அமமுக முக்கிய நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்.. சசிகலாவை சந்தித்ததால் அதிரடி காட்டிய தினகரன்!
சென்னை: சசிகலாவை சந்தித்த கட்சி நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி அமமுக (AMMK) பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நடவடிக்கை எடுத்துள்ளார். அமமுகவில் மாணவியர் அணி செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த வழக்கறிஞர் ஜீவிதா நாச்சியார் அமமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
வழக்கறிஞரான ஜீவிதா நாச்சியார், டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தவர். அமமுகவில் ஐடி விங் மகளிர் பிரிவு இணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். பின்னர் அமமுகவின் மாணவியர் அணி செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தார். திருமங்கலம் சட்டசபை தொகுதி பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.

ஜீவிதா நாச்சியார் மீது நடவடிக்கை
இந்நிலையில், சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தற்போது டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக, அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது. இந்தச் சூழலில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை சந்தித்துள்ளார் அமமுக மாணவியர் அணி செயலாளர் ஜீவிதா நாச்சியார். இதையடுத்து, அவரை கட்சியை விட்டு நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார் டிடிவி தினகரன்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக மாணவியர் அணி செயலாளர் B.ஜீவிதா நாச்சியார், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

சசிகலா - தினகரன் பிணக்கு
டிடிவி தினகரன் அதிமுக கூட்டணியில் இணைந்து எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்த பிறகு சசிகலா - டிடிவி தினகரன் இடையே பிணக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் அண்ணா நினைவு நாள் அன்று, சென்னை மெரினா கடற்கரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் பிரச்சார வேனில் ஏறி அமர்ந்தபடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, ஜெயலலிதாவின் தோழியும், டி.டி.வி.தினகரனின் சித்தியுமான சசிகலா, அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக காரில் வந்தார். டி.டி.வி.தினகரன் வேன் அருகே சசிகலா பயணம் செய்த கார் வந்தபோது, அதுகுறித்த தகவலை டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் அவரிடம் தெரிவித்தனர். உடனடியாக பேட்டியை முடித்துக்கொண்ட டி.டி.வி.தினகரன், வேனில் அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
சசிகலா பிளான்?
அதிமுகவை ஒருங்கிணைப்பேன் எனக் கூறி வரும் சசிகலா தனது ஆதரவாளர்களை தொடர்ந்து சந்தித்து வரும் நிலையில், அவர்களை வரும் சட்டசபை தேர்தலில் களமிறக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. முக்குலத்தோர் வாக்கு வங்கி அதிகம் உள்ள குறிப்பிட்ட சில இடங்களை தேர்வு செய்து அங்கே வேட்பாளர்களை நிறுத்தி களம் காணலாம் என சசிகலா தரப்பு திட்டமிட்டு வருவதாகவும், இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. இதுஒருபுறம் இருக்க விஜய்யின் தவெக உடன் கூட்டணி அமைக்கவும் சசிகலா முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
-
மாம்பழத்தின் ‘மாஸ்டர் பிளான்’.. திருப்போரூரில் தடம் பதிக்கிறார் சௌமியா அன்புமணி? பாமக மேஜர் முடிவு -
120 வாக்குறுதிகள்.. லிஸ்ட் போட்ட டிடிவி தினகரன்.. விட்டதை பிடிக்க அமமுக ஸ்கெட்ச் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications