சீனாவிற்கு இணையாக.. 9 மாடி கட்டிடம் உள்ளே.. பறக்கும் சென்னை மெட்ரோ.. வெளியான டிசைன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமங்கலம் உள்ளிட்ட மூன்று இடங்களில் மெட்ரோ கட்டம்-2 திட்டத்தின் கீழ் மெட்ரோ நிலையங்களை CMRL கட்ட திட்டமிட்டுள்ளது. மெட்ரோ ரயிலோடு சில பெரிய கட்டுமானங்களையும் மேற்கொள்ள மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதில் திருமங்கலத்தில் அமைய உள்ள மெட்ரோவிற்கான கட்டுமானம் தொடங்கி உள்ளது.

அங்கே 9 மாடி கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதன் உள்ளே மெட்ரோ செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக டெண்டர் தேர்வாகிவிட்ட நிலையில் கட்டுமானம் நடந்து வருகிறது. கிரவுண்ட் கட்டுமானம் முடிந்த நிலையில் அடுத்த கட்டுமானம் நடந்து வருகிறது. இதில் 4வது மாடியில் மெட்ரோ நிலையம் அமைக்கப்பட உள்ளது.

Chennai Metro to go inside a 9 storey building in Thirumangalam Plan is released

திட்டம் என்ன?

திருமங்கலம் திட்டத்தில் பின்வரும் கட்டிடங்கள் அடங்கும்:

ஒவ்வொன்றும் 9 மாடிகளைக் கொண்ட 3 பிரம்மாண்டமான கட்டிடங்கள்

இந்த திட்டத்தின் மையமாக ஒருங்கிணைக்கப்பட்ட 2 மாடிகளைக் கொண்ட மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படும்

வணிக கட்டிடங்களின் 4, 5 மற்றும் 6-வது மாடிகள் வழியாக மெட்ரோ ரயில்கள் செல்லும் வகையில் ஒரு வடிவமைப்பு மேற்கொள்ளப்படும்.

திட்டத்தின் மொத்த அளவு: சுமார் 6.85 லட்சம் சதுர அடி பரப்பளவு

இந்த கட்டிடத்தில் பல்வேறு அலுவலகங்கள், சில்லறை விற்பனை கடைகள் மற்றும் 3 நிலைகளில் சுரங்க வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும். இந்தியாவில், மெட்ரோ போக்குவரத்து ரயில் அமைப்பு வணிக ரியல் எஸ்டேட் கட்டிடம் ஒன்றின் வழியாக செல்லப்போவது இதுவே முதல் முறையாகும்.

சீனாவில் செயல்படும் மெட்ரோ நிலையங்கள் போல.. கட்டிடம் உள்ள மெட்ரோ செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டு அதன் வழியாக மெட்ரோ ரயில் செல்லும். அங்கு மெட்ரோ ரயில்கள் 9 மாடி கட்டிடத்தின் வழியாகச் சென்று மூன்றாவது மாடி நிலையத்தில் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கட்டிடத்திற்கான வடிவமைப்பு வெளியாகியுள்ளது. ஸ்டேஷன்களுடன் சேர்த்து இந்த கட்டிட மேம்பாடு செய்யப்படும் மற்ற இடங்களான கோயம்பேடு மற்றும் திருமயிலை ஆகியவை 9 மாடி கட்டிடத்தின் வழியாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த 9 மாடி கட்டிடம் குடியிருப்பு அல்ல.. மாறாக அலுவலக பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

என்ன பிளான்

கட்டிடங்கள், மெட்ரோ நிர்வாக செயல்பாடுகள் மற்றும் பொதுப் போக்குவரத்தை ஒன்றாகக் கொண்டு வருவதற்காக மெட்ரோ நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்தும் வகையில் போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். மூன்று இடங்களில் நிலையங்கள் கட்டுவதற்கான செலவு கட்டம்-2 திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டிற்காக, மாநில அரசிடம் நிதி கோருவோம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருமங்கலத்தில், திருமங்கலம் மேம்பாலம் அருகே மூன்று வீடுகள் இருந்த 450 மீ நீளமுள்ள நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. திருமங்கலத்தில் உள்ள மேம்பாலத்திற்கு மேல் மெட்ரோ ரயில் நிலையத்துடன் ஒருங்கிணைந்த பாதையை உருவாக்க திட்டம் இருந்தது. ஆனால், போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மேம்பாலத்தை அகற்ற வேண்டியிருக்கும். அதனால் அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம் என்று மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது.

இந்த பணிகள் எல்லாமே 2028க்குள் நிறைவு பெறும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+