Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

21 வயதில் ரூ. 3,600 கோடிக்கு அதிபதி! டாடா, ஸ்விகியை பின்னுக்குத் தள்ளி கைவல்யா! யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாடா, பிளிங்கிட், ஸ்விகி இன்ஸ்டாமார்ட் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி 21 வயதில் பில்லினியர்கள் பட்டியலில் இந்திய இளைஞர் ஒருவர் இடம்பிடித்திருக்கிறார். 2020 ஆண்டு 4ஆவது இடத்திலிருந்த அதானியின் குடும்பம் ரூ.11.6 லட்சம் கோடி சொத்துக்களுடன் முதல் இடத்தில் முன்னேறி இருக்கிறது.

இந்திய இளைஞர்கள் பலருக்கும் இளம் வயதிலேயே டாடாவை போல மிகப்பெரிய பணக்காரராக வேண்டும் இருக்கிறது. ஆனால், அந்தக் கனவை மில்லியனில் ஒருவர்தான் எட்டிப் பிடிக்கிறார். ஒருவர் வணிக சந்தையில் போட்டுப் போட்டு வளர்ந்துவருவது என்பது ரஜினி படங்களில் வரும் பாடல் காட்சியைப் போன்றது அல்ல. அதற்குப் பின்னால் அசாத்தியமான திறமையும் ஐடியாவும் ஒளிந்துள்ளது. பணம் என்பதுகூட இன்றைக்கு முக்கியமல்ல. தரமான ஒரு ஐடியா இருந்தால், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை நம்பி கோடிகளில் பணத்தைக் கொட்டப் பல தொழிலதிபர்கள் காத்துக் கொண்டு வரிசையில் நிற்கிறார்கள் என்பதே நிஜம்.

swiggy zepto

டாடா, பிளிங்கிட், ஸ்விகி இன்ஸ்டாமார்ட் போன்ற நிறுவனங்களுக்கே சவால் விட்டு மிகப்பெரிய கோடீஸ்வரராக 21 வயதில் வலம் வருகிறார் ஒரு இந்திய இளைஞர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இவர் 19 வயதில் IIFL Wealth-Hurun India பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்தார். அன்று முதல் இந்த இடத்தை விடாமல் தக்கவைத்து வருகிறார். யார் அவர்? என்ன தொழில் நடத்துகிறார். அந்த இளம் கோடீஸ்வரரின் பெயர் கைவல்யா வோஹ்ரா. டாடா, பிளிங்கிட் போன்ற பெரிய நிறுவனங்கள் போட்டிப் போடும் வணிக சந்தையில் இவர் உருவாக்கிய நிறுவனம்தான் Zepto.

இந்தியாவில் மளிகை சாமான்களை வீட்டுக்கே சென்று டெலிவரி செய்யும் புதிய தொழில் சில ஆண்டுகளுக்கு முன்புதான் வந்தது. ஆனால், இன்று அது நம் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகிவிட்டது. பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், ரத்தன் டாடாவின் நிதியுதவியுடன் செயல்படும் பிபி நவ் போன்ற சேவைகளைப் பெறாமல் பல குடும்பங்களால் ஒருநாளை கூட கழிக்க முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது.

இந்தியா முழுக்க இந்தத் தொழிலை நம்பி பல லட்சம் இளைஞர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். ஆண்ட்ராய் மொபைல்களின் வருகையால் அனைத்து சேவைகளும் ஆப் வடிவத்திற்குள் வந்துவிட்டன. இதனால் இந்திய மளிகை விநியோக சந்தை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ந்து வருகிறது. ஒரு வாடிக்கையாளர் ஆர்டர் செய்த ஒரு பொருளை 10 நிமிடங்களில் அவரது வீட்டுக்கே கொண்டு சென்று டெலிவரி செய்துவிடுகின்றனர்.

இதனால் வீட்டில் தன் பணிகளைக் கவனித்துக் கொண்டே தேவையான பொருளை ஒருவர் பெற்றுக் கொள்ள முடிகிறது. இதனால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது. அதற்கு ஏற்ப வர்த்தக சந்தையில் கடுமையான போட்டி நிலவுகிறது.

அத்தனை போட்டிகளையும் அடித்து தூள் தூளாக்கி விட்டு தனது Zepto நிறுவனத்தை முன்னேற்றி இருக்கிறார் அதன் நிறுவனர் கைவல்யா வோஹ்ரா. இவரது வளர்ச்சி பிளிங்கிட், ஸ்விகி இன்ஸ்டாமார்ட், பிபி நவ் நிறுவனங்களை மூச்சடைக்க வைத்துள்ளது. வளர்ந்த நிறுவனங்களில் விரலை விட்டு ஆட்டிய இந்த 21 வயது இளைஞர் யார்? அவர் எப்படி இந்தளவுக்கு உயர்ந்தார்? இது முக்கியமான கேள்வி இல்லையா? அதற்கு என்னதான் விடை?

சொல்லப் போனால் Zepto கைவல்யா வோஹ்ரா மட்டுமே தொடங்கவில்லை. ஆதித் பலிச்சா என்பவருடன் இணைந்துதான் இந்த கம்பெனியை தொடங்கினார் அவர். இப்படித்தான் ஆரம்பமானது ஜெப்டோவின் அற்புதமான கதை. 2024 ஆம் ஆண்டு Hurun India பணக்காரப் பட்டியலிலும் இவர் இடம்பெற்று இருக்கிறார். இவரது நிறுவனம் நிகர மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அதற்கு முன்பாக கைவல்யா வோஹ்ரா பற்றி பூர்வீக ஜாதகத்தை அறிந்து கொள்வது சிறப்பானதாக இருக்கும். இன்றைய வார்த்தையில் சொன்னால் கைவல்யா oரு 2கே கிட்ஸ். இவர் 2001 ஆம் ஆண்டு பிறந்தார். சொந்த ஊரான மும்பையில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்தார். இவரது உயர்கல்விக்கான தேடல் இவரை அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக வளாகத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கு அவர் தேர்வு செய்தது கணினி அறிவியல் துறைக்கான மேற்படிப்பு. அதில் தன்னை மூழ்கடித்தார். அப்போதே அவருக்கு நிறைய ஆஃபர்கள் வந்தன. அவ்வளவும் மிகப்பெரிய வாய்ப்புகள்

இறுதியில் கைவல்யா ஸ்டான்போர்டை விட்டு வெளியேறி அடுத்த நொடி வணிக உலகில் கால் பதிக்கும் ஒரு தைரியமான முடிவை எடுத்தார். அதுவும் 19 வயதில். கைவல்யா, அவரது நண்பரான ஆதித் பாலிச்சாவுடன் இணைந்து, Zepto என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்திற்கு புதிய உயிர் கொடுத்தார். இன்று அவரது நிகர சொத்து மதிப்பு ரூ. 3,600 கோடி.

இந்த ஆண்டு வெளியாகி இருக்கும் Hurun India பில்லினியர் பட்டியலில் 300 பேர் இடம்பெற்றுள்ளனர். இதற்கு முன்பாக இவ்வளவு நபர்கள் பட்டியலில் இடம்பெற்றதே இல்லை. இதுவே முதல் முறை. இந்தப் பட்டியலில் கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி ரூ.11.6 லட்சம் கோடி சொத்துக்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். 2020 ஆம் ஆண்டு இந்தப் பட்டியலில் அதானி நான்காவது இடத்திலிருந்தார். அதானியின் சொத்து கடந்த ஓராண்டில் 95% சதவீதம் உயர்ந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+