ஸ்டாலின் போடும் ₹5000 செக்.. கருப்பு சிவப்பு vs காவி: பாஜகவின் 60 சீட் பிளான்'.. யாருக்கு ஜாக்பாட்
சென்னை: தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் கட்சிகளுக்குள் ஓவர் சுறுசுறுப்பு தென்படுகிறது.. ஒரு பக்கம் ஆளும் திமுகவைத் தோற்கடிக்க பாஜக பலே திட்டங்களை போட்டு வருகிறது. இன்னொரு பக்கம், பாஜகவை தமிழகத்தில் வளரவிடாமல் தடுக்க திமுகவும் கவனமாக செயல்படுகிறது. இவ்வளவு சலசலப்புகள் இருந்தாலும், நிஜமான போட்டி என்னவோ வழக்கம்போல திமுகவா அல்லது அதிமுகவா? என்ற இடத்தில்தான் இப்போதும் வந்து நிற்கிறது...!!!
நடக்கப் போவது வெறும் தேர்தல் மட்டுமல்ல.. அது திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கும், வளரத் துடிக்கும் தேசிய மற்றும் புதிய கட்சிகளுக்கும் இடையிலான ஒரு வாழ்வா சாவா போராட்டம் என்றே சொல்ல வேண்டும்..

60 சீட் கேட்குதா பாஜக
முதலில் பாஜகவின் வியூகத்தைப் பார்ப்போம். தமிழகத்தில் இந்த முறையாவது காலூன்றிவிட வேண்டும் என்று துடித்து கொண்டிருக்கும் பாஜக, வரவிருக்கும் தேர்தலில் சுமார் 60 தொகுதிகள் வரை அதிமுகவிடம் பாஜக டிமாண்ட் செய்வதாக தகவல்கள் வருகின்றன..
திமுகவின் வாக்கு வங்கியை உடைக்க வேண்டுமானால், தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகவும் வலுவாக இருக்க வேண்டும் என்பது டெல்லி தலைமையின் எண்ணம்... ஒருவேளை அதிமுக, பாஜக, மற்றும் மற்ற சிறிய கட்சிகள் இணைந்தால், அது திமுக கூட்டணிக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு ஒரு பலமான கூட்டணியாக மாறும். ஆனால், இத்தனை இடங்களை அதிமுக விட்டுக்கொடுக்குமா என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்விதான்..
ஸ்டாலினின் சைலண்ட் வியூகம்:
மற்றொருபுறம் பார்த்தால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு தெளிவான பாதையில் பயணிக்கிறார். சமீபத்தில் அரசியலுக்கு வந்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினாலும், ஸ்டாலின் அவர்களைப் பெரிய அளவில் பொருட்படுத்தவில்லை. மாறாக, தனது முழு கவனத்தையும் அதிமுகவின் மீதே வைத்துள்ளார். தனது உண்மையான எதிரி அதிமுகதான் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார்.
ஏனென்றால், தமிழகம் முழுக்க கிளைகளைக் கொண்ட அதிமுகவை வீழ்த்தினால் மட்டுமே மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பது ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் விஜய் போன்ற புதியவர்களின் வருகையை விட, அதிமுகவின் நகர்வுகளையே உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்..
விஜய்யை கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதன் மூலம், களத்தை மீண்டும் "திமுக vs அதிமுக" என்ற பழைய பாணிக்கே கொண்டு வரவும் ஸ்டாலின் முயற்சிப்பதாக தெரிகிறது.. புதிய கட்சிகள் வாக்குகளை பிரிப்பது திமுகவிற்கே சாதகமாக முடியும் என்றும் அவர் கணக்குப் போடுகிறார். அதனால் தான், சட்டமன்றத்தில் கூட அதிமுகவின் விமர்சனங்களுக்கு மட்டுமே அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்து பதில் அளிக்கிறார்.
பெண்களின் வாக்குகள் யாருக்கு?
அதிமுகவை தனக்கு எதிரான தராசில் நிறுத்திவிட்டு, பெண்களின் வாக்குகளை கவர திமுக திட்டமிட்டுள்ளது.. இதற்காகாவே மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஒரு மிகப்பெரிய கேம் சேஞ்சராகப் பார்க்கப்படுகிறது.
சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குவது, திமுகவிற்கு ஒரு உறுதியான வாக்கு வங்கியை உருவாக்கியுள்ளது. இதனை முறியடிக்க அதிமுக என்ன செய்யப்போகின்றன என்பது இன்னும் முடிவாகவில்லை... ஆனால் அதிமுக மற்றும் பாஜக ஆகிய 2 கட்சிகளுமே பெண்களின் வாக்குகளைக் கவரப் புதிய அறிவிப்புகளை வெளியிடத் தயாராகி வருகின்றன. இருந்தாலும் நேரடியாகப் பணம் சென்றடையும் திட்டத்தை முறியடிப்பது எதிர்க்கட்சிகளுக்கு ஒரு சவாலான காரியமே.
திராவிட அடையாளம்
பாஜக எவ்வளவுதான் ஆதிக்கம் செலுத்த நினைத்தாலும், திமுகவை பொறுத்தவரை அவர்களின் பிரதான எதிரி அதிமுகதான். "பாஜகவை ஒரு கருத்தியல் எதிரியாக" மட்டுமே திமுக பார்க்கிறது.
அதேபோல அதிமுகவும், பாஜகவின் தயவு தேவைப்பட்டாலும், தனது திராவிட அடையாளத்தை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. இதனால், புதிய கட்சிகள் மற்றும் தேசியக் கட்சிகளின் வருகைக்கு மத்தியிலும், தமிழக அரசியல் களம் இப்போதும் திராவிடக் கட்சிகளின் கைகளிலேயே தஞ்சமடைந்துள்ளது.
என்டிஏ கூட்டணி வலுவாக அமையுமா என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும், கள எதார்த்தம் என்பது திராவிட கட்சிகளின் பலத்தையே சார்ந்துள்ளது. பாஜகவின் 60 இடங்கள் கோரிக்கை, திமுகவின் மகளிர் வாக்கு வங்கித் திட்டம், விஜய்யை புறக்கணிக்கும் ஸ்டாலினின் தந்திரம் என அனைத்தும் சேர்ந்து ஒரு விநோதமான சூழலை உருவாக்கியுள்ளன...
கருப்பு சிவப்பு - நடுவில் வெள்ளை
ஆக, எத்தனை புதிய சக்திகள் வந்தாலும், திமுகவும் பாஜகவும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்துகொண்டாலும், 2026 தேர்தல் என்பது கருப்பு-சிவப்பு மற்றும் கருப்பு-வெள்ளை-சிவப்பு கொடிகளுக்கு இடையில்தான் நடக்கப்போகிறது...!!!!
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை தாண்டி, திராவிட அரசியலின் வலிமையை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் போர்க்களமாக அமையப்போகிறது என்பதே நிஜம்.... பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே? -
டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம்












Click it and Unblock the Notifications