ஈரோடு கிழக்கு.. குமுறும் பாஜக.. தலைமை தேர்தல் அதிகாரியிடம் பரபர புகார்.. பண மழை பொழிகிறதாம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுத்து தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என மாநில தேர்தல் அதிகாரியிடம் பாஜக புகார்
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப்பட்டுவாடா நடக்கிறது. இது தடுக்கப்பட வேண்டும் என கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பால் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி காலமானார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் 2ஆம்தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளர் அறிவிப்பதிலும் சின்னம் கிடைப்பதிலும் குழப்பம் நிலவுகிறது.

இரட்டை இலைக்கு உரிமை
இரட்டை இலைக்கு உரிமை கொண்டாடி எடப்பாடி பழனிசாமி பதிவு செய்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரும் வெள்ளிக்கிழமை வருகிறது. எனவே இந்த வேட்புமனு தாக்கல் தேதி முடிவதற்குள் இரட்டை இலைக்கு தீர்வு ஏற்பட்டுவிட்டால் உடனே வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என தெரிகிறது.

அதிமுகவுக்கு ஆதரவா
அது போல் அதிமுகவுக்கு ஆதரவா இல்லை தனித்து போட்டியா என்பது குறித்து இன்றைய தினம் பாஜக அறிவிக்கும். நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதன் களமிறங்குகிறார். மக்கள் நீதி மய்யம் கட்சி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு என அறிவித்துவிட்டது. இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன.

ஈரோடு கிழக்கு தொகுதி
இதனால் ஈரோடு கிழக்கு தொகுதிக்குள்பட்ட இடங்களில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். முறையான ஆவணங்கள் இன்றி பணம் எடுத்துச் சென்றால் அந்த பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தீவிர கண்காணிப்பு
இவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ஈரோடு வீரப்பம்பாளையம் பகுதியில் நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் பறக்கும் படை குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த முகமது தாபிக் என்பவர் தனது காரில் ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார். அவரை பிடித்து சோதனை நடத்தியதில் அவரிடம் கணக்கில் வராத பணம் ரூ 3 லட்சம் இருந்தது கண்டறிப்பட்டது.

மாரியம்மன் கோயில்
அது போல் ஈரோடு எல்லை மாரியம்மன் கோயில் பகுதி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவரிடம் இருந்து ஒரு லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த பணத்துடன் சேர்த்து மொத்தம் ரூ 4 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதியில் கணக்கில் வராத ரூ 6 லட்சம் பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது.

அமைச்சர் கே.என். நேரு
இந்த நிலையில் அமைச்சர் கே.என்.நேருவும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் பேசிக் கொண்ட வீடியோ வெளியான நிலையில் அதை திமுக தரப்பு மறுத்துள்ளது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும் என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் பாஜக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து பாஜக ராமலிங்கம் பேசுகையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும்.

முறையாக நடத்த வேண்டும்
மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். பணம் கொடுப்பதாக உறுதி கொடுத்த அமைச்சர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டு மக்களுக்காக உழைக்கு கட்சி பாஜக. எனவே பணநாயகத்தை விட்டு விடாமல் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். இவ்வாறு ராமலிங்கம் தெரிவித்தார். உடன் பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி, கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் இருந்தனர்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications