• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"கள்ளக்காதலரா நீங்க".. மஞ்ச சட்டை போட்டுக்கிட்டு.. வேன் மேல நின்று.. என்னா பேச்சு.. அதிரவைத்த தாவூத்

|

சென்னை: இதோ இந்த சார் இருக்காரே, கள்ளக்காதல் செய்றவங்க எந்த நேரமும் பேசி கொள்ள ஃப்ரீயா செல்போன் தர போகிறாராம்.. இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ள இவர் பெயர் ஷேக் தாவூத்!

யார் இந்த ஷேக் தாவூத்? 2, 3 நாட்களாகவே இவரை பற்றிதான் மீடியாவில் பேச்சாக உள்ளது. இவர் அந்தியூர் தொகுதியில் சுயேச்சை போட்டியிடும் வேட்பாளர். துணி தைக்கும் டைலர்.

சிங்கப்பூரில் போலீஸ்காரரை பார்த்து வேண்டுமென்றே இருமிய இந்தியருக்கு 14 வாரம் சிறை!

இவருக்கு தேர்தலில் போட்டியிடுவது ஹாபி போல.. இதுவரைக்கும் 9 முறை சுயேச்சையாகவே போட்டியிட்டுள்ளாராம்.. அதாவது 40 வருஷமாகவே இவர் போட்டியிட்டு வருகிறாராம்.. சட்டசபை மட்டுமல்ல எம்பி தேர்தலையும் இவர் விட்டு வைத்ததில்லை. இது 10வது முறை.

 மஞ்சள் சட்டைக்காரர்

மஞ்சள் சட்டைக்காரர்

2 நாளைக்கு முன்னாடி அந்தியூர் ரோட்டில் பத்ரகாளியம்மன் கோவில் முன்னாடி ஒருவர் வேன் மீது ஏறிநின்று மைக்கை பிடித்து கத்தி கத்தி பேசி கொண்டே இருந்தார்.. அவருடன் வேறு யாருமே இல்லை.. தனியாகவே சத்தமாக பேசினார்.. மஞ்ச கலர் சட்டை போட்டிருக்கவும் பளிச் என எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்தார்.. பிறகுதான் அவர் வேட்பாளர் ஷேக் தாவூத் என்பதே தெரியவந்தது.

 வாடகை வீடு

வாடகை வீடு

ஆனால், அவர் பிரச்சார பேச்சு மக்களை இழுத்தது.. தேர்தலில் வெற்றி பெற்று வந்தால், அந்த தொகுதி மக்களுக்கு என்னவெல்லாம் செய்ய போகிறேன் என்று அடுக்கி கொண்டே போனார்.. "நான் மட்டும் ஜெயிச்சேன்னு வெச்சுக்குங்க, ஏழைகள் வசிக்கும் வாடகை வீட்டை, அவங்களுக்கே சொந்தமாக்கிடுவேன்.. அப்பறம் ரொம்ப வீக் பாடியா இருக்காங்க இல்லை, அவங்க உடம்புக்கு ஊட்டச்சத்து கிடைக்க, பிராந்தி தருவேன்.

 சரக்கு

சரக்கு

குடும்ப தலைவிக்கு மாசம் 25 ஆயிரம் கண்டிப்பா தந்துடுவேன்.. அப்பறம், நல்ல சரக்கு இங்கே கிடைக்காது இல்லை, அதனால பாண்டிச்சேரியில் இருந்து, நல்ல சரக்கு வரவழைச்சு தருவேன்.. ஆனால் ஒரு கண்டிஷன, 18 வயசு நிரம்பிய ஆண்களுக்கு மட்டும்தான் சரக்கு வாங்கி தருவேன்.. தினமும் ஒரு லிட்டர் சரக்கு வாங்கி தருவேன்.

 கள்ளக்காதலர்கள்

கள்ளக்காதலர்கள்

அதேமாதிரி பெண்கள் யாராவது தங்களது கள்ளகாதலர்கள் கிட்ட பேசறதுக்கு செல்போன் வாங்கி தருவேன்.. அதுவும் காஸ்ட்லி செல்போன்.. 25 ஆயிரம் மதிப்பிலான OPPO செல்போன் வாங்கி தருவேன்.. நான் இந்த 40 வருஷமா போட்டியிட்டு வர்றேன்.. ஆனால், இதுவரை எனக்கு ஒரே ஒரு ஓட்டு கூட யாருமே போட்டதில்லை தெரியுமா..? நான் ஒரு ஏழைதான்.. இருந்தாலும், என்னை வெற்றி பெற செய்தால், இப்போ சொன்ன எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்" என்றார். இதைக் கேட்டதும் பொதுமக்களில் சிலர் அதிர்ந்தனர்.. சிலர் சிரித்து விட்டனர்.. பலர் தலையில் அடித்து கொண்டு போனார்கள்.

 வழக்கு பதிவு

வழக்கு பதிவு

இதில் என்ன ஹைலைட் என்றால், இவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்களாம்.. காரணம், வேன் மீது ஏறி நின்றுகொண்டு கத்தி கத்தி பிரச்சாரம் செய்துக்கிட்டிருந்தார் இல்லையா? அந்த பிரசாரத்துக்கு இவர் போலீசில் அனுமதியே வாங்கலையாம்.. அதனால் இவர் மீது அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த கேஸில் இருந்து இவர் எப்போது வெளியே வருவார் என்பதைவிட, இந்த முறையாவது இவருக்கு ஒரு ஓட்டாவது விழுமா என்ற எதிர்பார்ப்புதான் ஏற்பட்டுள்ளது.

 
 
 
English summary
Andhiyur Constitution Contestant Shek Dhawood
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X