சென்னையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி
சென்னை: சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றதில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்,.
சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு இருந்த தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த காவலர் வேலுச்சாமி (27), சனிக்கிழமை இரவு 8 மணி அளவில் திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார்.

குண்டு துளைத்ததில் காவலர் வேலுச்சாமியின் கீழ்தாடை எலும்புகள் நொறுங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
எதற்காக அவர் இப்படி செய்தார் இதற்கான காரணம் என்ன என்று காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
காவல்துறையில் அடிக்கடி தற்கொலை முயற்சிகள் நடப்பது தொடர்கதையாக உள்ளது.மன உளைச்சல் உள்பட பல்வேறு காரணங்களால் இத்தகைய சம்பவங்கள் நடக்கிறது.
அண்மையில் வேலூர் ஆயுதப்படையில் பணியாறும் அனிதா என்பவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அனிதாவின் கணவர் குபேந்திரன் என்பதும் வேலூர் அரிசி மண்டியில் சுமை தூக்கும் தொழிலாளியாக இருப்பதும் தெரியவந்தது. மேலும் இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளை கவனித்துக்கொள்ள பணி மாற்றி தரும்படி உயர் அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். ஆனால் அதிகாரிகள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
இதேபோல் கடந்த ஜூன் மாதம் ஒரு பெண் காவலர் தற்கொலைக்கு முயன்றார். செங்கல்பட்டு திருப்போரூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் ஆவர். உயர் அதிகாரி திட்டியதால் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்றார். நல்ல வேளையாக காப்பாற்றிவிட்டார்கள். தற்கொலை முயற்சிகள் மட்டுமின்றி தற்கொலைகளும் காவல்துறையில் அடிக்கடி நடக்கிறது. அடிக்கடி உளவியல் ரீதியான ஆலோசனைகளை போலீசாருக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
-
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications