சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சைவம், வைணவம் விவகாரம்.. "திருமாவளவனின் கருத்து பிற்போக்கானது" இயக்குநர் பேரரசு சாடல்!

Google Oneindia Tamil News

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருவாவளவனின் கருத்து பிற்போக்காக மாறிவிட்டதாக இயக்குநர் பேரரசு விமர்சித்துள்ளார்.

அண்மையில் ராஜராஜ சோழன் சர்ச்சை எழுந்த போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்து சமய அறநிலையத் துறையை சைவம், வைணவம் என்று இரண்டாக பிரிக்க வேண்டும்.

இவ்விரு சமயங்களையும் இந்து சமயம் என்று ஆக்கியதன் மூலம் அவற்றின் அடிப்படைக் கோட்பாடுகள் நீர்த்துப்போகின்றன. அதாவது, சிவனியம், மாலியம் ஆகியவற்றை வைதிக மத கோட்பாடான சனாதனம் விழுங்கிவிட்டு மேலாதிக்கம் செய்கிறது என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தப் பேச்சு தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. திருமாவளவனின் கருத்துக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜக உறுப்பினரும், இயக்குநருமான பேரரசு திருமாவளவனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

பவுத்தம் தழுவிய ராஜேந்தி பாலுக்கு பாராட்டு.. டெல்லியில் ஜாதி ஒழிப்பு பேரணியில் பங்கேற்ற திருமாவளவன்பவுத்தம் தழுவிய ராஜேந்தி பாலுக்கு பாராட்டு.. டெல்லியில் ஜாதி ஒழிப்பு பேரணியில் பங்கேற்ற திருமாவளவன்

 இயக்குநர் பேரரசு

இயக்குநர் பேரரசு

இதுகுறித்து பாஜக உறுப்பினரான இயக்குநர் பேரரசு செய்தியாளர்களிடம் கூறுகையில், திருமாவளவன் சொல்வதுபோல இந்து மதத்தை சைவம், வைணவம் என்று பிரித்துவிட்டு, தமிழகத்தை சேர, சோழ, பாண்டிய நாடுகள் என்று பிரித்து விடுங்கள். மீண்டும் தெரு பெயர்களோடு சாதிப் பெயரையும் சேர்த்து விடுங்கள். சைவ, வைணவ காலத்தில் கிறிஸ்தவம், இஸ்லாம் இல்லை.

 சாதி ஒழிய வேண்டும்

சாதி ஒழிய வேண்டும்

அந்த மதங்களை இந்தியாவில் இருந்து அகற்றிவிடுங்கள். முக்கியமாக அப்போது திராவிடம் என்ற வார்த்தையே தமிழர்களிடம் இல்லை. அதனால் முதலில் அந்த வார்த்தையை எங்கும் இல்லாமல் செய்து விடுங்கள். இந்தியாவையும் பாகிஸ்தானையும் இணைத்து விடுங்கள். வைணவம், சைவம் என்ற விஷயங்களை மக்களே மறந்து, இந்து என்ற ஒற்றுமைக்குள் வந்துவிட்டார்கள். மக்களிடையே சாதி ஒழிய வேண்டும்.

திருமாவளவனுக்கு கேள்வி

திருமாவளவனுக்கு கேள்வி

சமூக நீதி வேண்டும் என்று முற்போக்காக பேசும் திருமாவளவனின் சிந்தனை அதைவிட பிற்போக்காக மாறிவிட்டது. திருமாவளவனிடம் சுற்றி வளைத்து பேச விரும்பவில்லை நேரடியாகவே கேட்கிறேன். நீங்கள் இந்துவா ? இல்லை என்றால் கிறிஸ்தவரா ? இல்லை, எனக்கு எந்த மதமும் இல்லை. நான் நாத்திகர் என்றால் அதையும் வெளிப்படையாக சொல்லுங்கள்.

 இனி பொறுக்க மாட்டோம்

இனி பொறுக்க மாட்டோம்

பிறகு இந்து மதத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வதும், கேலி கிண்டல் செய்வதும் இருக்கட்டும். ஆ.ராசா, சீமான் ஆகியோரிடமும் இதையே கேட்கிறேன். நீங்கள் என்ன மதம் என்று தெரியாமல் இந்து மதத்தை இழிவுப்படுத்தக் கூடாது. இதுவரை பொறுத்துக் கொண்டோம். இனி பொறுக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.

English summary
Director Perarasu criticized the opinion of Thiruvavalavan in Department of Hindu Religious Charities. He Question Thirumavalavan that, Are you a Hindu or Christian.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X