அமெரிக்கா டூ விருதுநகர்.. மூளைச்சலவையில் செய்த முட்டாள் தனம்.. கம்பி எண்ணும் விருதுநகர் தம்பதி
சென்னை: சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சல்மான் சலீம் என்பவரிடம் 'சைபர்' மோசடி கும்பல் ஆசை வார்த்தை கூறி, ரூ.17 லட்சம் பெற்று மோசடி செய்தது. இதுபற்றி சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் சல்மான் சலீம் அனுப்பிய பணம் விருதுநகர் மாவட்டம், சிவகாசி லட்சுமிபுரத்தைச் சேர்ந்த புஷ்பா மற்றும் அவரது கணவர் சதுரகிரியின் வங்கி கணக்குகளுக்கு சென்றிருந்தது. இவர்கள் ஆன்லைன் மோசடி செயலுக்கு அமெரிக்காவை சேர்ந்தவருக்கு இடைத்தரகமாக செயல்பட்டது தெரியவந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆன்லைன் மோசடி கும்பல் நூதன முறையில் மக்களிடம் பணம் பறிக்கும் வேலைகளை செய்து வருகிறது. இந்த கும்பலால் தமிழ்நாட்டில் பலர் பணத்தை பறிகொடுத்துவிட்டு தவிக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே சைபர் கிரைம் மோசடிகள் நடக்கிறது. இதற்கு அந்தந்தமொழி பேச தெரிந்தவர்களை இடைத்தரகர்களாக மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் பயன்படுத்துகிறார்கள். அதற்காக கணிசமான பணம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இப்படி பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அப்படித்தான் விருதுநகர் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அரும்பாக்கம்
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த 29 வயதாகும் சல்மான் சலீம் என்பவர் தனியார் நிறுவனம் நடத்தி வரும் இவரிடம் வெளிநாட்டில் உள்ள 'சைபர்' மோசடி கும்பல் ஆசை வார்த்தை கூறி, ரூ.17 லட்சம் பெற்று மோசடி செய்தது. இதுகுறித்து அவர், சென்னை மேற்குமண்டல 'சைபர் கிரைம்' போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
விருதுநகர் தம்பதி கைது
அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் சல்மான் சலீம் அனுப்பிய பணம் விருதுநகர் மாவட்டம், சிவகாசி லட்சுமிபுரத்தைச் சேர்ந்த 35 வயதாகும் புஷ்பா மற்றும் அவரது கணவர் சதுரகிரியின் (41) வங்கி கணக்குகளுக்கு சென்றிருந்ததும், அந்த பணத்தை அவர்கள் காசோலை மூலம் எடுத்திருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சென்னை 'சைபர் கிரைம்' போலீசார் விருதுநகர் சென்று கணவன்-மனைவியை கைது செய்தார்கள்.
பேஸ்புக் மூலம் தொடர்பு
விசாரணையில் போலீசாருக்கு புதிய தகவல் கிடைத்தது. அதன் படி, 'பேஸ்புக்' மூலம் புஷ்பாவை அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ் ஓட்டோ என்ற நபர் தொடர்பு கொண்டிருககிறார்.. அவர், உங்களுக்கு பல கோடி மதிப்பிலான பரிசு பொருட்களை அனுப்பி வைக்கிறேன். நான் சொல்லும்படி நடந்துக்கொள்ளுங்கள் என்று கூறி 'சைபர்' மோசடி திட்டத்தை கூறியிருக்கிறார்.
வங்கி கணக்கு
கணவர் அனுமதி கொடுத்துள்ளார். அதன்பின்னர் புஷ்பா இந்த திட்டத்தில் இணைந்துள்ளார். அமெரிக்க நபர் கூறிய ஆலோசனையின் பேரில் 3 வங்கி கணக்குகளை புஷ்பா மற்றும் சதுரகிரி தொடங்கி உள்ளனர். மோசடி செயல் மூலம் அந்த வங்கிக் கணக்குக்கு அனுப்பப்படும் பணத்தை எடுத்து, கிறிஸ் ஓட்டோ அனுப்ப கூறிய பல்வேறு வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இப்படி, தங்கள் வங்கி கணக்குக்கு சல்மான் சலீம் அனுப்பிய ரூ.17 லட்சத்தில் ரூ.3 லட்சத்து 67 ஆயிரத்தை கமிஷனாக எடுத்துக்கொண்டு மீதம் உள்ள பணத்தை அனுப்பி வைத்திருக்கிறார்கள். அமெரிக்காவை சேர்ந்தவருக்கு விருதுநகரை சேர்ந்த தம்பதி ஏஜெண்டாக செயல்பட்ட சம்பவம் போலீசாரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
மூளைச்சலவை
விருதுநகரில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள பல்வேறு ஏழைகளை இப்படி மூளைச்சலவை செய்து சைபர் கிரைம் கும்பல் வெளிநாட்டில் இருந்த படி, பணத்தை பறிக்கிறார்கள். மாட்டினால் ஏஜெண்டாக செயல்படும் கும்பல் மட்டுமே பிடிப்படுகிறார்கள். மெயின் திருடர்கள் வெளிநாட்டில் இருப்பதால் அவர்களை பிடிப்பதில் சவால் நிலவுகிறது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications