சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொய்யும் புரட்டும் பேசி..அப்போ 1200! எங்க அடுத்த டார்கெட் ‘5000’! அண்ணாமலை என்ன சொன்னார் தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை : தமிழகம் முழுவதும் 1200 இடங்களில் போராட்டம் நடைபெற்றது, தமிழகம் முழுவதும் அடுத்த கட்டமாக தமிழக அரசுக்கு எதிராக 5000 இடங்களிலும் போராட்டம் நடந்த வேண்டுமென்று முடிவு செய்து இருக்கிறோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு அதனை நாடு முழுவதும் பரப்பும் வகையில் 12 பைக் பந்தய வீரர்கள் 9 மாநிலங்களுக்கு பயணித்து தமிழகம் திரும்பியதை கொண்டாடும் வகையில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் பள்ளி அரங்கில் நடைபெற்றது.

இந்த பயணத்தில் 15 நாட்களில் 6000 கிலோ மீட்டர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து 10 லட்சம் மக்களுக்கு அரசியல் அமைப்பு சட்டத்தை எடுத்துக் கூறியதை கொண்டாடும் விழாவில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , புநீக தலைவர் ஏசி சண்முகம் , வேல்ஸ் ஐசரி கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

“புல் ஃபோர்ஸ்”.. காங்கிரஸின் 20 ஆண்டு பழைய “மாடல்”.. குஜராத்தில் பாஜக கையில் எடுத்த “அஸ்திரம்” “புல் ஃபோர்ஸ்”.. காங்கிரஸின் 20 ஆண்டு பழைய “மாடல்”.. குஜராத்தில் பாஜக கையில் எடுத்த “அஸ்திரம்”

அண்ணாமலை

அண்ணாமலை

இந்நிகழ்ச்சியில் மேடையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை," 16 நாள் பயணமாக இங்கு இருந்து 9 மாநில 6000 கிலோ மீட்டர் டெல்லி வரை சென்று வந்துள்ளார்கள், இந்தியா அரசியல் அமைப்பு சட்டத்தை இந்தியா முழுவதும் கொண்டு சென்றுள்ளார்கள், இந்தியாவில் பள்ளி, கல்லூரிகளில் அரசியல் அமைப்பு சட்டம் வகுப்பு இருக்கிறதா ?

அரசியலமைப்பு சட்ட தினம்

அரசியலமைப்பு சட்ட தினம்

நம் நாட்டில் அரசியல் அமைப்பு சட்டம் தெரியுமா என்று கேட்டால் அதற்கு பதில் தெரியாது என்பதே அதிகம் சொல்வார்கள், மோடி இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்ற உடன் நவம்பர் 26ஆம் தேதி அரசியல் அமைப்பு சட்ட நாள் என்று கொண்டு வந்தார். 1949-ம் ஆண்டு கொடுத்து 1950 அரசியல் சாசனமாக கொண்டு வரப்பட்டது, நவம்பர் 26 ஆம் தேதி அரசியலமைப்பு சட்ட தினம் என்று இதுவரை இந்தியாவில் பிரதமராக இருந்தவர்கள் ஒரு நாள் கூட யோசிக்கவில்லை.

ரிஷி சுனக்

ரிஷி சுனக்

இந்திய சுதந்திரம் பெற்ற பிறகு இந்திய மக்களுக்கு சுயமாக நிர்வகிக்க முடியாது என்று பிரிட்டனில் வின்ஸ்டன் சர்ச்சில் பேசினார். ஆனால் இன்றோ அதே பிரிட்டனில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி ஷுனாக் பிரதமர் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளார். பொய்யும் புரட்டும் பேசி எத்தனை ஆண்டு காலம் நம்மை ஆள்வார்கள் என்பது இந்த அரசியல் அமைப்பு சட்டம் படித்துவிட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள். அதன் மூலம் அரசியல் மாற்றம் வரும்" என்றார்.

சிஆர்பிஎப் வீரர்

சிஆர்பிஎப் வீரர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் தேச விரோதமாக பேசுவதை நாம் பார்த்திருக்கிறோம்., முதல் முறையாக பாதுகாப்பு பணியில் இருக்கும் ஒரு ராணுவ வீரரை அதுவும் ஹிமாச்சல் பிரதேசத்தில், சிஆர்பிஎப் வீரரை - மிரட்டும் வகையில் உங்களது குடும்பம் இங்கே தான் இருக்கிறது என்பதை போன்று பேசியிருக்கிறார்கள் அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு இங்கே இருக்கிறது. ஏனென்றால் நாம் ஆளுங் கட்சியில் தான் இருக்கிறோம் என்ற தைரியத்தில் அவர்கள் அப்படி செய்கிறார்கள். அதனால்தான் அந்த ராணுவ வீரரின் தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து அவரிடம் பேசினேன்.

சுற்றுப்பயணம்

சுற்றுப்பயணம்

ஆர்.எஸ்.பாரதி போன்றோர் அறிவாலயத்தின் வாசலில் அமர்ந்து பிச்சை எடுக்கிறார்கள். கோபாலபுரம் குடும்பம் தங்களுக்கு பிச்சை போடுவார்கள் என்று காலம் காலமாக, தலைமுறை தலைமுறையாக ஆர் எஸ் பாரதி போன்றோர் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லி என்னுடைய தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை.தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இதற்கான திட்டமிடல்கள் செய்யப்பட்டு வருகிறோம்

5000 இடங்களிலும் போராட்டம்

5000 இடங்களிலும் போராட்டம்

சுற்றுப்பயணம் என்று சொல்வதை விட அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்க உள்ளேன், தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் செல்ல வேண்டும் முடித்தால் கிராமம் கிராமமாக செல்ல வேண்டும் ஒரு வருடம் முழுவதுமாக இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம் விரைவில் அறிவிக்கப்படும். தமிழகம் முழுவதும் 1200 இடங்களில் போராட்டம் நடைபெற்றது, தமிழகம் முழுவதும் அடுத்த முறை தமிழக அரசுக்கு எதிராக 5000 இடங்களிலும் போராட்டம் நடந்த வேண்டுமென்று முடிவு செய்து இருக்கிறோம்"என்றார்.

English summary
Tamil Nadu BJP President Annamalai has said that protests were held at 1200 places across Tamil Nadu and we have decided to hold protests at 5000 places as the next step against the Tamil Nadu government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X