பள்ளிகளை திறந்ததால் பஸ்களில் பிதுங்கி வழியும் கூட்டம்.. காற்றில் பறந்த தனிமனித இடைவெளி, விதிமுறைகள்!
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படுவதால் காலை முதல் பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. தனிநபர் இடைவெளி இல்லாமல் மக்கள் பயணம் செய்வதால் கொரோனா நோய் பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
செப்டம்பர் 1ம் தேதியான இன்று முதல், தமிழகத்தில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.
இதையடுத்து காலை 9 மணிமுதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன, கல்லூரிகளில் திறக்கப்பட்டுள்ளன.

முதல் நாள்
முதல் நாள் என்பதால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப கணிசமான பெற்றோர் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும் கூட ஓரளவுக்கு மாணவ-மாணவிகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்வதை பார்க்க முடிகிறது. அப்படியிருந்துமே கூட்டம் அலை மோதுகிறது பஸ்களில்.

பெண்கள் கூட்டம் அதிகம்
பெண்களுக்கு டவுன் பஸ்களில் இலவசமாக பயணம் செய்வதற்கு தமிழக அரசு அனுமதித்துள்ளது. இதன் பிறகு பஸ்களில் பெண்களின் கூட்டம் சற்று அதிகரித்து காணப்பட்டது. தற்போது மாணவ மாணவிகளும் பஸ்களில் பயணம் செய்ய வேண்டி இருப்பதால் பெரும்பாலான பஸ்கள் சமூக இடைவெளி இல்லாமல் பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணம் செய்கின்றன.

நின்றபடி பயணிக்கும் மாணவ, மாணவிகள்
இருக்கைகள் நிரம்பி மாணவ மாணவிகள் நின்று கொண்டே பயணம் செய்வதை பல இடங்களில் பார்க்க முடிகிறது. பள்ளிகளில் என்னதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் கூட, பஸ்களில் இப்படி பலருடன் அருகே நின்று பயணம் செய்வது நோய் பரவல் ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்ற அச்சம் பெற்றோரிடையே எழுந்துள்ளது.

கல்லூரி மாணவர்கள்
கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்களில் கணிசமானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். பள்ளி மாணவர்கள் 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் என்பதால் அவர்கள் தடுப்பூசி செலுத்தி இருக்க மாட்டார்கள். எனவே வெளியிடங்களில் இதுபோல சமூக இடைவெளி இல்லாமல் பழகிவிட்டு அவர்களுக்கு நோய் பரவல் ஏற்பட்டால் அது அவர்களை மட்டுமல்லாது குடும்பத்திலுள்ள பெரியவர்களுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

தீர்வு என்ன
இதற்கு தீர்வாக, அதிகப்படியான பேருந்துகளை இயக்க வேண்டும் சமூக இடைவெளி இல்லாமல் பயணம் செய்வதை தடுக்க அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெற்றோர்கள் கோரிக்கையாக இருக்கிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications