இந்த பணப்பட்டுவாடாவை அதிமுக விமர்சிக்க தொடங்கி உள்ளது, திமுகவுக்கு கடும் நெருக்கடியைதான் தரும். தேர்தல் ஆணையம் முதல் சிபிஐ வரை இந்த விவகாரம் கையாளப்பட்டால்,கூட்டணி கட்சிகளின் உறவு எந்த மாதிரியாக இருக்குமோ தெரியாது, ஆனால் அந்தந்த கட்சி தொண்டர்களின் மனநிலைமை சோர்வடைந்து உள்ளது.

    சிக்கலில் திமுக?

    சிக்கலில் திமுக?

    பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய போய், இன்று ஆளாளுக்கு நிற்க வைத்து கேள்வி கேட்கும் நிலைமை திமுக வந்துள்ளது. இதை திமுக எப்படிஎதிர்கொள்ள போவதுடன், கூட்டணி கட்சிகளின் கறைகளையும் துடைத்தெறிய போகிறது என்பதை இனிதான் நாம் பார்க்க வேண்டி உள்ளது.

    English summary
    AIADMK, DMDK including BJPs H Raja have questioned the DMK's fund issue for the coalition parties
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X