பட்டென "அதை" சொல்லி மேட்டரை "ஆஃப்" செய்த தலைவர், நோ சான்ஸ்.. தகரும் பாஜக கணக்கு?.. கிளைமாக்ஸ் எப்போது
எடப்பாடி பழனிசாமியுடன் ஓபிஎஸ் விரைவில் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது
சென்னை: எடப்பாடி ஒரு பக்கம், ஓபிஎஸ் மறுபக்கம் பிரிந்து கிடக்க, இந்த தலைவர்கள் எப்போது ஒன்று சேர்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிமுகவில் ஏற்பட்டுள்ளது.. இப்படிப்பட்ட சூழலில் சீனியர் தலைவர் தந்த பதில், தொண்டர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்து வருகிறதாம்.
அதிமுக இப்போது ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி என்று இரண்டாக உடைந்திருக்கிறது. .. இதில் எடப்பாடி பழனிசாமி அணியில் ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தூக்கி எறியப்பட்டுவிட்டன.
அதற்கு பதிலாக பொதுச்செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் என்கிற பதவிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.. இதில் எடப்பாடி பழனிச்சாமி, தற்காலிக பொதுச் செயலாளர் என்று நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புது பொறுப்பு
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம் என்று பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கம் என்று ஓபிஎஸ் அறிவித்து பதிலடி தந்தார்.. இதன்மூலம் அவர் அடுத்தகட்ட நடவடிக்கைக்கும் தயாராகிவிட்டார் என்பதும் தெளிவாகி விட்டது... இரு தரப்பு மட்டும்தான் பிரிந்து உள்ளதா என்று பார்த்தால், 3வது ஒரு தரப்பும் உருவாகும் என்று தெரிகிறது.. காரணம், ஓபிஎஸ் - எடப்பாடி அணியை சாராதவர்களை ஒன்று திரட்டி, கூட்டம் நடத்த போவதாக, கேசி பழனிசாமி அறிவித்துள்ளார்..

சிவி சண்முகம்
அதேபோல, மெஜாரிட்டியுடன் வலுவாக உள்ள எடப்பாடி பழனிசாமி அணிக்குள்ளேயே, சில தலைவர்களிடம் இணக்கமான போக்கு காணப்படவில்லை என்றும் தெரிகிறது. இதற்கு ஒரு உதாரணம் சொல்லப்படுகிறது.. அந்த பொதுக்குழுக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று தொண்டர்களில் பெரும்பகுதியினர் கோஷம் எழுப்பியதால், மேடையில் இருந்த முக்கிய தலைவர்கள் இது குறித்து விவாதித்து வந்தனர்.. அப்போது கேபி முனுசாமி மற்றும் சிவி சண்முகம் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது..

முனுசாமி என்ன சொன்னார்?
ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை உடனடியாக கட்சியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று முனுசாமியிடம் கடுமையாக விவாதம் செய்தாராம் சிவி சண்முகம்.. இதனால் மேடையில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. அதற்கு பிறகுதான், அதிமுக கொள்கை, கோட்பாடுகளுக்கு விரோதமாக செயல்பட்டதால், கழக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர், பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் ஆகியோரை அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம்.

கேபி முனுசாமி
இப்படி நாளுக்கு நாள் அதிமுகவில் ஒவ்வொரு பரபரப்பும் கிளம்பி வரும்நிலையில், தனியார் டிவி ஒன்று கேபி முனுசாமியிடம் இன்று ஒரு கேள்வி எழுப்பி உள்ளது.. அதில், தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு, மீண்டும் அதிமுகவில் இணைவதாக ஓபிஎஸ் சொன்னால், அவரை மறுபடியும் சேர்த்து கொள்வீர்களா? என்று கேட்கப்பட்டது.. இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத முனுசாமி, உடனடியாக பதில் அளித்தார்..

சீனியர்கள் பிடிவாதம்
"யாருமே எதிர்பார்க்காத, நாங்கள் கோவிலாக மதித்திருக்ககூடிய அந்த தலைமைக்கழகத்தை, தலைமையேற்று, சின்னாபின்னப்படுத்தி ஏதோ மூன்றாந்தர மனிதர் செய்யக்கூடிய செயலை இவர் செய்துவிட்டு போயுள்ளார்.. அவரை எந்த வகையில் ஏற்றுக் கொள்ள முடியும்? எந்த வகையில் தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள்? எந்த வகையில் தலைவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்? எனவே, அந்த பேச்சை நாம் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை" என்று திட்டவட்டமாகவும், கறாராகவும் தெரிவித்துள்ளார்..
Recommended Video

சீனியர்கள்
பாஜக மேலிடம் இவர்களை ஒன்றுசேர்க்க விரைவில் நடவடிக்கை எடுக்க போவதாக தகவல்கள் பரபரத்து வருகிறது.. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல் பரபரப்பு முடிந்ததுமே, அதிமுக விவகாரம் குறித்து சுமூக முடிவு எட்டப்பட மேலிட தலைவர்கள் முயற்சி மேற்கொள்ளலாம் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.. இப்படிப்பட்ட நிலையில், அதிமுக சீனியர்கள் இவ்வளவு பிடிவாதமாக இருப்பது தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை தந்து வருகிறதாம்..!
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications