சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜிபிஎஸ்-ஐ ஆஃப் செய்துவிட்டு.. ரூட்டை மாற்றி ஓட்டிய கில்லாடி டிரைவர்கள்.. தூக்கிய சென்னை மாநகராட்சி

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளை ரயில் நிலையத்துடன் இணைக்கும் வகையில் இணைப்பு பேருந்து வசதி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்பட்டது.

இவ்வாறு இருக்கையில், கடந்த சில வாரங்களாக விமான நிலைய மெட்ரோ நிறுத்தத்திலிருந்து மேற்கு தாம்பரம் வரை இந்த இணைப்பு பேருந்துகள் சில வழிகளை புறக்கணிக்கப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்த புகார்களையடுத்து போக்குவரத்து ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது பிளைட் இல்லை, ஆம்னி பஸ்தான்.. சென்னை டூ நெல்லை கட்டணம் ரூ.3400.. இதுக்கு இல்லையா சார் ஒரு என்டு? இது பிளைட் இல்லை, ஆம்னி பஸ்தான்.. சென்னை டூ நெல்லை கட்டணம் ரூ.3400.. இதுக்கு இல்லையா சார் ஒரு என்டு?

ஜிபிஎஸ்

ஜிபிஎஸ்

சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் காரணத்தால் பொது போக்குவரத்தில் பயணிப்பவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த சிரமத்தை போக்க, பேருந்துகள் தற்போது எங்கு இருக்கின்றன என்பதை கண்டறிய அரசு பேருந்துகளில் ஜிபிஎஸ் வசதி பொருத்தப்பட்டது. இதன் மூலம் பயணிகள் தங்களுக்கு தேவையான பேருந்துகள் எவ்வளவு தொலைவில் இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

 தடம் புறக்கணிப்பு

தடம் புறக்கணிப்பு

இந்த அறிவிப்பு வெளியான நிலையில், பேருந்தின் லைவ் லொகேஷனை காட்டும் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 3 மாதங்களில் இந்த செயலியை சுமார் 1 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்தனர். ஆனால் சில இடங்களில் ஓட்டுநர்கள் ஜிபிஎஸ் கருவியை ஆஃப் செய்து வைத்துவிடுகிறார்கள் என்று புகார்கள் எழுந்தன. குறிப்பாக தாம்பரம் மேற்கிலிருந்து விமான நிலையம் வரை வரும் S100 எனும் இணைப்பு பேருந்தில் இதுபோன்று ஓட்டுநர்கள் அடிக்கடி ஜிபிஎஸ் கருவியை அனைத்து வைத்துவிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஏமாற்றம்

ஏமாற்றம்

இதன் காரணமாக தாங்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக சிட்லபாக்கம் மக்கள் கூறுகின்றனர். அதாவது சிட்லபாக்கம், அஸ்தினாபுரம் வழியாக வருவதை இந்த பேருந்துகள் தவிர்க்கின்றன. இதற்காகவே ஓட்டுநர்கள் ஜிபிஸ் கருவியை ஆஃப் செய்து வைத்து விடுகிறார்கள் என்றும் பயணிகள் புகார் கூறியுள்ளனர். இதன் காரணமாக வேலைக்கு செல்லும் பெண்கள் நீண்ட நேரமாக பேருந்துக்கு காத்திருந்து ஏமாற்றமடைந்துள்ளதாகவும் எனவே ஜிபிஎஸ் கருவியை ஆன் செய்து வைக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

இது குறித்து புகார்கள் குவிந்த நிலையில், மெட்ரோ ரயில் நிர்வாகம் போக்குவரத்து கழகத்திற்கு இந்த புகார்களை கொண்டு சென்றுள்ளது. புகாரை விசாரித்த போக்குவரத்துக்கழகம், இனி ஜிபிஎஸ்-ஐ ஆஃப் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

English summary
A feeder service was launched in Chennai from last August to connect the areas around the metro stations with the railway station. While this is the case, for the past few weeks there have been complaints that these connecting buses from the Airport Metro Station West Tambaram are bypassing some routes. Following these complaints, a stern warning has been issued to the transport staff.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X