சென்னையில் திருமணமான எட்டு மாதத்தில் உயிரைவிட்ட ஸ்னேகா! வரதட்சணை கொடுமையால் துயரம்
சென்னை : தாம்பரத்தில் திருமணம் ஆகி எட்டே மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு வரதட்சணை கொடுமை தான் காரணம் என அவரது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை தாம்பரம் அடுத்த கிழக்கு தாம்பரம், ரங்கநாதன் தெருவை சேர்ந்தவர் ஸ்னேகா(19), இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பனையூரை சேர்ந்த பிரமோத்(25) என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
ஆரம்பம் முதலே மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 10 நாட்களுக்கு முன்பு கொடுமை தாங்காமல் ஸ்னேகா தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.

வெளியே வரவில்லை
ஆனால் ஸ்னேகாவிடம் தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்டு பிரமோத் சண்டையிட்டாதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஸ்னேகா வீட்டு அறையில் உறங்க சென்றவர் வெளியில் வரவில்லை.

ஸ்னேகா தற்கொலை
இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை தட்டியும் திறக்கவில்லை. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்து கதற அழுத்த பெற்றோர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

சேலையூர் போலீஸ்
தகவலறிந்து வந்த சேலையூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இது குறித்து ஸ்னேகாவின் பெற்றோர் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

கோட்டாட்சியர் விசாரணை
திருமணம் ஆகி 8 மாதங்களே ஆகியுள்ளதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. திருமணம் ஆகி எட்டே மாதத்தில் எங்கள் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள வரதட்சணை கொடுமை தான் காரணம் என பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications