ஒன்னா இருக்க கத்துக்கனும்! முடிந்தவரை பேசி பார்த்த ‘மேலிடம்’! விடாப்பிடி எடப்பாடி! உங்க கட்சியா இது?
சென்னை : கடந்த காலங்களைப் போலவே அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக பயணிக்க வேண்டும் என பாஜக தரப்பில் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமை விவகாரத்தில் விடாப்பிடியுடன் பேசியதால் பேச்சுவார்த்தை கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் சரி கட்சி பொறுப்பில் இருந்தபோதும் சரி அதிமுக எப்படி இருந்ததோ அதற்கு அப்படியே தலைகீழாக இருப்பதாக தொண்டர்கள் புலம்பி வருகின்றனர்.
அவரது மறைவுக்குப் பின் ஒவ்வொரு நாளும் பல்வேறு சிக்கல்களை அதிமுக சந்தித்து வருகிறது. சசிகலா விவகாரம், டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் மோதல் என ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பிரச்சனைகளில் சிக்கி பேசு பொருள் ஆவது தான் அதிமுகவின் வாடிக்கையாகி போனது.

அதிமுகவில் மோதல்
அந்த வகையில் முதலமைச்சர் வேட்பாளர் தேர்வில் மோதல் , எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு போட்டி என மீண்டும் சிக்கல்களை சந்தித்து வந்த அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை விவகாரம் தான் கடந்த இரண்டு மாதங்களாக பேசுபொருளாக மாறியிருக்கிறது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு போர்க்கொடி தூக்க முடியவே முடியாது என பேசினார் ஓபிஎஸ். ஆனாலும் கட்சியில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்
இதனை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களை கட்சியிலிருந்தும் அவர் நீக்கியுள்ளார். அதே நேரத்தில் தான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் என ஓபிஎஸ் பிடிவாதம் பிடித்து வரும் நிலையில் நீதிமன்றம் தேர்தல் ஆணையம் ரிசர்வ் வங்கிக்கு கடிதம் என அடுத்தடுத்து அதிரடி காட்டி வருகிறார். இதனால் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு இருந்த எடப்பாடி பழனிச்சாமி நிகழ்ச்சிகளை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு அவசர அவசரமாக சென்னை திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்கும் என அதிமுக தொண்டர்கள் குழப்பத்தில் உள்ள நிலையில் பாஜக அதிமுகவில் நடப்பதை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறது.

பாஜக
அதே நேரத்தில் தேவையான போது எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அழைத்துப் பேசுவதிலும் பாஜக மும்முரம் காட்டி வருகிறது. 2017ஆம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் நடத்திய நிலையில் அணிகள் இணைப்பிற்கு பாஜக முக்கிய பங்களிப்பை வழங்கி இருந்தது என்கின்ற அரசியல் நிபுணர்கள். ஆனால் தற்போதைய விவகாரத்தின் போது ஏன் அமைதி காக்கிறது என கேள்வி எழுந்துள்ளது. ஆனாலும் தற்போதும் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என பாஜக மேலிடம் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை
இது தொடர்பாக நம்மிடம் பேசிய அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர்," அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்து இருதரப்பாக பிரிந்து செயல்பட்ட போதே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவரையும் பாஜக மேடம் தொடர்பு கொண்டு தற்போதைக்கு பிரச்சனை வேண்டாம் ஒன்றாகவே மக்களவைத் தேர்தல் வரை பயணிக்க வேண்டும் எனவும் அதன் பிறகு மற்றவற்றை பார்த்துக் கொள்ளலாம் என கூறியுள்ளனர். ஆனால் ஒற்றை தலைமை விவகாரம் தான் வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி விடாப்பிடியாக இருந்ததாகவும், உட்கட்சி விவகாரத்தில் நீங்கள் தலையிட வேண்டாம் என்ற ரீதியில் அவர் பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்தே பேச்சுவார்த்தைகளை பாஜக தரப்பு முடித்துக் கொண்டுள்ளது" என்றார்.
Recommended Video

விடாப்பிடி எடப்பாடி
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2017ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து பிரதமர் மோடியே தன்னிடம் பேசியதாகவும் முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்து துணை முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர் கூறியதால் தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவளித்ததாகவும் மேலும் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பாஜகவின் பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவளித்ததாக ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இந்த நிலையில் தான் தற்போது பாஜக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி அது தோல்வியில் முடிவடைந்துள்ளதாக கூறுகின்றனர் அதிமுகவினர்.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications