அமைச்சர் சேகர்பாபுவை போனில் அழைத்து பாராட்டும் பாஜக தலைவர்கள்.. ஏன் தெரியுமா? அவரே சொன்ன விஷயம்!
சென்னை : பாஜகவின் முக்கியத் தலைவர்கள் பலர் தன்னை போனில் அழைத்துப் பாராட்டியதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இப்போதே தமிழக அரசியல் களம் தகித்து வருகிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவைவிட பாஜக கடுமையாக ஆளுங்கட்சியான திமுகவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது.
பாஜக தலைவர்கள், திமுக அமைச்சர்களை கடுமையாக விமர்சித்துப் பேசி வரும் நிலையில், தன்னை பாஜக தலைவர்கள் பாராட்டியதாகத் தெரிவித்துள்ளார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.

பாஜக vs திமுக
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல், பாஜக, அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, அண்ணாமலை, மாநிலத் தலைவரான பிறகு நாள்தோறும் பாஜகவினர் திமுக அரசையும், அமைச்சர்களையும் விமர்சித்து, பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றனர். திமுக அமைச்சர்களும் அதற்கு எதிர்வினையாற்றி வருவதால், அரசியல் களத்தில் அனல் தகிக்கிறது.

அரசியல் அனல்
இந்து கோயில்கள் தொடர்பாகவும் அவ்வப்போது சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது பாஜக. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கைகளை எச்.ராஜா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் தொடர்ச்சியாக கடுமையாக விமர்சித்துப் பேசி வருகின்றனர். அவர்களுக்கு துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்து வருகிறார்.

பாஜகவினர் போனில் அழைத்து
இந்நிலையில் தான், பாஜகவின் முக்கியத் தலைவர்கள் தன்னை போனில் தொடர்பு கொண்டு தனது பணிகளைப் பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. திமுக அரசை கடுமையாக விமர்சித்து பாஜகவினர் பொது வெளியில் பேசி வரும் நிலையில், தன்னை போனில் அழைத்து பாராட்டியதாக அமைச்சர் தெரிவித்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

எப்போதுமே எதிர்மறை கருத்துகளை சொல்பவர்கள் கூட
சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "கந்த சஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்காகத் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஒரு லட்சம் சதுர அடிக்கு மேற்கூரை அமைத்துள்ளோம். ஃபேன், லைட், குடிநீர் மற்றும் மருத்துவ வசதி என அனைத்தும் மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது. எப்போதும் எதிர்மறை கருத்துகளைக் கூறும் பாஜக முக்கிய தலைவர்கள் கூட என்னை தொடர்பு கொண்டு திருச்செந்தூரில் சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தனர்." எனக் கூறியுள்ளார்.
-
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications