பெண்ணின் வீட்டில் டாக்டர் சுப்பையா சிறுநீர் கழித்த வழக்கு ரத்து.. திடீர் ட்விஸ்ட் - நடந்தது என்ன?
சென்னை : பக்கத்து வீட்டுப் பெண்ணின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தது தொடர்பான விவகாரத்தில் ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் சுப்பையா மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இரு தரப்பிலும் சமரசமாக செல்வதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மருத்துவர் சுப்பையா வசிக்கும் குடியிருப்பில் பெண்ணுடன் தகராறு செய்தது குறித்த அந்தப் பெண் புகார் தெரிவித்த நிலையில், அவரது வீட்டின் முன்பாக டாக்டர் சுப்பையா சிறுநீர் கழிக்கும் சிசிவிடி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

கார் பார்க்கிங் பிரச்சனை
சென்னை நங்கநல்லூர் பகுதியில் தனியார் குடியிருப்பில் வசித்து வரும் மருத்துவர் சுப்பையா, ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பின் தேசிய தலைவராக இருந்தவர். இவருக்கு அதே குடியிருப்பில் வசித்துவரும் 62 வயதான பெண்மணி ஒருவருடன் கார் பார்க்கிங் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. அந்தப் பெண்ணுக்குச் சொந்தமான கார் பார்க்கிங் இடத்தில் தொடர்ந்து மருத்துவர் சுப்பையா காரை நிறுத்தி பிரச்சினையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சிறுநீர் கழித்த டாக்டர் சுப்பையா
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வயதான பெண்மணியின் வீட்டு முன்பு குப்பைகளைக் கொட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விதமாக தொந்தரவுகளை கொடுத்துள்ளார் மருத்துவர் சுப்பையா. உச்சபட்சமாக அந்தப் பெண்ணின் வீட்டிற்கு முன்பு சிறுநீர் கழித்தார். சுப்பையா சண்முகம், அண்டைவீட்டுப் பெண்மணி வீட்டின் முன்பு சிறுநீர் கழிக்கும் அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

வழக்குப்பதிவு
இதுதொடர்பாக அந்த பெண்மனிக்கு ஆதரவாக அதே குடியிருப்பில் வசித்து வந்த உறவினர் பாலாஜி விஜயராகவன் ஆதம்பாக்கம் போலிஸில் புகார் அளித்தார். டாக்டர் சுப்பையா அந்தப் பெண்ணுக்கு பல்வேறு தொந்தரவுகள் கொடுத்ததும், சிறுநீர் கழித்ததும் உண்மை என தெரியவந்தது. இதனையடுத்து ஆதம்பாக்கம் போலிஸார் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் டாக்டர் சுப்பையா சண்முகம் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

சுப்பையா கைது
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ஆதம்பாக்கம் போலீசார் மருத்துவர் சுப்பையாவை சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பாகக் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. இந்த புகாரை அளித்த பெண்மணி மற்றும் அவரது உறவினர், சுப்பையாவால் மிரட்டப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

வழக்கு ரத்து
இந்நிலையில், பெண்ணின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தது தொடர்பான விவகாரத்தில் ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் சுப்பையா மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இரு தரப்பிலும் சமரசமாக செல்வதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications