தேசியக் கொடியை டிபி வைப்பதில் தயக்கம்..திமுகவிற்கு தேச ஒற்றுமையில் நம்பிக்கை இல்லை..வானதி சீனிவாசன்!
சென்னை: திமுகவினர் தேசியக் கொடியை டிபி-யாக வைப்பதற்கு தயக்கம் ஏன் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக மகளிர் அணி சார்பாக 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் 75 நான்கு சக்கர வாகனங்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மற்றும் நடிகை குஷ்பூ கலந்து கொண்டனர். இந்த பேரணியை வானதி சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைக்க, முதல் வாகனத்தை குஷ்பு ஓட்டிச் சென்றார்.

வானதி சீனிவாசன்
இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறுகையில், தேசிய கொடியை மாநில சட்டப்பேரவையில் ஏற்றுவதற்கு நாங்கள் உரிமை பெற்று இருக்கிறோம் என்று பெருமையாக கூறும் திமுகவினர், இப்போது தேசியக் கொடி-யை டிபியாக வைப்பதற்கு தயங்குகின்றனர். இதற்கு தேசிய கொடி மற்றும் தேச ஒற்றுமை மீது நம்பிக்கை இல்லாத தன்மை காரணம்.

தமிழ்நாடு போராட்டம்
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அதிகமாக பங்கு வகித்த மாநிலம் தமிழ்நாடு. இந்த விவகாரத்தை முன்னெடுக்கிறோம் என சொல்லி தியாகிகளுக்கு எல்லாம் மரியாதை செய்யும் விதமாக திமுக முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால் ஏதோ பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுக்க சொல்லிவிட்டார் என்பதற்காக வேறு வழியில்லாமல் செய்வது போல பெயரளவில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு
தமிழக அரசு சார்பாக தீவிரமான முன்னெடுப்பை எங்களால் பார்க்க முடியவில்லை. தமிழகத்தைச் சார்ந்த நாங்கள் கேட்கிறோம். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின கொண்டாட்டங்களில் முன்னணியில் நின்று மக்களுக்கு ஒரு உத்வேகம் கொடுக்க வேண்டும். இதற்கு முன் உதாரணமாக தேசிய கொடியை அவருடைய சமூக வலைதளத்தின் பக்கங்களில் அவர் பகிர வேண்டும். அதே நேரத்தில் மக்களுக்கும் வேண்டுகோள் விடுக்க வேண்டும். இதை தமிழகத்தினுடைய பொதுமக்களில் ஒருவராக எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின்
தொடர்ந்து, இதனை தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த 75வது சுதந்திர தின விழா கொண்டாட்ட நேரத்தில் நாம் இந்த நாட்டின் ஒற்றுமையை தேச பக்தர்களை நேசிக்கின்ற வகையில் தியாகிகளை போற்றக்கூடிய வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும். அதுதான் எங்கள் எதிர்பார்ப்பு என்று தெரிவித்தார்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications