அப்போ வேல் யாத்திரை.. இப்போ கபடி போட்டி பாஜகவுக்கு பலன் தருமா ”மோடி கபடி லீக்”?
சென்னை: தமிழ்நாட்டில் கட்சியை வளர்க்க திருக்குறள், திருவள்ளுவர், வேல் யாத்திரையை தொடர்ந்து கபடியை பாஜக கையில் எடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் தேர்தலின் போது தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் குறிப்பிடத் தகுந்த வெற்றியை பெற வேண்டும் என்று பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காகவே ஆபரேசன் தென் இந்தியா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்கு ஏற்றாற்போல் அண்மைக் காலமாக கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானாவில் பாஜக தொண்டர்களின் செயல்பாடுகள் தீவிரமாகி வருகிறது.
தமிழ்நாட்டில் அண்ணாமலையின் செயல்பாடுகள் ஆக்ரோஷமாக இருந்தாலும், பெரிய அளவில் மாற்றமில்லை என்றே பார்க்கப்படுகிறது. இதனால் பாஜக மீண்டும் தனது ஃபார்முலாவை கையில் எடுத்துள்ளது. அது கலாச்சார ரீதியாக மக்களை சென்றடையும் வழிகளை கையில் எடுத்து பணி செய்து வருகிறது.

வேல் யாத்திரை
ஏற்கனவே திருவள்ளுவர், திருக்குறளை உலகளவில் பிரபலப்படுத்தி வருவதாக பாஜக பேசி வருகிறது. அதற்கு ஏற்றாற்போல் பிரதமர் நரேந்திர மோடியும் பல்வேறு விழாக்களில் திருக்குறள் கூறுவதை தொடர்ந்து வருகிறார். அதேபோல் பாஜக முன்னாள் தலைவரான எல்.முருகன், வேல் யாத்திரை நடத்தி பாஜகவுக்கு தொண்டர்களை அதிகரித்தார்.

கபடியை கையில் எடுத்துள்ள பாஜக
இதற்கு பலனாக 4 எம்எல்ஏ -க்கள் பாஜகவுக்கு கிடைத்தன. அதேபோல் எல்.முருகனுக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாளொரு பேட்டி, ஆர்ப்பாட்டம் என்று நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த அண்ணாமலை, தமிழர்களின் முக்கிய கலாச்சாரமான கபடியை கையில் எடுத்துள்ளார்.

தென் மாவட்டங்கள் இலக்கு
இதன்மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும், கிராமத்திலும் கால்பதிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் கால் பதிக்கலாம் என்று கணக்கு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே தென் மாவட்டங்களில் அதிமுக பலவீனமாக பார்க்கப்படுவதால், அங்கு கட்சியை வளர்க்க பாஜக தீவிரமாக பணியாற்றி வருகிறது.

பரிசுத் தொகை
இதற்காக தான் மோடி கபடி லீக் என்ற கபடி போட்டியை பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட அளவில் வெற்றிபெறும் அணிக்கு முதல் பரிசாக ஒரு லட்சம், இரண்டாவது பரிசு ரூ.50 ஆயிரம், மூன்று, நான்காவது பரிசாக தலா ரூ.25 ஆயிரம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.15 லட்சம் முதல் பரிசு
அதேபோல் மாவட்ட அளவில் வென்ற அணிகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். மாநில அளவிலான கபடி போட்டிக்கு முதல் பரிசாக ரூ.15 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.10 லட்சம், மூன்று, நான்காவது பரிசாக தலா ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் வரும் 17, 18,19 ஆகிய தேதிகளில் திருநயினார்குறிச்சியில் போட்டிகள் நடக்கிறது.
இதேபோல் அனைத்து மாவட்டங்களுக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிபோல் இது தென்மாவட்டங்களில் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என பாஜக தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications