500 குடுங்க ஆசி தருவாங்க..ஆள் இல்லா கடையில் டீ ஆற்றிய அன்னபூரணி! தூக்கி வரப்பட்ட சிஷ்யப் புள்ளிங்கோ!
சென்னை : தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமான அன்னபூரணி அரசு அம்மாவின் அவதார திருநாளை ஆசி பெற்றால் ஆயிரம் பலன்கள் கிடைக்கும் அதற்காக 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறிய நிலையில் யாருமே வராததால் கைக்காசு போட்டு ரோட்டில் சென்று அவர்களை அழைத்து அம்மாவின் ஆசி பெற வைத்ததாக கூறப்படுகிறது..
சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிகவும் பிரபலம் ஆன அன்னபூரணி அரசு அம்மா எனும் பெண் சாமியார், தன்னை ஆதிபராசக்தியின் அடுத்த உருவம் என கூறி வருவதுடன், அவ்வபோது பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் அட்வைஸ் கொடுத்து பக்தி பரவசத்தில் ஆழ்த்தி வருகிறார்.
'பைத்தியகாரத்தனம்’ ஓவரா போறாங்க! நித்யானந்தாவை சீண்டும் அன்னபூரணி அரசு? அவரே கொடுத்த அடடே விளக்கம்!
செங்கல்பட்டு மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், திடீரென சாமியார் அவதாரம் எடுத்தார். அப்போது முதல் நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டும் அதனை கண்டு கொள்ளாமல், ஆன்மீக சேவை ஆற்றி வருகிறார்.

அன்னப்பூரணி அரசு அம்மா
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த ராஜாதோப்பு பகுதியில் அன்னப்பூரணி அரசு அம்மா ஆசிரமத்தில் அன்னப்பூரணி அரசு அம்மாவின் அவதார திருநாள் நடந்தது. அதையொட்டி சென்னை, தர்மபுரி, கோவை, செங்கல்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆசிரமத்துக்கு வருகை தந்ததாகக் கூறப்படுகிறது.

அம்மாவுக்கு பாதபூஜை
பின்னர் அன்னப்பூரணி அரசு அம்மாவுக்கு பாதபூஜை செய்தும், மாலை அணிவித்தும், மலர்தூவியும், கற்பூரம் ஏற்றியும், தீபாராதனை காண்பித்தும் ஆசி பெற்றனர். நிகழ்ச்சியில் பக்தர்கள் குடும்ப பிரச்சினை, திருமணத்தடை, குழந்தை வரம் உள்ளிட்ட பிரச்சினைகளை முறையிட்டவர்களுக்கு அன்னபூரணி அரசுஅம்மா அருள் வாக்கு கூறி ஆசி வழங்கினார்.

ஆசி பெற கட்டணம்
ஆனால் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லாத நிலையிலும் கழுத்தில் மாலையோடு சுமார் மூன்று மணி நேரத்திற்குமேல் ஆசி வழங்குவது போல் போஸ் கொடுத்திருந்தார் அன்னபூரணி. ஆனாலும் சொன்னது போலவே யாரும் வரவில்லை. 500 ரூபாய் கொடுத்தால் அம்மா ஆசி தருவார் என கூறியும் யாரும் எட்டிக்கூடப் பார்க்காததால், கையிலிருந்த சில்லறையை பெருக்கி போட்டு திருவண்ணாமலையைச் சுற்றி கிரிவலம் வந்து அவர்களை அழைத்து வந்து அம்மாவிடம் ஆசி வாங்க விட்டனர் அங்கே சீடர்களாய் இருந்த 4 பேர்.

பக்தர்களுக்கு அன்னதானம்
அம்மா சீரியசாக 50 எடையுள்ள மாலைகளுடன் யோகா போல் தியானத்தில், பக்தி முக்திய நிலையில் ஒரு குடிமகன் உற்சாகமாக குதித்து ஆட்டம் போட்டார். அவருக்கு அம்மா இறங்கி அருள் கொடுத்துள்ளதாகவும், சிறிது நேரத்தில் பவர் குறைந்து விடும் என்றும் சிஷ்யக்கோடிகள் தெரிவித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இன்னும் என்னென்ன பார்க்க வேண்டுமோ என அங்கிருந்தவர்கள் அன்னாதானத்தை சாப்பிட்டு விட்டு கிளம்பினர்.