சென்னையில் 450 பேருக்கு ஒரே மகன் - எந்த ஊரோட உயிரா இருந்தாலும் சொந்தம் ஆக்கும்! யார் இந்த சீனிவாசலு?
சென்னை: உறவுகளால் கைவிடப்பட்டு தங்க இடமின்றி தவிக்கும் ஏழைகள் பலருக்கு இருப்பிடங்களை வழங்கும் மகத்தான பணியை மேற்கொண்டு வருகிறார் சென்னையை சேர்ந்த சீனிவாசலு.
கடந்த 2001 ஆம் ஆண்டு, 23 வயது இளைஞர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்படுகிறது.
அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அவருக்கு உயிர் காக்கும் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஒருவழியாக உயிர் பிழைத்து அவர் மீண்டும் சுவாசிக்கத் தொடங்குகிறார்.

வாழ்வின் அர்த்தத்தை உணர்ந்த தருணம்
இளம் வயதிலேயே மரணத்தை எட்டிப்பார்த்துவிட்டு வந்த அந்த இளைஞருக்கு அப்போதுதான் வாழ்வின் புரிதலே கிடைக்கிறது. பிறப்புக்கான அர்த்தத்தை உணர்கிறார். உயிர்களின் மதிப்பை அறிகிறார். தனது மகன் உயிர் பிழைப்பானா என அப்போது ஏங்கிய பெற்றோருக்கு மத்தியில், தற்போது 450-க்கும் மேற்பட்டோருக்கு மகனாக அவர் விளங்கிக் கொண்டிருக்கிறார். அவர்தான் சீனிவாசலு.

வீடற்றவர்களின் மகன்
தற்போது அவரது வயது 45. அறுவை சிகிச்சைக்கு பின்னர் தனக்கு கிடைத்த மறுவாழ்வை சமூகத்துக்காக அர்ப்பணிக்க எத்தனித்தார் சீனிவாசலு. அதன் விளைவாக வாழ்வதற்கே வழியின்றி இருக்க இடமின்றி தவிக்கும் ஆதரவற்ற ஏழைகளை மீட்டு அவர்களுக்கான இருப்பிடங்களை ஏற்படுத்திக்கொடுக்கும் பணிகளை செய்து வருகிறார்.

கண்களை திறந்த சம்பவம்
ஓராண்டு, இரண்டு ஆண்டுகளாக அல்ல. கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக இந்த உன்னத பணியை மேற்கொண்டு வருகிறார் சீனிவாசலு. "கடந்த 2004 ஆம் ஆண்டு சென்னை பட்டாளத்தில் ஆதரவற்ற ஒரு நபர் இருப்பதாக எனது நண்பர் கூறினார். தினசரி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அவரை கடந்து சென்றிருக்கின்றனர். ஆனால், யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை. போர்வையால் மூடி உறங்கிக்கொண்டு இருந்த அந்த நபரின் போர்வையை விலக்கி பார்த்தபோது அவரது கால் எலி கடித்து முழுவதுமாக பாதிக்கப்பட்டு இருந்தது. எலியின் விஷமும் அவரை தாக்கி இருந்தது. அவருக்கு முதன்முதலில் செய்த உதவி எனக்கு மிகுந்த மனநிம்மதியை கொடுத்தது. அந்த சம்பவம்தான் எனது கண்களை திறந்தது." என்கிறார்.

450 க்கும் மேற்பட்டோருக்கு இருப்பிடம்
அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டு தனியாக ஆதரவற்றவர்களுக்கு இருப்பிடங்களை ஏற்பாடு செய்துகொடுக்கும் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினார் சீனிவாசலு. இதுவரை 300 க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களை காப்பகங்களில் சேர்த்து பராமரித்து வருகிறார் சீனிவாசலு. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மூலமாக மேலும் 150 பேர்களுக்கு உதவி இருக்கிறார் அவர்.

வெளி மாநிலத்தவருக்கு உதவி
சென்னையில் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இதுபோன்று ஆதரவற்றவர்கள் வீடின்றி இருப்பது தெரிந்தால் அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து காப்பகங்களில் சேர்க்கிறார் சீனிவாசலு. பெரும்பாலான மக்கள் மனநல குறைபாடு காரணமாகவும், குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்களாகவும் வீதிக்கு வருவதாக அவர் தெரிவிக்கிறார்.

பணம் வாங்குவதில்லை
இதற்காக எந்த பணத்தையும் தனிப்பட்ட முறையில் சீனிவாசலு வழங்குவதில்லை. இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வர்த்தக பிரதிநிதியாக பணியாற்றிக்கொண்டே இந்த மகத்தான பணியை அவர் மேற்கொண்டு வருகிறார். சீனிவாசலுவும் அவரது மனைவியும் வீடில்லாத மக்களுக்கு தினசரி உணவும் வழங்கி வருகின்றனர்.

இந்த உதவி மட்டுமல்ல..
"எங்கள் வீட்டில் தினசரி 4 பேருக்கு கூடுதலாக உணவு சமைப்போம். அதேபோல 30 உணவு பொட்டலங்களை நிதி வசூலித்து ஒவ்வொரு மாலையிலும் வழங்கி வருகிறோம். வீதிகளில் இருப்பவர்கள் சாப்பாடு கிடைக்காமல் அவதிப்படுவது குறையும் என்று நம்புகிறோம். ஒவ்வொரு நாளும் உணவில்லாமல் ஒருவர் உயிரிழக்கிறார்." என கூறுகிறார் வேதனையுடன்.
-
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள்












Click it and Unblock the Notifications