செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நடக்கும் நேரு ஸ்டேடியத்தில் துப்பாக்கியால் சுட்டு ஆயுதப்படை காவலர் தற்கொலை
சென்னை : செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு மைதானத்தில் கடந்த 28ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருகை புரிந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

தொடக்க விழாவைப் போலவே, செஸ் ஒலிம்பியாட் நிறைவு நிகழ்ச்சியும் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. நிறைவு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேரு உள் விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் செந்தில்குமார் என்பவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த காவலரின் உடலை மீட்ட போலீசார், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாக ஆயுதப்படை காவலர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. தற்கொலைக்கு முழுமையான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications