சென்னையில் பாஜக - விசிக மோதலால் மண்டை உடைப்பு.. காயத்ரி ரகுராம் உள்பட 150 பேர் மீது வழக்குப் பதிவு

தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிப்பது தொடர்பாக பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இந்த மோதல் தொடர்பாக இரு கட்சிகளையும் சேர்ந்த 150 பேருக்கு மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜகவினருக்கும் விசிக தொண்டர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. கோவை, மதுரை என பல ஊர்களில் பாஜக தொண்டர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களும் மோதி வருகின்றனர். சென்னையிலும் இந்த மோதல் நீடித்துள்ளது.

டாக்டர் அம்பேத்கரின் 131 வது பிறந்தநாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவிக்க விடுதலை சிறுத்தை கட்சியினர் வந்தனர். விசிகவின் தலைவர் திருமாவளவன் மரியாதை செய்ய விசிகவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

விசிக - பாஜக

விசிக - பாஜக

அப்போது பாஜகவினரும் மாலை அணிவிக்க வந்தனர். பாஜக சார்பில் அக்கட்சி தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் வந்து மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகளை பாஜகவினர் மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில் விசிக தலைவர் வருகை காரணமாக ஊன்றப்பட்டிருந்த பாஜகவின் கொடிகளை அகற்றி விசிகவின் கொடியை அக்கட்சியினர் நட்டதாகக் கூறப்படுகிறது.

கடும் மோதல் மண்டை உடைப்பு

கடும் மோதல் மண்டை உடைப்பு

இதனால் பாஜக-விசிக கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், வாக்குவாதம் மோதல், கல்வீச்சு என்ற நிலையை எட்டியது. இருகட்சித் தொண்டர்களும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இருதரப்பினருக்கும் மண்டை உடைப்பு மற்றும் ரத்த காயங்களும் ஏற்பட்டன.

சாலை மறியல்

சாலை மறியல்

காவல்துறை உயர் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர். இதை தொடர்ந்து எதிர்தரப்பை கைது செய்யக் கோரி இரு கட்சியினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்திற்கு பிறகு இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

காவல்நிலையத்தில் புகார்

காவல்நிலையத்தில் புகார்

இதனையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக தொண்டர்கள் புகார் கொடுத்தனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் பாஜக நிர்வாகியான காயத்ரி ரகுராம் தூண்டுதல் பேரிலேயே பாரதிய ஜனதா தொண்டர்கள் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

காயத்ரி ரகுராம் மீது வழக்கு

காயத்ரி ரகுராம் மீது வழக்கு

இதை தொடர்ந்து கோயம்பேடு காவல்துறையினர் நடிகை காயத்ரி ரகுராம் உட்பட இரு கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் என தலா 150க்கும் மேற்பட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+