சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"பச்சை அயோக்கியத்தனம்".. அமித்ஷா மீது பாய்ந்த பாலகிருஷ்ணன்.. யூனிட்டி + ஸ்ட்ரகிள்.. இதுதான் சிபிஎம்

அமித்ஷா, பிரதமர் மோடி மீது சிபிஎம் பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டி பேசியுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: இன்றைக்கு பாஜக என்கிற பேய்க்கூட்டத்தை எதிர்க்கிற மகத்தான அணி இந்த தமிழகத்தில் உருவாகிவிட்டது.. திமுக தலைமையிலான அந்த அணி, விரைவில் பாடம் புகட்டும் என்று சிபிஎம் கட்சியின் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பாஜக அரசை கம்யூனிஸ்ட் கட்சி பலமாக எதிர்த்து வருகிறது.. அந்த வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மத்திய அரசுக்கு எதிரான கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வருகிறார்.

அந்தவகையில், நேற்றைய தினம், ஒரு நிகழ்ச்சியில் பாலகிருஷ்ணன் பேசிய பேச்சு, இணையத்தில் வைரலாகி வருகிறது.. அத்துடன் பாஜகவினரையும் கடுப்பாக்கி வருகிறது.. பாலகிருஷ்ணன் பேசியதன் சுருக்கம் இதுதான்:

ஸ்புட்னிக்-V தடுப்பூசிக்கு ரஷ்யர்கள் அதிக ஆர்வம் காட்டாதது ஏன்?ஸ்புட்னிக்-V தடுப்பூசிக்கு ரஷ்யர்கள் அதிக ஆர்வம் காட்டாதது ஏன்?

 அமித்ஷா

அமித்ஷா

மோடியை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன், அமித்ஷாவை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன்.. அண்ணாமலை, ரவியை பார்த்து கேள்வி கேட்கிறேன்.. இன்று வீடுவீடாக தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று சொன்னீர்களே.. 47-ம் ஆண்டு, விடுதலையான அன்றைய தினம், உங்கள் அலுவலகத்தில் இந்த தேசிய கொடியை நீங்கள் ஏற்றி கொண்டாடினீர்களா? தேசிய கொடியை உங்கள் அலுவலகத்தில் எப்போது ஏற்றினீர்கள்.. விடுதலையாகி 50 வருஷம் கழித்துதான், சுதந்திர தினத்தையே கொண்டாடினீர்கள்?

 பச்சையான அயோக்கியத்தனம்

பச்சையான அயோக்கியத்தனம்

நாடு முன்னேறுகிறது என்கிறார்கள்.. அதிலும் நிர்மலா சீதாராமன் சொல்கிறார், பிரிட்டனைவிட நாம் முன்னேறிவிட்டோம் என்கிறார்.. ஆனால், வெட்கக்கேடு, இந்த நாட்டின் தேசிய கொடியை சீனாவில் இருந்து இறக்குமதி மேக் இன் இந்தியாவில் தேசிய கொடிக்கு இடமில்லையா? சமீபத்தில் கேரளாவுக்கு அமித்ஷா வந்திருந்தபோது, ஒரு வேண்டுகோள் விடுத்தார்.. அதாவது, போதைப்பொருளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மாநிலத்தில் எடுக்க வேண்டும் என்றார்.. இது எவ்வளவு பச்சையான அயோக்கியத்தனம்..

 சிவாஜி கணேசன்

சிவாஜி கணேசன்

இன்று உலகத்தின் 3வது பணக்காரராக வளர்ந்திருக்கும் அதானி துறைமுகத்தில், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 5 லட்சம் கோடி ரூபாய்க்கு போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது.. போதைப்பொருள் கடத்தும் அதானி உங்களுக்கு நண்பனாக இருப்பான்.. இந்த நாட்டில் யாருமே சிந்தித்துவிடக்கூடாது என்பதற்காகவே, போதை கலாச்சாரத்தை கட்டவிழ்த்து கொண்டிருக்கிறார்கள்.. அப்படிப்பட்ட பிரதமர்தான் இந்த நாட்டை ஆண்டுக் கொண்டிருக்கிறார்..

 புண்ணியவான்

புண்ணியவான்

பிரதமர் பாராளுமன்றத்திற்கு எப்போதும் வருவதில்லை.. வந்தாலும் பேசுவதில்லை.. எதிர்க்கட்சி தலைவர்களை சந்திப்பதில்லை.. எதிர்க்கட்சி தலைவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதில்லை.. இப்படிப்பட்ட புண்ணியவானை இந்த நாடு பிரதமராக கொண்டுள்ளது.. பிரதமர் மோடியைவிட சிறந்த நடிகர் ஒருவரை உலகத்தில் நீங்கள் பார்க்க முடியாது.. சிவாஜி கணேசனே ஆனாலும்சரி, தண்ணி குடிச்சாலும், அந்த வித்தையை மோடியிடம் கற்க முடியாது..

 பேய்க்கூட்டம்

பேய்க்கூட்டம்

தமிழகத்தில் திமுகவுடன் இணைந்த ஒரு கட்சியாக, அந்த அணியில் இடம்பெறுகிற ஒரு கட்சியாக சிபிஎம் இன்று உள்ளது.. சிலர் எங்களை கேட்கிறார்கள், நீங்கள் எல்லாம் ஏன் கடந்த காலங்களில் இருந்ததைபோல, இப்போது போராடுவதில்லையே? என்று கேட்கிறார்கள்.. அப்படி இல்லை.. இன்றைக்கு பாஜக என்கிற பேய்க்கூட்டத்தை எதிர்க்கிற மகத்தான அணி இந்த தமிழகத்தில் உருவாகியிருக்கிறது.. அந்த அணியில் சிபிம் அங்கம் வகிக்கிறது.. அதேசமயம், திமுக ஆட்சியில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுவதும், நிறைகளை பாராட்டுவதும் என கடமையை சமரசத்துக்கு அப்பாற்பட்டு மேற்கொண்டு வருகிறோம்..

 யூனிட்டி + ஸ்ட்ரகிள்

யூனிட்டி + ஸ்ட்ரகிள்

இன்றைக்குகூட மாணவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.. அதை வரவேற்கிறோம்.. ஆனால், மத்திய அரசு சொல்கிறதே என்று, மின்கட்டணத்தை இங்கு உயர்த்தியதை கண்டித்து நாங்கள் போராடவும் செய்தோம்.. ஒருபக்கம் பாஜகவை எதிர்ப்பதில் ஒற்றுமை, இன்னொரு பக்கம் ஆட்சியில் உள்ள குறைகளை கண்டித்து போராட்டம், என யூனிட்டி & ஸ்ட்ரகிள் என்ற சமரசமற்ற நேர்க்கோட்டில் பயணிக்கிறோம்" என்றார்.

English summary
Can DMK alliance defeat BJP and CPM Senior leader Balakrishnan has criticized Amith shah அமித்ஷா, பிரதமர் மோடி மீது சிபிஎம் பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டி பேசியுள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X