எல்லா வாக்குறுதியையும் போல இதையும் வசதியா மறந்துட்டீங்க.. திமுக மீது அண்ணாமலை அட்டாக்!
சென்னை : தேர்தல் அறிக்கையில் தெரிவித்த பல உறுதி மொழிகளை கண்டுகொள்ளாமல் விட்டது போல, இதையும் வசதியாக மறந்து விட்டது திமுக என விமர்சித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
உறுதியான முடிவுகளால் உன்னதமான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மத்திய அரசுக்கு நன்றி என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பு மாநில அரசை சார்ந்தது என்றும், திட்டங்களுக்கான முயற்சிகளை மாநில அரசு விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை
இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பாதுகாப்பு வழித்தடம் திட்டத்திற்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை, தமிழக அரசு உடனடியாகச் செய்ய வேண்டும். இந்தத் திட்டம் தமிழகத்தில் சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருக்கும். இதன் மூலம் கோவை, சேலம், கரூர் உள்ளிட்ட பல நகரங்களில் வளர்ச்சியும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளும் உருவாகும்.

அன்று எதிர்த்தது திமுக
மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் எந்த திட்டம் என்றாலும் அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான முழு பொறுப்பும் மாநில அரசை சார்ந்தது. ஆகவே இந்தத் திட்டத்திற்கான முயற்சிகளை மாநில அரசு விரைந்து முன்னெடுக்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சி காலத்திலே, திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது சென்னை சேலம் எட்டு வழித் தடம் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இது பாதிக்கிறது என்று கூறி விவசாயிகளை தூண்டிவிட்டு போராட்டமும் நடத்தியது. திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் இந்த திட்டத்தை கொண்டுவர மாட்டோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

வசதியாக மறந்துவிட்டது திமுக
ஆனால், தற்போது ஆளும் கட்சியாக வந்த பிறகு, திமுக தன் நிலைப்பாட்டினை மாற்றிக் கொண்டுவிட்டது. அவர்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்த பல உறுதி மொழிகளை கண்டுகொள்ளாமல் விட்டது போல, இதையும் வசதியாக மறந்து விட்டது. தமிழக அமைச்சர் எ.வ.வேலு "பச்சைத் துண்டு போட்ட எல்லோரும் விவசாயிகள் என்று எடுத்துக்கொள்ள முடியாது" என்று கூறியிருக்கிறார். ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவரே, இப்படி பேசுவது விவசாயிகளை அவமதிக்கும் செயல். தமிழக முதல்வர் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு அதற்கான காரணத்தை மக்களிடம் விளக்க வேண்டும்.

குழு அமைக்க வேண்டும்
போக்குவரத்து மேம்பாடு அடைய, நாடு முழுவதும் மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சிறிய நகரங்களில் கூட, உடான் திட்டத்தில், சிறிய விமான நிலையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசு உதவிகள் செய்யத் தயாராக இருக்கும்போது, பரந்தூரில் விமானம் நிலையம் அமைக்க மக்களின் கோரிக்கைகளை கேட்டு, அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்வு காண்பதற்காக அதிகாரம் அளிக்கப்பட்ட குழு ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும். அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் தங்க நாற்கரச்சாலை திட்டத்தில், தமிழகத்தையும் இணைக்கும் போது, எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல், திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது போல, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாஜக ஆளும் மாநிலங்களில்
இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் விஷயத்தில், தமிழக அரசின் திட்டமிடும் குழுவில் வெளிப்படைத்தன்மை இல்லாததுதான் பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அரசு மேற்கொண்ட பல பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பீடுநடை போடுகிறது. நம் நாட்டில் உள்ள மாநிலங்களின் தனி வருவாய் கடந்த காலாண்டில் 43 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களில், 11 மாநிலங்களில் சராசரி வருவாய் 43% அதிகரித்துள்ளது.இந்த 11 மாநிலங்களில் ஆறு மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

மோடிக்கு நன்றி
கொள்ளைநோய் கொரானா பாதிப்பிலிருந்து இன்னும் உலக நாடுகள் மீளமுடியாமல் போராடிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், இந்தியாவின் பல மாநிலங்களில், பொருளாதார வளர்ச்சி காணப்படுவது மத்திய அரசின் உறுதியான பொருளாதார கொள்கை முடிவுகளுக்கு கிடைத்த வெற்றியாகும். இதன் தாக்கத்தினால் தமிழகத்திலும் கேரளத்திலும் கூட வருவாய் அதிகரித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தில் எந்த விதமான எந்தவிதமான சமரசத்திற்கும் இடம் தராத வகையிலே மத்திய அரசு எடுக்கும் உறுதியான முடிவுகள் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செலுத்துகிறது. இதற்காக பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications