போச்சா..’பப்ஜி’ ரசிகர்கள் ஷாக்! ’பேட்டில் கிரவுண்ட்ஸ் இந்தியா’ கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம்!
சென்னை : பப்ஜி மொபைல் கேம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட நிலையில் அதன் புதிய வடிவமாக அறிமுகப்படுத்தப்பட்ட பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா கேமும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீன ராணுவத்தினர் இடையே கடும் மோதல் ஏற்பட்ட நிலையில் இந்திய ராணுவத்தினர் சுமார் 20 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
மேலும் இந்திய ராணுவத்தினர் கொடுத்த பதிலடி தாக்குதலில் சீன ராணுவத்தினர் 35 பேர் இறந்ததாகவும் இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்த நிலையில் பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு எல்லை பகுதியில் அமைதி ஏற்பட்டது.

பப்ஜி தடை
இந்த நிலையில் சீனாவுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்தியா முழுவதும் அதிகரித்தது. இதனை அடுத்து முதற்கட்டமாக 50 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. டிக் டாக், யூசி ப்ரவுசர் உள்ளிட்ட பல முன்னணி செயலிகள் இதில் தடையாகி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டன. மேலும் இந்தியர்களில் பாதுகாப்புக்காக சீன செயலிகள் தடை விதிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.

சீன செயலிகளுக்கு தடை
இதனை அடுத்து இந்தியாவில் சில செயல்களுக்கு சீனா தடை விதித்தது. தொடர்ந்து எல்லையில் மோதல் போக்கு நீடித்த நிலையில் படைகள் குவிக்கப்பட்டதால் பதற்றம் அதிகரித்தது. தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் சீன செயல்களான பப்ஜி கேம், கேம் ஆப் சுல்தான், கேரம் ஃபிரண்ட்ஸ் , லுடோ ஆள் ஸ்டார், பியூட்டி கேமரா பிளஸ், ரூல்ஸ் ஆப் சர்வைவல் உள்ளிட்ட 118 சீன செயல்களுக்கு மத்திய தொழில்நுட்ப துறை தடை விதித்தது.

பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா
இதன் காரணமாக பப்ஜி விளையாடி வந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்த நிலையில் அதிக பேர் பயன்படுத்திய பப்ஜி கேமுக்கு இணையாக வேறு மொபைல் கேம் அறிமுகப்படுத்தப்படுமா என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் தென்கொரியாவை சேர்ந்த கிராப்டன் என்ற வீடியோ கேம் நிறுவனம் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா என்ற வீடியோ கேமை வடிவமைத்தது ஜூலை 2021 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கேம் பப்ஜியின் ஜெராக்ஸ் போலவே இருந்தது.

ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கம்
இதையடுத்து பலரும் ஆர்வத்துடன் அந்த கேமை டவுன்லோட் செய்து விளையாடி வரும் நிலையில் தற்போது பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து இந்த கேம் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என இதுவரை தகவல் வெளியாகாத நிலையில் மத்திய அரசின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. கிட்டதட்ட 100 மில்லியன் டவுன்லோடுகளை இந்த கேம் கடந்துள்ள நிலையில், இது தொடர்பாக கூகுள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கிராப்ட்அன் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications