கஞ்சா போதை..பிரிந்த சத்யா..எனக்கு கிடைக்காதது..2 முறை கொல்ல முயற்சி..சதீஷ் பகீர் வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காதலித்தவன் தடம் மாறி போக விட்டு விலகிய காதலியை ரயில் முன் தள்ளி கொலை செய்துள்ளான் கொடூர காதலன். தனக்கு கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற எண்ணத்தில்தான் ஒரு உயிரை துள்ள துடிக்க கொன்றுள்ளான். 2 முறை கொல்ல முயற்சி செய்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளான் அந்த கொடூரன்.

கிண்டியை அடுத்த ஆலந்தூர் காவலர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சத்யா. தனது தாய்- தந்தையுடன் வசித்து வந்தவர் சத்யா தி.நகரில் உள்ள ஜெயின் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். வழக்கம் போல நேற்று கல்லூரி செல்ல வந்த சத்யாவை ஓடும் ரயிலில் ஒருவர் தள்ளி விடவே இரு துண்டாக சிதறிப்போனார்

அதைப்பார்த்து விட்டு சத்யாவை தள்ளி விட்ட அந்த அரக்கன் தப்பி ஓடி விட்டான். சத்யாவின் மரணத்தை நேரில் பார்த்த தோழிகள் அலறி துடித்தனர். கூச்சலிட்டு ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். கொலை செய்யப்பட்ட சத்யாவின் தாய் ராமலட்சுமி ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். தற்போது இவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேல் மருத்துவ விடுப்பில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கொலைக்கான பின்னணி காதல்தான் என்றும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது,

யார் அந்த கொலைகாரன்

யார் அந்த கொலைகாரன்

சத்யாவை துடி துடிக்க கொலை செய்தவனின் பெயர் சதீஷ் என்பதாகும். ஆலந்தூர் காவலர் குடியிருப்புக்கு எதிரே வசித்து வந்த சதீஷ்தான் சத்யாவை கொலை செய்தார் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து ரயில்வே காவல்துறையில் மூன்று தனிப்படையும் மவுண்ட் காவல்துறையின் நான்கு தனிமடையும் அமைக்கப்பட்டு குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். துரைப்பாக்கம் அருகே தலைமறைவாக இருந்த குற்றவாளி சதீஷை தனிப்படை போலீசார் நள்ளிரவு 12:30 மணியளவில் கைது செய்தனர்.

காவல்துறை அதிகாரி

காவல்துறை அதிகாரி

கைது செய்யப்பட்ட சதிஷிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட சதீஷின் தந்தை தயாளன் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட சத்யா(எ) சத்யபிரியாவும் சதீஷூம் பள்ளிப் பருவங்களில் இருந்து காதலித்து வந்துள்ளனர்.

பள்ளி பருவ காதல்

பள்ளி பருவ காதல்

பின்னர் சதீஷ் ஏரியா நண்பர்களோடு சேர்ந்து வேலைக்கு செல்லாமல் கஞ்சா போதை பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் சதீஷை விட்டு சத்யா பிரிந்து வந்துள்ளார். பல ஆண்டு காலமாக காதலித்த சத்யா, தன்னுடனான காதலை முறித்துக் கொண்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ரயில் முன் தள்ளி சதீஷ் கொலை செய்தார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

சத்யாவை தொந்தரவு செய்த சதீஷ்

சத்யாவை தொந்தரவு செய்த சதீஷ்

சத்யா காதலை முறித்துக் கொண்டதற்கு பிறகு சதீஷ் மூன்று முறை சத்யாவுடன் சண்டை போட்டுள்ளார். வீட்டின் அருகே ஒரு முறை தன்னை மீண்டும் காதலிக்குமாறு கூறி சண்டை போட்டு உள்ளார். பரங்கிமலை ரயில்வே நிலையத்தில் ஒரு முறை தன்னை காதலிக்குமாறும், திருமணம் செய்து கொள்ளுமாறும் கூறி பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார்.

அடித்த சதீஷ்

அடித்த சதீஷ்

ஐந்து மாதத்திற்கு முன்னர் சத்யா படிக்கும் தி.நகரில் உள்ள ஜெயின் கல்லூரி வாசலில் சத்யாவின் முடியை பிடித்து அனைவர் முன்னிலையிலும் அடித்து துன்புறுத்தி அவமானப்படுத்தினாராம். இந்த விவகாரத்தில் சத்யாவின் தந்தை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து சதீஷ் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசார் முற்பட்டு பின்னர் சதீஷின் குடும்பம் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பிறகு புகார் வாபஸ் வாங்கப்பட்டது.

தொடர் டார்ச்சர்

தொடர் டார்ச்சர்

சத்யாவுக்கு தனது உறவினர் மகனுடன் திருமணம் செய்ய தாய் - தந்தை ஏற்பாடு செய்திருந்தனர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற ஒரே காரணத்தில் சத்யாவை பலமுறை விரட்டி விடிட்டி டார்ச்சர் செய்துள்ளான்.

காத்திருந்த கொலைகாரன்

காத்திருந்த கொலைகாரன்

இந்த நிலையில்தான் நேற்று தனது கல்லூரி தோழிகளுடன் சத்யா தி நகரில் உள்ள தான் படிக்கும் ஜெயின் கல்லூரிக்கு செல்வதற்காக ரயில் நிலையம் வந்துள்ளார். அப்போது சதீஷ் முன்னரே வந்து ரயில் நிலையத்தில் காத்திருந்துள்ளார். சதீஷ் தன்னை மீண்டும் காதலிக்குமாறும் திருமணம் செய்து கொள்ளுமாறும் கூற சத்யா முடியாது என கூறியுள்ளார். இதனால் தனது தோழிகளுடன் இருந்த சத்யாவின் கையைப் பிடித்து ரயில் முன் தள்ளியுள்ளார்.

கொடூர கொலை

கொடூர கொலை

இதில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்து விட்டார் சத்யா. மகள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நேற்று மதியம் முதல் மீளா துயரிலிருந்து வந்த அவரது தந்தை மாணிக்கம் இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார் அவரது உடலை மீட்ட போலீசார் உடற்கூராய்வுக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சத்யாவின் தந்தை மாணிக்கம் ஆக்டிங் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 முறை கொல்ல முயற்சி

2 முறை கொல்ல முயற்சி

கைது செய்த பின்னர் போலீசில் வாக்கு மூலம் அளித்த சதீஷ், 5 ஆண்டுகள் உருகி உருகி காதலித்தோம்.. எங்களுடைய காதலை பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. பெற்றோர் பேச்சை கேட்டு சத்யாவும் என்னுடன் பேசுவதை தவிர்த்தாள். வேறு இடத்தில் திருமணம் பேசி முடித்தனர். அந்த ஆத்திரத்தில் இரண்டு முறை சத்யாவை கொல்வதற்கு முயற்சி செய்தேன் முடியவில்லை. நேற்று ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தேன். அப்போது பயணிகள் என்னை அடிக்க வரவே நான் தப்பினேன். நானும் தற்கொலை செய்து கொள்வதற்காக துரைப்பாக்கம் பகுதியில் முயற்சி செய்தேன் அதற்குள் போலீசில் சிக்கி விட்டேன் என்றும் சதீஷ் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

ஒரே இடத்தில் தந்தை மகள்

ஒரே இடத்தில் தந்தை மகள்

கொலை செய்யப்பட்ட மகள் சத்யாவின் உடலும் மகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மாரடைப்பால் உயிரிழந்த தந்தை மாணிக்கத்தின் உடலும் உடற்கூறாய்வுக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சென்னையில் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. காதலித்து பிரிந்தால் இதுதான் கதி என்று எச்சரிப்பது போல நடந்தேறியுள்ளது இந்த சம்பவம். தான் காதலித்த பெண் எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துவதுதான் உண்மை காதல். காதலித்து பிரிந்தால் இதுதான் கதி என்று எச்சரிப்பது போல நடந்தேறியுள்ளது இந்த சம்பவம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+