சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு.. ஆனாலும் வங்கிகள் இயங்கும்.. பணி நேரம் என்ன தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 வரை வங்கிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. தினமும் 30,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளும், 400-க்கும் மேற்பட்ட உயிரிழப்புளும் பதிவாகி வருகின்றன.

ஊரடங்கு எதிரொலி - பறக்கும் விமானத்தில் திருமணம் செய்துகொண்ட மதுரை ஜோடி- வைரல் வீடியோ ஊரடங்கு எதிரொலி - பறக்கும் விமானத்தில் திருமணம் செய்துகொண்ட மதுரை ஜோடி- வைரல் வீடியோ

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை அடுத்தடுத்து மேற்கொண்டு வருகிறது.

மதிக்காத மக்கள்

மதிக்காத மக்கள்

கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் மே 10 முதல் 24 வரை தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது. ஆனால் மக்கள் சிலர் தேவையில்லாமல் வெளியே சுற்றி ஊரடங்கை மதிக்காமல் இருந்து வந்தனர்.

முழு ஊரடங்கு

முழு ஊரடங்கு

இதனை தொடர்ந்து வைரஸின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் நாளை முதல் 31-ம் தேதி வரை தமிழகத்தில் தளர்வில்லாத முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் இயங்கும்

வங்கிகள் இயங்கும்

பால் பூத், மருந்தகம் தவிர காய்கறி, மளிகை கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . அலுவலங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் வங்கிகள் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் கொண்டு இயங்கலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

2 மணி வரை இயங்கும்

2 மணி வரை இயங்கும்

தமிழக அரசின் அனுமதியை தொடந்து தமிழகத்தில் நாளை முதல் வங்கிகள் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 வரை செயல்படும் என்று மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது. அரசு உத்தரவின்படி மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களே பணியில் இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. வங்கி ஊழியர்களும், வங்கிக்கு வருபவர்களும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

English summary
It has been announced that banks will be operational in Tamil Nadu from 10.00 am to 2.00 pm from tomorrow
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X