பாத்திமாவுக்கு என்னதான் நடந்தது.. செல்போனை ஆன் செய்தவுடன் வந்த மெசேஜ்.. நிஜம் வெளியே வருமா?
பாத்திமாவின் தற்கொலையில் முழு விவரம் என்ன
Recommended Video
சென்னை: கடந்த சில நாட்களாகவே தமிழகம் - கேரள மக்களை நிலை குலைய செய்து வருவது ஐஐடி மாணவி பாத்திமாவின் தற்கொலைதான்.. பாத்திமாவுக்கு என்னதான் நடந்தது.. ஏன் இந்த துயர முடிவினை எடுத்தார்? அப்படி என்ன நெருக்கடி?
படிப்பில் கெட்டிக்கார பெண்தான் பாத்திமா லத்தீப். பிளஸ் 2-வில் நல்ல மார்க் எடுத்திருந்தார்.. ஐஐடியில் படிக்க ரொம்பவும் ஆசை.. அதனால் ஐஐடி படிப்புக்கு விண்ணப்பிக்கவும், முதுலில் உபி-யில் உள்ள பனாரசில்தான் சீட் கிடைத்துள்ளது. ஆனால், கும்பல் தாக்குதல் வடமாநிலங்களில் அதிகம் என்பதால் பயந்து போன பெற்றோர், சென்னையிலேயே படி என்று சொல்லி உள்ளனர்.
பெற்றோருக்காகவே சென்னை ஐஐடி வந்து சேர்ந்தார் பாத்திமா. ஒரு வருஷம் நல்லாதான் போய்ட்டு இருந்தது.. ஆனால் பிரச்சனை வந்தது ஒருமாசத்துக்கு முன்னாடிதான். பொதுவாக நைட் நேரம் 9 மணி ஆனால் அம்மாவுடன் போனில் பேசுவாராம் பாத்திமா. அப்பா துபாயில் வேலை பார்த்தாலும், அவரிடமும் அடிக்கடி பேசி வந்துள்ளார். இருவரிடமும் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டும் உள்ளார் பாத்திமா.

துன்புறுத்தல்கள்
ஆனால் ஒரு மாதமாக நடந்ததை பற்றி அம்மாவிடம் எதையும் சொல்ல காணோம். மத ரீதியான துன்புறுத்தல்கள் பாத்திமாவுக்கு ஏற்பட்டுள்ளது. "என் பேரை கூட இங்க சொல்ல முடியல..ம்மா" என்று ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல், ஒன்று, இரண்டு விஷயங்களை அம்மாவிடம் சொல்லி உள்ளாரே தவிர, எல்லாவற்றையும் சொல்லவில்லை. தற்கொலைக்கு முந்தைய நாள்கூட, அப்பாவிடம் போனில் ஒன்றரை மணி நேரம் அழுதுள்ளார்.

பிணமாக தொங்கினார்
ஆனால் வழக்கம்போல் அம்மாவுக்கு அன்று போன் பண்ணவில்லை. அம்மா போன் பண்ணாலும் எடுக்கவில்லை.. விடிகாலை 5 மணிக்கு போன் பண்ணாலும் எடுக்கவில்லை. பயந்துபோன அம்மா, பக்கத்து ரூம் பிள்ளைகளிடம் என்ன, ஏதென்று போய் பார்க்க சொல்லவும்தான் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார் பாத்திமா.

அரசியல்வாதி
ராத்திரி எல்லாம் பதறியும், தவித்தும் கிடந்த தாய்க்கு, இறுதியாக கிடைத்த தகவல், மகள் இறந்துவிட்டாள் என்பதுதான். இதற்கு பிறகு கேரள அரசியல்வாதி ஒருவருடன் பாத்திமாவின் சகோதரி ஆயிஷா சென்னை வந்துள்ளார். சென்னை கோட்டூர்புரம் போலீசில் புகார் தந்தார். ஆனால், மன உளைச்சல் என்று போலீசார் முடிவுக்கு வந்திருந்தனர். தான் கேரளாவில் மேயர் என்று ஆயிஷா உடன் வந்தவர் சொல்லவும்தான் போலீசார் வழக்கை பதிவு செய்திருக்கிறார்கள்.

ஆயிஷா
சகோதரியின் ரூமுக்கு வந்து பார்த்தபோது, பாத்திமாவின் செல்போன் ஆஃப் ஆகி கிடந்தது. அதனால் அதை எடுத்து சார்ஜ் போட்டு, பிறகு ஆன் செய்து பார்த்தால், "எனது சாவுக்கு காரணம் சுதர்சன் பதமநாபன் என்ற பேராசிரியர்" என்று செல்போன் வால்பேப்பரிலேயே எழுதப்பட்டிருந்ததை கண்டு அதிர்ந்தார் ஆயிஷா. இதை பற்றின மற்ற விவரங்கள் சாம்சங் கேலக்சி நோட்டில் இருக்கிறது என்றும் பாத்திமா குறிப்பு தந்திருந்தார். அந்த நோட்டை பிரித்து பார்த்தபோதுதான், ஒரு மாசமாக அங்கே நடந்த கொடுமைகளை எழுதி வைத்திருந்தார்.

பெயர்கள்
மொத்தம் 6 பக்கம் எழுதி வைத்திருக்கிறாராம் பாத்திமா.. நிறைய பெயர்களையும் அதில் குறிப்பிட்டுள்ளாராம். ஒரு மிகப் பெரிய உயர் கல்வி நிறுவனத்தில் பணியாற்றுவோர், தங்களது மாணவ, மாணவியரிடம் நடந்து கொள்ளும் முறையில் மாற்றம் தேவையா என்ற கேள்வியும் மக்களுக்கு எழுகிறது. ஒரு சின்ன பெண் தற்கொலை செய்யும் அளவுக்கு செல்கிறார் என்றால் அந்த அளவுக்கு நெருக்கடி எப்படி உருவானது, ஏன் உருவானது, யாரால் உருவானது என்ற கேள்விகளும் அடுத்தடுத்து தொடர்கின்றன.

என்ன காரணம்?
இதை ஒரு சாதாரண மன நெருக்கடியால், மன அழுத்தத்தால் வந்த மரணம் என்று கடந்து செல்ல முடியாது, கூடவும் கூடாது. காரணியைக் கண்டுபிடித்து அதை நிரந்தரமாக சரி செய்ய வேண்டிய பொறுப்பு சென்னை ஐஐடி நிர்வாகத்திற்கு உள்ளது. எத்தனையோ நல்ல விஷயங்கள் ஐஐடி மூலம் சமூகத்திற்கு நடக்கின்றன. ஆனால் ஐஐடியின் பின்னால் பேராசிரியர்கள் என்ற ரூபத்திலோ அல்லது வேறு ரூபத்திலோ நிரந்தரமாக ஒரு கறை நீடித்திருப்பதை நிச்சயம் அனுமதிக்கக் கூடாது. இதுதான் அனைவரின் ஆசையும்.

ஐஐடி
நிச்சயம் பாத்திமாவின் மரணத்திற்கு தீர்வு கிடைக்க வேண்டும். அதற்கு நியாயமான விசாரணை மட்டும் போதாது.. நிரந்தரமான தீர்வுகளும் கூடவே காணப்பட வேண்டும். காரணம், இனியும் மாயாவி போன்ற ரூபத்தில் சென்னை ஐஐடி உலா வர முடியாது. அதுவும் மக்களுடன் சம்பந்தப்பட்ட நிறுவனம்தான் என்ற நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும். அதுதான் பல பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வு காண உதவும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications