Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸ்ஸுக்கு சம்மன் அனுப்ப ரெடியாகும் சிபிசிஐடி.. ‘ஜூலை 11’ சம்பவத்தால் காத்திருக்கும் சிக்கல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறை குறித்து விசாரணையை தொடங்கியுள்ள சிபிசிஐடி போலீசார், ஓ.பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில், கடந்த ஜூலை 11ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மோதிக் கொண்டனர். இச்சம்பவம் குறித்து, அ.தி.மு.க எம்பி சி.வி.சண்முகம் புகார் அளித்தார்.

ராயப்பேட்டை போலீசார் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்கள் மீது, திருட்டு உட்பட ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

சிபிசிஐடி போலீசார் விசாரணையை துவக்கி உள்ள நிலையில், விரைவில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பத் திட்டமிட்டுள்ளனர்.

 ரத்தக்களறியான தலைமைக் கழகம்

ரத்தக்களறியான தலைமைக் கழகம்

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து ஜூலை மாதம் 11-ஆம் தேதி வானகரத்தில் ஈபிஎஸ் தரப்பு சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த நேரத்தில் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றார் ஓ.பன்னீர்செல்வம். ஈபிஎஸ் தரப்பினர் ஏற்கனவே அலுவலகத்தை பூட்டி வைத்திருந்தால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது ஓ.பன்னீர் செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர். வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

ஆவணங்கள் மிஸ்ஸிங்

ஆவணங்கள் மிஸ்ஸிங்

அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து அ.தி.மு.க அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜூலை 21ஆம் தேதி சீல் அகற்றப்பட்டு அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டவுடன் ஈபிஎஸ் ஆதரவாளர் சி.வி.சண்முகம் பார்வையிட்டு அ.தி.மு.க அலுவலகத்தில் காணாமல் போன பொருள்கள், ஆவணங்கள் குறித்து கணக்கெடுத்தார். இதையடுத்து ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

கொள்ளை அடிக்கப்பட்டதாக புகார்

கொள்ளை அடிக்கப்பட்டதாக புகார்

அவர் அளித்த புகாரில் அ.தி.மு.க தலைமை அலுவலகம் மற்றும் கட்சி தொடர்பான அசல் பத்திரங்கள், ஆவணங்கள் ரூ.31 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். கொள்ளையடித்த ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவர்களுடன் வந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு

ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு

இதையடுத்து ராயப்பேட்டை போலீசார் ஆகஸ்டு 13-ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையில் அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக பதியப்பட்ட 4 வழக்குகளும் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டன. இந்த வழக்கில் விசாரணையை தொடங்கியுள்ளது சி.பி.சி.ஐ.டி போலீஸ். விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் நியமிக்கப்பட்டிருக்கிறார். விசாரணைக் குழுவில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் லதா, ரம்யா, ரேணுகா, செல்வின் சாந்த குமார் ஆகியோர் பெற்றுள்ளனர்.

நேரில் விசாரணை

நேரில் விசாரணை

சி.பி.சி.ஐ.டி போலீசார், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த இருக்கின்றனர். அதேபோல கலவரம் நடந்த நேரத்தில் கைப்பற்றப்பட்ட வீடியோ காட்சிகளையும் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அ.தி.மு.க. அலுவலகத்துக்கு நேரில் சென்றும் விசாரணை நடத்துகிறார்கள். இதில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என்று சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓபிஎஸ்ஸுக்கு சம்மன்

ஓபிஎஸ்ஸுக்கு சம்மன்

அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வத்திடமும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கும் அ.தி.மு.க.வினரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஓபிஎஸ்ஸுக்கு விரைவில் சம்மன் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+