இந்தியில் பதாகை வைச்சிடுவோம் பார்த்துக்கோங்க.. திமுக மீது எச்.ராஜாவிற்கு வந்த திடீர் கோபம்
சென்னை: ஹிந்தி மொழிக்கு எதிராக திமுக கோஷமிட்டதை சுட்டிக்காட்டி டிவிட்டரில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டுள்ளார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.
தமிழகத்தில் இந்தித் திணிப்புக்கு எதிராக திமுக பெரும் போராட்டங்களை முன்னெடுத்தது. அதன் விளைவாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 1967ம் ஆண்டு திமுக தமிழகத்தில் ஆட்சி அமைத்தது.
பிறகு, அதிலிருந்து பிறந்த அதிமுகவும், மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் தான் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி நடந்தி வருகின்றன.

ஹிந்தி திணிப்பு
காங்கிரஸ் உட்பட வேறு எந்த ஒரு கட்சியும் மறுபடி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு ஹிந்தி திணிப்புக்கு எதிரான மனநிலை மக்களிடம் ஆழமாக பதிவாகிவிட்டது. இந்த நிலையில்தான் லோக்சபாவுக்கு 2024 ஆம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலின்போது, உத்தர பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் திமுக போட்டியிட திட்டமிட்டுள்ளது என்று நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

எச்.ராஜா ட்வீட்
அந்த செய்தி துணுக்கை தனது ட்விட்டர் பதிவில் ஷேர் செய்து இருக்கிறார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா. மேலும் அவர், அதில் கூறுகையில், "ரொம்ப சந்தோஷம். 1965-ல் திமுக போட்ட கோஷம் அத்தை மகள் தமிழ் இருக்க, ஆசைக்கு ஓர் ஆங்கிலமிருக்க, தே. .. .இந்தி எதற்கு என்பதை இந்தியில் பதாகையாக எல்லா மாநிலத்திலும் வைச்சுடுவோம். கூட சேந்தவன்களும் கோவிந்தா.." இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

சர்ச்சை
தமிழை அத்தை மகள் என்றும் ஆங்கிலத்தை அதற்கு துணையாகவும் கூறிவிட்டு இந்தி மொழியை வேறு ஒரு கெட்ட வார்த்தை பயன்படுத்தி திமுக கோஷம் எழுப்பியதாக எச். ராஜா இந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

விமர்சனம்
அதே நேரம் ராஜா பதிவின் கீழே கருத்து பதிவிட்டுள்ள திமுக ஆதரவாளர்கள் மற்றும் நெட்டிசன்கள் பெட்ரோல் டீசல் போன்ற விலையேற்றம் தொடர்பாக ராஜா கருத்து சொல்லாமல் யூக அடிப்படையில், ஒரு செய்தி வெளியானதை பெரிதாக பேசிக் கொண்டிருக்கிறார் என்று விமர்சனங்கள் செய்வதை பார்க்க முடிகிறது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications