23 + 17 டீல் ஓகே?.. பாஜகவுக்கு இத்தனை சீட்டா.. கணக்கு இடிக்குதே.. பலே எடப்பாடி.. யார் அந்த "விவிஐபி"

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வேறு லெவலில் எகிறி வருவதாக சொல்கிறார்கள்.. உட்கட்சி பூசல்கள் எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், எம்பி தேர்தலில் முழு கவனத்தை செலுத்த துவங்கி உள்ளாராம் எடப்பாடி.

அதிமுகவின் பொதுச்செயலாளராகி உள்ள எடப்பாடி பழனிசாமி, நிறைய வியூகங்களை வகுத்து வருவதாக தெரிகிறது.. இதுபோன்ற வியூகங்களின் பின்னணியில் எடப்பாடியின் மகன் மிதுன் இருப்பதாகவும், மிதுனுக்கு பின்னணியில், "பிரபல தேர்தல் நிபுணர்" இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்புகூட, மிதுனின் அரசியல் பரபரப்பாக பேசப்பட்டது.. இந்த பேச்சை கிளப்பியது ஓபிஎஸ் அணியினர்தான்... மூத்த தலைவர் மருது அழகுராஜ் ஒன் இந்தியாவுக்கு அளித்த ஸ்பெஷல் பேட்டி ஒன்றில் இதை பற்றி கூறியிருந்தார்.

எடப்பாடி
விவிஐபி

"பிரசாந்த் கிஷோர் இங்கே திமுகவுக்கு வேலை செய்தாரே அந்த மாதிரி, எடப்பாடிக்கு வேலை செய்த விவிஐபியுடன், துணையாக நின்றது யார்? இவர் மகன்தான்.. நீங்களே எடப்பாடியிடம் போய் கேளுங்கள், அனைத்து நிர்வாக பொறுப்பும் யாரிடம் தந்துள்ளார் என்று கேட்டு பாருங்கள். ஓபிஎஸ் மகன் யூனிபார்ம் போட்டுட்டு ஸ்கூலுக்கு வருகிறார்.. ஆனால், அதிகாரப்பூர்வமாக இல்லாமல் திரைமறைவில் பின்னின்று மகனை வைத்து இயக்கி கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி... ஆனால், மக்களிடம் நேரடியாக சென்று களத்தில் நின்று போராடி வென்றவர் ஓபிஆர்" என்றார்.

Can AIADMK form an alliance with DMDK and PMK and How many seats is TN BJP likely to get

தேர்தல்
கன்வீன்ஸ்

அதுமட்டுமல்ல, காங்கிரசுடன் கூட்டணி வைக்க எடப்பாடியை சுனில் மூலம், ஒரு பிரபல தேர்தல் நிபுணர் கன்வீன்ஸ் செய்து வருவதாகவும் பகீர்கள் கிளம்பின.. எனினும் அவையெல்லாம் வெறும் புரளியாகவே நொறுங்கிப்போய்விட்டன.. இப்போது மீண்டும், எடப்பாடி பழனிசாமிக்கு வியூகம் அமைத்து கொடுப்பதன் மூலமாக, சுனிலின் பெயர் அடிபட துவங்கி உள்ளது.. முதலாவதாக, மாற்றுக்கட்சியில் உள்ளவர்களை அதிமுகவுக்கு கொண்டு வரும் அசைன்மென்ட்களை, முக்கிய நிர்வாகிகளுக்கு ஒதுக்கி உள்ளாராம் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, மாற்று கட்சியினர் ஒவ்வொருவராக அதிமுகவில் இணைந்து கொண்டு வருகிறார்கள்.. அமமுகவுக்கு மட்டுமே ஷாக் தந்து கொண்டிருந்த எடப்பாடி, திடீரென நாம் தமிழர் கட்சியிலும் கடந்த மாதம் கையை வைத்திருந்தார்.

பிரகாஷ்
பொருமல்

நாம் தமிழர் கட்சியின் ஈரோடு கிழக்கு தொகுதி மாவட்ட செயலாளராக இருந்த கோ. பிரகாஷ் என்பவரை ஏற்கனவே, அதிமுகவில் இணைத்துள்ள நிலையில், மற்ற நிர்வாகிகளின் மீதும் பார்வை விழுந்துள்ளதாம்.. அதுமட்டுமல்ல, அதிமுகவில் 75 மாவட்டங்கள் அமைப்பு ரீதியாக செயல்படுவதாக கூறப்படும்நிலையில், இவைகளை குறைத்து ஒருங்கிணைந்த மாவட்டமாக மாற்றும் முடிவிலும் இருக்கிறாராம் எடப்பாடி.. அப்படி மாற்றம் நிகழும் நிலையில், சீனியர்களை ஓரம்கட்டிவிட்டு, இளைஞர்களுக்கு முக்கிய பொறுப்புகளை ஒதுக்கவும் முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே தங்களை எடப்பாடி பழனிசாமி ஒதுக்கி வைத்து வருகிறார் என்று சீனியர்கள் பொருமலில் உள்ளதாக கூறப்படும் நிலையில், இப்படி ஒரு புது முடிவு அவர்களுக்கு மேலும் கலக்கத்தை தந்து வருவதாகவே தெரிகிறது..

Can AIADMK form an alliance with DMDK and PMK and How many seats is TN BJP likely to get

கவனம்
நட்புறவு

பொதுச்செயலாளராக பதவியேற்று, தான் சந்திக்க போகும் முதல் தேர்தல் என்பதால், எம்பி தேர்தலில் மொத்த கவனத்தையும் திருப்பி வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி.. கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றால் தான், கட்சி தன்னுடைய முழு கட்டுப்பாட்டில் உள்ளது என்பதையும், செல்வாக்கையும் காட்ட முடியும் என்றும் எடப்பாடி நம்புகிறாராம். அதனால்தான், அந்த தேர்தல் ஆலோசகருடன் வியூகத்தை பலமாக வகுத்து வருவதாக சொல்கிறார்கள்.. தமிழக பாஜக தலைவர்களுடன் இணக்கமான போக்கு இல்லை என்றாலும், டெல்லி பாஜகவில் நல்ல நட்புறவை கொண்டுள்ளார் எடப்பாடி.. இதனால் பாஜக கூட்டணியும் உறுதி செய்யப்பட்டுவிட்டது.

சட்டசபை
கிளியர் பாலு

கடந்த எம்பி தேர்தல், சட்டசபை தேர்தலில் இருந்த கூட்டணியே தொடர வேண்டும் என்று எடப்பாடி விரும்புவதால், அந்த கட்சிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறார்.. இதில், அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகிவிட்டது.. இதுகுறித்து 2 மாதத்துக்கு முன்பு, பாமகவின் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான பாலு செய்தியாளர்களிடம் பேசும்போது, "2021-ம் ஆண்டு நடந்த 9 மாவட்டங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என முடிவெடுத்திருந்தோம். அந்த நிலைப்பாடு இப்போதும் தொடர்கிறது. அதிமுகவுடன் பாமக கூட்டணியில் இருப்பதாக சொல்வது அறியாமையால் ஏற்படும் சந்தேகம்.. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை" என்று தெரிவித்திருந்தார்.

அதற்கேற்றவாறு, திமுகவுடன் பாமக நெருங்கி சென்ற நிலையில், தற்போது தன் நிலைப்பாட்டை மாற்றி கொண்டுவிட்டதாக தெரிகிறது.. நெய்வேலி விவகாரத்தில் திமுகவை எதிர்ப்பதுடன், அதிமுக பக்கமும் சாய்ந்து வருவதாகவும் தெரிகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், மீண்டும் பாமகவை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி நினைக்கிறாராம்.. அதேபோல, தேமுதிகவையும் சமாதானப்படுத்த வேண்டும் என்றும் நினைக்கிறாராம்.. பாமக, தேமுதிக என 2 கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டு வரும் பொறுப்பை, தன்னுடைய நம்பிக்கைக்குரிய மாஜிக்களிடம் ஒப்படைத்திருக்கிறாராம் எடப்பாடி..

Can AIADMK form an alliance with DMDK and PMK and How many seats is TN BJP likely to get

அதேபோல, கூட்டணியில் யாருக்கு எத்தனை இடம் என்பதிலும் தெளிவான முடிவுடன், காய் நகர்த்தலை தொடங்கியுள்ளதாகவும் சொல்கிறார்கள். கூட்டணியில் அதிமுகவுக்கு அடுத்து பெரிய கட்சியாக பாஜக உள்ளதால், 15க்கும் மேற்பட்ட இடங்களை அக்கட்சி குறி வைத்துள்ளது. ஆனால், அவைகளில் பாதிக்கும் மேற்பட்ட இடங்கள், அதிமுகவுக்கு சாதகமானவை என்பதால், தன்னுடைய கருத்தை எடப்பாடி பழனிசாமி அழுத்தமாக பதிவு செய்திருக்கிறாராம்..

அதுமட்டுமல்ல, அதிமுகவை பொறுத்தவரை, தமிழகம், புதுச்சேரியில் சேர்த்து, 23 தொகுதிகளில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது.. மீதமுள்ள 17 தொகுதிகளைதான், கூட்டணி கட்சிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாம்.. அதாவது அதிமுக கணக்குப்படி, பாஜகவை ஒற்றை இலக்க தொகுதிகள்தான் ஒதுக்கப்படும்போல் தெரிகிறது.. இதற்கு சம்மதிக்க வைக்க, டெல்லி பாஜகவிடம், அதிமுகவின் தூதரை அனுப்பி முதல்கட்ட பேச்சு நடத்தியுள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.. கடந்த ஒரு வருட காலமாகவே, "25 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்" என்று அண்ணாமலை சொல்லி கொண்டிருக்கும்போது, சிங்கிள் டிஜிட் சீட்கள்தான் ஒதுக்கப்படுமா? அப்படியே ஒதுக்கினாலும் கமலாலயம் என்ன செய்ய போகிறது? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+