"கலர்" மாறுகிறது.. "திராவிடம்" கரைகிறது.. 2 கட்சிகள் ரெடியாமே.. திமுகவுக்கு சிக்கல்?.. காரணம் பாஜகவா
கம்யூனிஸ்ட், பாமக அதிருப்தியாளர்கள் அதிமுகவில் மீண்டும் இணையலாம் என்கிறார்கள்
சென்னை: தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்திற்கான அறிகுறி தற்போது தென்பட ஆரம்பித்துள்ளது.. முக்கியமாக இது கூட்டணி கட்சிகளிடம் இருந்து மெல்ல வெளிப்பட ஆரம்பித்துள்ளதாகவே கருதப்படுகிறது.
4 நாளைக்கு முன்பு ஒரே நாளில் 2 விஷயங்கள் நடந்தன.. ஒருபக்கம் பாஜகவின் நயினார் நாகேந்திரன் ஒருபேட்டி தந்தார்.. மறுபக்கம் அதிமுகவின் பொன்னையன் இன்னொரு பேட்டி தந்தார்.
"சசிகலா வந்தால் வரவேற்போம்" என்றார் பாஜகவின் நயினார்.. பாஜக வளர்வது தமிழகத்துக்கு ஆபத்து என்றார் பொன்னையன்.

நயினார் நாகேந்திரன்
இவர்கள் 2 பேரும் ஏன் இப்படி சொல்கிறார்? நயினார் ஏன் அதிமுகவை எரிச்சலூட்டும் வகையில் பேட்டி தருகிறார்? பொன்னையன் ஏன் பாஜகவை எரிச்சலூட்டும் வகையில் பேட்டி தருகிறார்? என்ற குழப்பங்கள் வட்டமடித்தன.. நயினார் மீது எடப்பாடி தரப்பு கோபம் கொண்டது.. எடப்பாடி தரப்பு மீது பாஜக கோபம் கொண்டது.. இரு தரப்பிலும் அதிருப்திகள், வருத்தங்கள் வெளிப்பட்டன.. இருவருமே ஒருவரையொருவர் குற்றம் சாட்டி கொண்டார்கள்.. ஒருவேளை பாஜக - அதிமுக கூட்டணி முறிகிறதோ? என்ற கேள்விகளும் எழுந்தன.

நயினார் போட்ட போடு
ஆனால், நயினார் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்று அண்ணாமலை சொல்லிவிட்டார்.. பொன்னையன் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்று எடப்பாடி, ஓபிஎஸ் இருவருமே சேர்ந்து சொல்லிவிட்டனர்.. அப்படியானால், மறுபடியும் பாஜக - அதிமுக உறவு தொடர்கிறதா? கூட்டணி வளர்கிறதா? கசப்புகள் எதுவுமே இவர்களுக்குள் இல்லையா? திமுகவுக்கு பிரதான எதிர்க்கட்சி பாஜகதான் என்பதை அதிமுக சப்போர்ட் செய்து மெய்ப்பித்து வருகிறதா என்ற குழப்பங்களும் தற்போது தொத்தி நிற்கின்றன.

2 சம்பவங்கள்
இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், இந்த இரு கட்சிகளுக்குள்ளும் கடந்த 4 நாள் சம்பவங்களை வைத்து பார்த்து, பிற கட்சிகள் வேறு கணக்கை போட்டு வருகிறது.. இதில் குறிப்பிட்டு சொல்லும்படியானது பாமகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும்தான்.. சிபிஎம், சிபிஐ கட்சிகளை பொறுத்தவரை, திமுக கூட்டணியில் உள்ளன.. ஆனால், சமீப காலமாகவே, பாஜகவுடனான உறவில் திமுக மென்மை போக்கை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது...

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி விஷயத்தில் உச்சக்கட்டமாக கொந்தளிப்பை காட்டியிருந்த நிலையில், அத்தனையும், மோடி சென்னை விழாவுக்கு வந்தபோது "கப்சிப் மோடு"க்கு போய்விட்டது திமுக.. அதுமட்டுமல்ல, தீவிர ஆர்எஸ்எஸ்காரரான வெங்கையாடு நாயுடுவை வரவழைத்து, தீவிர ஆர்எஸ்எஸ் எதிர்ப்பாளரான கருணாநிதியின் சிலையை திறக்க வைத்தது, முதல் பட்டினப்பிரவேச விவகாரத்தில் பின்வாங்கியது வரை நேரடியாகவே பார்த்து நொந்து போய் விட்டதாம் கம்யூனிஸ்ட் கட்சிகள்..

திருமாவளவன்
இதே நெருடல், திருமாவளவனுக்கும், கி.வீரமணிக்கும் இல்லாமல் இருக்காது என்றாலும், "அரசியல் வேறு, ஆட்சி வேறு" என்ற விளக்கங்களை தந்து வருகிறார்கள்.. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகளோ ஒருபடி மேலேபோய், அதிமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. "பொன்னையன் பேசியது சரியே.. இப்போதைக்கு பாஜகவுடனான உங்கள் எதிர்ப்பில் உறுதியாக இருங்க.. இப்படியே இருந்தால், அதாவது பாஜகவை தவிர்த்துவிட்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்தால், அது மிகப்பெரிய வலிமை மிக்க கூட்டணியாக இருக்கும்.. பாஜக அல்லாத அணிக்கு தயாராவோம்" என்று சொன்னதாக தெரிகிறது..

ரியாக்ஷன்
அதற்கு இதற்கு என்ன ரியாக்ட் செய்தது என்று தெரியாவிட்டாலும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க, கடந்த முறை சட்டசபை தேர்தலின்போதே, கம்யூனிஸ்ட் கட்சி முயன்றது.. சில பேச்சுவார்த்தைகளும் மறைமுகமாக அப்போது நடந்ததாக தகவல்கள் கசிந்தன.. பாஜக பக்கம், திமுக ஒருவேளை கூட்டணி வைத்தாலோ, அல்லது பெரிதளவிலான எதிர்ப்புகளை காட்டாவிட்டாலோ, நிச்சயம் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த முறை கூட்டணியை மாற்றலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

தாமரை இலை
அதேபோலதான் பாமகவும்.. இத்தனை வருட காலமும், பாஜகவுடன் தன்னுடைய ஆதரவை, நெருக்கத்தை பாமக எங்கேயுமே பதிவு செய்தது இல்லை.. ஒரே கூட்டணியில் இருந்தாலும், தாமரை இலையில் நீர்போலதான் உறவு நீடித்தது.. இப்போது கடந்த சில தினங்களாகவே, பாஜகவை வெளிப்படையாக விமர்சித்து வருகிறார் தலைவர் அன்புமணி ராமதாஸ்.

டாக்டர் ராமதாஸ்
பாஜக பக்கம் பாமக இளைஞர்கள் போய்விடாமல் பார்த்து கொள்ளுங்கள் என்று தன்னுடைய நிர்வலாகிகளுக்கு உத்தரவு போடுகிறார் டாக்டர் ஐயா.. இதுபோக, தான் தலைவராக பதவியேற்றதை யடத்து எடப்பாடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் அன்புமணி.. அப்போது சில விஷயங்களை எடப்பாடியிடம் மனம்விட்டு பேசினாராம்.. அதில், பாஜக இல்லாத ஒரு அணியாய் திரளுவோம் என்ற கோரிக்கையையும் விடுத்ததாக கூறப்படுகிறது..

பாமக - திமுக
அதாவது, திமுக பக்கம் இருந்து ஒரு கட்சி வருகிறது என்றால், அதிமுகவில் இருந்து ஒரு கட்சியை வெளியேற்றும் பேச்சுக்கள்தான் ஆரம்பமாகி உள்ளன. இதனால், அதிமுக மீண்டும் பழைய பார்முக்கு வந்துவிடும் என்கிறார்கள்.. அதேசமயம், திமுக கூட்டணி பலவீனமடையுமா? அல்லது பாஜகவுடன் நெருக்கத்தை தொடருமானால், அது எந்த மாதிரியான விளைவுகள, அரசியல் களத்தில் ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications