அதிமுக ஆட்சியில் '1 யூனிட் மின்சாரம் ரூ3.50’ ஒப்பந்தத்தை புதுப்பிக்காததால் ரூ149 கோடி நஷ்டம்- சிஏஜி
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக ஆட்சிக் காலத்தில் (2017-2019) 1 யூனிட் மின்சாரத்தை ரூ3.50க்கு அதானி நிறுவனத்திடம் வாங்கும் ஒப்பந்தத்தை புதுப்பிக்க தவறியதால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜேட்கோ)-க்கு ரூ149.02 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை சாடியுள்ளது.
தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய கணக்கு தணிக்கை தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

- மாநில அரசுகளுக்குச் சொந்தமான மின் பகிர்மான நிறுவனங்களின் (டிஸ்காம்) நிதி மேம்பாட்டை முன்னேற்றும் நோக்கத்துடன், உஜ்வல் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜ்னா (உதய்) என்ற திட்டத்தை இந்திய அரசின் மின் அமைச்சகம், நவம்பர் 2015ல் அறிவித்தது. டிஸ்காம்களின் நிதிநிலையில் முன்னேற்றம் மற்றும் செயல்பாட்டுத் திறன் மேம்படுத்துதல் மூலம் அனைவருக்கும் வாங்கக்கூடிய விலையில், 24x7 மின்சாரம் கிடைக்கச் செய்ய தேவையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வழி வகை செய்யும் படி இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டது.
- இத்திட்டத்தில் வரையறுக்கப்பட்டபடி, நிதி மற்றும் செயல்பாட்டு மைல்கற்களை அடைவதற்கான அந்தந்த தரப்பினரின் பொறுப்புகளைக் குறிப்பிட்டு, இந்திய அரசு, தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜேட்கோ) ஆகியவற்றுக்கு இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனவரி 2017-ல் கையெழுத்தானது.
- உத்தேச இலக்குகளான டிஸ்காம்களின் நிதி நிலை முன்னேற்றம் மற்றும் முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் திட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி செயல்பாட்டுத் திறன்களை செயல்படுத்துவதன் மூலம் இலக்கு வைக்கப்பட்ட செயல்பாட்டு மேம்பாட்டை டான்ஜேட்கோ அடைந்த பயனை மதிப்பீடு செய்ய இந்த செயலாக்கத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- 75 விழுக்காட்டு கடனை எடுத்துக் கொள்ள வேண்டிய இலக்குக்கு மாறாக, 34.38 விழுக்காட்டை மட்டுமே எடுத்துக் கொள்ள தமிழ்நாடு அரசு ஒப்புக் கொண்டது. இந்த பற்றாக்குறை காரணமாக, டான்ஜெட்கோ ₹30,502 கோடி அளவிற்கு கடன் சுமையைத் தொடர்ந்தது, இதன் விளைவாக டான்ஜெட்கோவிற்கு ₹9,150.60 கோடி கூடுதல் வட்டிச் சுமை ஏற்பட்டது.
- மீதமுள்ள 25 விழுக்காடு கடனை அதாவது ₹7,605 கோடியைப் பொறுத்தவரை, டான்ஜெட்கோ, மாநில அரசின் உத்தரவாதத்துடன் கூடிய குறைந்த வட்டி கொண்ட கடன் பத்திரங்களாக வெளியிட வேண்டியிருந்தது. டான்ஜெட்கோவின் இந்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. இதன் விளைவாக, அதிக வட்டி விகிதம் கொண்ட கடன்களைத் தொடர்ந்ததால், டான்ஜெட்கோவிற்கு ₹1,003.86 கோடி கூடுதல் வட்டிச் சுமை ஏற்பட்டது.
- தமிழ்நாடு அரசின் பகுதி அளவு மட்டும் கடன் ஏற்பு, 25 விழுக்காடு கடனை பத்திரங்களாக மாற்றத் தவறியமை, மின் உற்பத்தித் திட்டத்திற்கான மூலதனக் கடன் வகைகளில் 87.05 விழுக்காடு உயர்வு, செயல்பாட்டு மூலதன கடன் வகைகளில் 189.88 விழுக்காடு உயர்வு போன்ற காரணங்களால் டான்ஜெட்கோவின் நிலுவைக் கடன்கள் 2019-20 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் ₹81,312 கோடியிலிருந்து (செப்டம்பர் 2015) ₹1,23,895.68 கோடியாக அதிகரித்தது.
- டான்ஜெட்கோ வங்கிகள்/நிதி நிறுவனங்களுக்கு (FIs) ₹503.28 கோடி அளவிற்கு காலங்கடந்த/அபராத வட்டியை செலுத்தியது.
- நடைமுறைப்படுத்துதல் திட்டத்தின்படி, 2018-19 ஆம் ஆண்டிற்குள் சராசரி விநியோக செலவு (ACS) மற்றும் சராசரி வருவாய் (ARR) ஆகியவற்றுக்கு இடையிலான இடைவெளி பூஜ்ஜியத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும். இவ்விடைவெளி குறைவதற்கு பதிலாக, 2015-16-ல், ஒரு யூனிட்டிற்கு ₹0.60 ஆக இருந்த இடைவெளி 2019-20-ல் ஒரு யூனிட்டுக்கு ₹1.07 ஆக அதிகரித்தது. இதன் காரணமாக 2015-20 காலகட்டத்தில் மொத்த பற்றாக்குறை ₹42,484.70 கோடியாக இருந்தது.
- ஜூன் 2012 மற்றும் செப்டம்பர் 2012-க்குள் அனைத்து குடிசை மற்றும் விவசாய நுகர்வோர் மின் இணைப்பிற்கு மீட்டர் பொருத்தும் பணியை முடிக்குமாறு டான்ஜெட்கோவிற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) உத்தரவிட்டது. எனினும், டான்ஜெட்கோ, மீட்டர் பொருத்தும் பணியை முடிக்கவில்லை. ஆனால் மேற்கூறிய நுகர்வோர்களுக்கான மானியம் முறையே இணைப்புகளின் எண்ணிக்கை மற்றும் HP அடிப்படையில் பெறப்பட்டது, இதனால், ₹1,541.49 கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.
-

- மாநில மின் பளு அனுப்பும் மையத்தால் (SLDC) மின் கொள்முதல் திட்டமிடுவதில் தகுதி அடிப்படையில் முன்னுரிமை என்ற கோட்பாட்டின் படி மின்சாரம் கொள்முதல் (MOD) நடைமுறை சரிவர பின்பற்றப்படவில்லை. இதன் விளைவாக, டான்ஜெட்கோ அதிக விலையில் மின்சாரம் வாங்கியதால் ₹28.45 கோடி, கூடுதல் செலவினமாக அமைந்தது.
- 2017-2019ல் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு யூனிட்டுக்கு ₹3.50 என்ற விலையில் மின் கொள்முதல் ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியமயால் டான்ஜெட்கோவிற்கு ₹149.02 கோடி கூடுதல் செலவினம் ஏற்பட்டது.
- டான்ஜெட்கோ ஒட்டுமொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்பு (AT&C) 2.24 முதல் 3.41 விழுக்காடு வரை குறைவாக கணக்கிடப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதன் விளைவாக மத்திய மின்சார அதிகார ஆணையம் (CEA) அறிவித்த கணக்கீட்டு முறையின் படி இழந்த எரிசக்தியின் மதிப்பு ₹6,547.25 கோடியாகும்.
- தமிழ்நாடு அரசு மற்றும் டான்ஜெட்கோ வட்டிச் செலவைக் குறைப்பதற்காக கடன்களை ஆய்வு செய்து மறுசீரமைக்கலாம் என்றும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் (TNERC) கட்டண மனுக்களை குறிப்பிட்ட காலத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், மத்திய மின்சார அதிகார ஆணையத்தால் (CEA) பரிந்துரைக்கப்பட்ட முறைமையின் படி ஒட்டுமொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக (AT&C) இழப்புகளை துல்லியமாக கணக்கிடலாம் என்றும் தணிக்கை பரிந்துரைக்கிறது. டான்ஜெட்கோ, மொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புக் குறைப்பை இலக்காகக் கொண்டு, Feeders-களை பிரிக்க செயல் திட்டத்தை வகுக்கலாம்.
இவ்வாறு மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications