விலை குறைவு என்பதற்காக ஆவின் பால் பவுடரை வாங்க முடியாது: அண்ணாமலை புகாருக்கு மா.சுப்ரமணியன் விளக்கம்
வின் பால் பவுடர் ஊட்டச்சத்து மாவு அல்ல என்றும் அது காபி, டீயில் கலந்து குடிக்கக் கூடியது என்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை: கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டக திட்டத்தில் முறைகேடு என்பது ஆதராமற்றது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஆவின்பால் பவுடர் ஊட்டச்சத்து மாவு அல்ல என்றும் உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த ஊட்டச்சத்து உணவைத்தான் கர்ப்பிணிகளுக்கு தருவதாகவும் கூறியுள்ளார் மா.சுப்ரமணியன்.
கர்ப்பிணி பெண்களுக்கான 8 ஊட்டச்சத்து பொருட்களுடன் வழங்கப்படும் தொகுப்பில் ஊழல் நடந்திருப்பதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறினார். கர்ப்பிணி பெண்களுக்கு அம்மா நியூட்ரிசியன் கிட் அரசு கொடுத்து வருகிறது.
திமுக ஆட்சியில் அம்மா என்ற வார்த்தையை நீக்கிவிட்டனர். இந்த நியூட்ரிசியன் கிட்டில் ஒரு ஹெல்த் மிக்ஸ், ஆவின் நெய், ஒரு துண்டு, அல்பெண்டசோல் மாத்திரை, லைன் டேட்ஸ், ஒரு கப், அயர்ன் டானிக் ஆகியவை இருக்கும். மொத்தம் 23,88000 கிட் ஆண்டுக்கு வாங்குகின்றனர். இதில் முக்கியமானது மதர்ஸ் ஹெல்த் மிக்ஸ்.

அண்ணாமலை குற்றச்சாட்டு
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொதுச் சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறையில் நியூட்ரிசியன் கிட் திட்டம் பற்றி ஆலோசனை செய்துகொண்டிருக்கின்றனர். இந்த கிட்டில் என்ன பொருட்களை வைக்கலாம், எந்த பொருளை நீக்கலாம் என ஆலோசனை நடத்தினர். மாநில திட்டக்குழு துணை தலைவர் தலைமையில், இந்த துறையின் டெக்னிக்கல் கமிட்டி தனியார் கம்பெனியின் ப்ரோ பில்.எல் ஹெல்த் மிக்ஸ் வேண்டாம். அதற்கு பதிலாக ஆவின் ஹெல்த் மிக்ஸை பயன்படுத்த வேண்டும் என்று கூறியது.

ஆவின் ஹெல்த் மிக்ஸ்
மார்ச் 31, 2022 நடந்த ஆலோசனையில் ஆவின் ஹெல்த் மிக்ஸை கொண்டு வந்து விலையைக் குறைப்பதற்குக் கூட பரிந்துரை செய்தனர். பின்னர் ஏப்ரல் மாதத்தில் அரசின் நிர்ப்பந்தத்தின் காரணமாக, அந்த முடிவு கைவிடப்பட்டது. ஏனென்றால் இந்த ப்ரோ பில்.எல்.மிக்ஸ் என்பது ஆவின் நிறுவனம் சப்ளை செய்வதை விட 60 சதவிகிதம் விலை அதிகம். அதோடு இந்த கிட்டில் உள்ள 8 பொருட்களையும் சப்ளை செய்வது அனிதா டெக்ஸ்காட் நிறுவனம் வழங்குகிறது. இந்த அனிதா டெக்ஸ்காட் நிறுவனம் வேறு எதுவும் கிடையாது. பொங்கல் தொகுப்பில் கொடுத்த எல்லா பொருட்களையும் கேந்திரிய பந்தார் மூலமாக சப்ளை செய்யப்பட்டது. கேந்திரிய பந்தார் நிறுவனத்துக்கு அதிக பொருட்களை விநியோகம் செய்தது அனிதா டெக்ஸ்காட் தான். இந்த நிறுவனம் தான் நியூட்ரிசியன் கிட்டையும் சப்ளை செய்கிறது.

மா.சுப்ரமணியன் பேட்டி
இந்நிறுவனம் ஒரு தனியார் கம்பெனியுடன் ஒப்பந்தம் போட்டு ஹெல்த் மிக்ஸை 60 சதவிகிதம் அதிகமான விலைக்கு கொடுத்திருக்கின்றனர் இதற்கு முக்கிய காரணம் என்று கூறினார். ஹெல்த் மிக்ஸ் மற்றும் இரும்பு சத்து டானிக் வாங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாக அண்ணாமலை கூறிய நிலையில், இதற்கு பதிலளித்துள்ள துறை சார்ந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், டெண்டர் விடுவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன. அதற்குள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக எப்படிக் கூறுகிறார். டெண்டர் விட்டு யாருக்காவது கொடுத்திருந்தால் இழப்பு ஏற்பட்டதா இல்லையா என்று சொல்லலாம். அதற்கு முன்னதாகவே சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது என்றார்.

ஊட்டச்சத்து உணவு
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டக திட்டத்தில் முறைகேடு என்பது ஆதராமற்றது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஆவின்பால் பவுடர் ஊட்டச்சத்து மாவு அல்ல என்றும் உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த ஊட்டச்சத்து உணவைத்தான் கர்ப்பிணிகளுக்கு தருவதாகவும் தெரிவித்தார்.

மதர் ஹெல்த்மிக்ஸ்
கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஹெல்த்மிக்ஸ் கிட் வழங்கும் திட்டம் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த ஆட்சியில் கொரோனா காலத்தில் ஹெல்த்மிக்ஸ் கிட் வழங்கப்படாததால் அதற்கான நிதி மீண்டும் அரசிடம் அளிக்கப்பட்டது. மதர் ஹெல்த்மிக்ஸ் கர்ப்பிணிகளுக்கு உதவுமா என்பது கேள்வியாக இருக்கிறது. குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

அரசுக்கு பணம் மிச்சம்
மதர் ஹெல்த்மிக்ஸ் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி 32 பொருட்கள் அடங்கியது தான் மதர்ஸ் ஹெல்த்மிக்ஸ். சந்தையில் மதர் ஹெல்த்மிக்ஸ் டப்பா ஒன்றின் விலை ரூ.588 ஆக உள்ளது. டெண்டர் மூலம் மருத்துவத்துறை கொள்முதல் செய்ய உள்ள விலை ரூ.460 ஆகும். சந்தை விலையைவிட அதிகம் கொடுத்து வாங்கினால்தான் தவறு என கூற முடியும். ஒவ்வொரு டப்பாவுக்கும் ரூ.128 குறைவாக வாங்கியுள்ளதால் அரசுக்கு பணம் மிச்சமாகி உள்ளது.
Recommended Video

ஆவின் பால் ஹெல்த் மிக்ஸ் அல்ல
ஆவினில் உள்ள டயரி ஒயிட்னர் என்னும் பால் பவுடர் ஊட்டச்சத்துக்கானது அல்ல. டி, காபியில் கலந்து சாப்பிடத்தான் பயன்படும் என்றார். விலை குறைவு என்பதற்காக ஆவினில் வாங்க முடியாது என்றும் ஆவினில் வாங்க வேண்டியதைத்தான் வாங்க முடியும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications