டெல்லிக்கு போக ஆசைப்படுகிறாரா? அண்ணாமலை போடும் திட்டம் என்ன? விலகலுக்கு இதுதான் காரணமா
சென்னை: பாஜக தேர்தல் பணி பொறுப்புகளில் இருந்து விலகுவதாக கோவையில் அண்ணாமலை நேற்று அறிவித்தார். அண்ணாமலையின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியிருக்கும் நிலையில், அவரது இந்த முடிவுக்கு தந்தையின் உடல் நலன் மட்டும்தான் காரணமா? அல்லது அதிருப்தியில் இந்த முடிவை எடுத்தாரா என்ற பேச்சு அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் அவரது திட்டத்திற்கு வேறு சில காரணங்களும் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் அடிபட தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் - மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே பாக்கியிருக்கும் நிலையில் அரசியல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது.

அண்ணாமலை பதவி விலகல்
அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை, வேட்பாளர் தேர்வு, கூட்டணி பேச்சுகள் என தீவிரம் காட்டத்தொடங்கியுள்ளன. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வரும் பாஜகவும் கட்சி பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில், 234 தொகுதிகளிலும் தேர்தல் பணியாற்ற பாஜக மூத்த நிர்வாகிகள் 72 பேர் நியமிக்கப்பட்டனர்.
இதில் பாஜக முன்னாள் தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை கோவை சிங்காநல்லூர், மதுரை தெற்கு, காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், விருகம்பாக்கம், பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் தந்தையின் உடல்நிலை காரணமாக தேர்தல் பொறுப்பாளர் பணிகளை தன்னால் கவனிக்க இயலாத சூழ்நிலையில் உள்ளதாக அண்ணாமலை கோவையில் நேற்று திடீரென அறிவித்துள்ளார்.
மீண்டும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி
அண்ணாமலையின் இந்த அறிவிப்பு பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜகவில் நட்சத்திர முகமாக கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக விளங்கி வரும் அண்ணாமலை திடீரென இந்த முடிவை எடுத்து இருப்பதற்கு தந்தையின் உடல் நலன் மட்டும்தான் காரணம் என்பதை ஏற்க முடியாது என்றும் அதற்கு வேறு சில காரணமும் இருக்கலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
அண்ணாமலையை பொறுத்தவரை கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பாக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியே வந்து பாஜகவை தனியாக போட்டியிட வைக்க முக்கிய காரணமாக இருந்தார். ஆனால், அண்ணாமலையின் இந்த முயற்சிக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து, சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக மீண்டும் அதிமுகவுடன் பாஜக மேலிடம் கூட்டணி அமைக்க விரும்பியது.
பெரிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை
இதற்கு முன்பாக அண்ணமாலை மாநில தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அண்ணாமலை மாநில தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டாலும் அவருக்கு தேசிய அளவில் மிக முக்கியமான பொறுப்பு வழங்கப்படும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இது அவரது ஆதரவாளர்களுக்கு அதிருப்தியை கொடுத்தது.
இந்த நிலையில்தான் தனிப்பட்ட காரணத்தினால் அண்ணாலை கட்சி வழங்கிய பொறுப்பாளர் பணிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனிப்பட்ட காரணம் என்று அண்ணா மலை சொன்னாலும் கூட, இந்த விலகலுக்கு பின்னால் வேறு திட்டமும் அண்ணாமலைக்கு இருக்கலாம் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்தாக உள்ளது.
கூடுதலாக 10 தொகுதிகள் மட்டுமே
அதிமுக கூட்டணியில் குறைந்தது 70 தொகுதிகளிலாவது பாஜக போட்டியிட வேண்டும் என்பது அண்ணாமலையின் விருப்பமாக இருந்துள்ளது. ஆனால் 25 டூ 30 தொகுதிக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. கடந்த 2021 தேர்தலில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிருந்த நிலையில், அதைவிட கூடுதலாக 10 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க முடியாது என எடப்பாடி கறார் காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் அதிமுகவுடனான கூட்டணியில் அதிருப்தி அடைந்த அண்ணாமலை தனது அதிருப்தியின் வெளிப்பாடாக இப்படி ஒரு முடிவை எடுத்தாரா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. பாஜக தலைவராக இருந்தாலும் அரசியல் களத்தில் தனக்கென ஆதரவு வட்டத்தையும் கொண்டுள்ள அண்ணமாலை தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பே பேச்சுகள் வலம் வந்தன.
எம்பி பதவிக்கு அடிபோடுகிறாரா?
அதேபோல, விரைவில் அசாம், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விரைவில் ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், எம்பி பதவிக்கு அண்ணமாலை அடிபோடுகிறாரா? என்ற கருத்தும் அரசியல் நோக்கர்களால் முன்வைக்கப்படுகிறது.
தமிழக பாஜகவில் நட்சத்திர முகமாக இருக்கும் அண்ணாமலையின் இந்த திடீர் விலகல் முடிவு பாஜகவிற்கு பின்னடைவு என்பதை மறுக்க முடியாது என பாஜகவினரே சொல்வதை பார்க்க முடிகிறது. இதன் காரணமாக அண்ணாமலையை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் திவீரமாக நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.
-
இந்தியில் தகவல்கள்.. தேர்தல் ஆணைய இணையதளத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு! கடும் எதிர்ப்பு -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
முதல் நாளே இப்படியா? விஜய் மீது 5 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! காவல்துறை அதிரடி -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியானது.. சின்னதுரைக்கு மீண்டும் வாய்ப்பு! -
வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்.. அன்புமணி அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து போட்டி! -
பொற்கொடிக்கு சப்போர்ட்டுக்கு போன பா.ரஞ்சித்! திருமாவளவனுக்கு என்ன சொன்னாருனு பாருங்க! -
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 நாள் முன்பு ஜாமீனில் வந்தவர் வேட்பாளர்.. விஜய் அறிவிப்பால் சலசலப்பு -
2 இட்லி சாப்பிடவும் டெல்லி அனுமதி வேண்டுமா? தேசிய கட்சிகளின் பரிதாபம்! அப்ப அடுத்த முதல்வர் இவர்தானா -
நடிகர் கார்த்திக் இதுக்குதான் வர்றாரா? போயஸ் கார்டனில் இருந்து அந்த "உத்தரவு".. அலறிய முக்கிய கட்சி -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications