சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனி வாட்ஸ்அப்பிலேயே டிக்கெட்.. சென்னை மெட்ரோ ரயிலில் அறிமுகமாகும் திட்டம்.. பயன்படுத்துவது எப்படி?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டை பயணிகள் வீட்டில் இருந்தே வாட்ஸ்அப் மூலம் எடுத்து கொள்ளும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய முழுவிபரம் தற்போது வெளியாகி உள்ளது.

சென்னையில் நிரம்பி வழியும் வாகனங்களுக்கு மத்தியில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் மக்கள் வேகமாக பயணம் செல்ல மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் முதல் முதலாக கடந்த 2015 ஜூன் மாதம் துவங்கப்பட்டது. அப்போது சென்னை ஆலந்தூர் -கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது.

ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில்.. விரைவில் சென்னையில் சீறிப்பாய்கிறது.. ரூ.946.92 கோடியில் ஒப்பந்தம்! ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில்.. விரைவில் சென்னையில் சீறிப்பாய்கிறது.. ரூ.946.92 கோடியில் ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ ரயில் சேவை

சென்னை மெட்ரோ ரயில் சேவை

சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது. சென்னை விம்கோ நகரில் இருந்து அண்ணா சாலை வழியாக விமான நிலையம் வரையும், சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரையும், கோயம்பேடு வழியாக செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் தினமும் ஏராளமானவர்கள் பயணித்து வருகின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட அதிகமான பயணம் செய்து வருகின்றனர்.

பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

தற்போதைய சூழலில் சென்னை மெட்ரோ ரயிலை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வார நாட்களில் தினமும் 2.15 லட்சம் முதல் 2.20 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். வார இறுதி நாட்களில் இது இன்னும் அதிகரிக்கிறது. மேலும் 2022 ஜனவரி மாதத்தில் மொத்தம் 25 லட்சத்து 19 ஆயிரத்து 252 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணித்து இருந்தனர். இந்த எண்ணிக்கை என்பது கடந்த செப்டம்பரில் 61 லட்சத்து 12 ஆயிரத்து 906 எனவும், அக்டோபரில் 61 லட்சத்து 56 ஆயிரத்து 360 எனவும், நவம்பரில் 62 லட்சத்து 71 ஆயிரத்து 730 ஆகவும் அதிகரித்துள்ளது. கடந்த 11 மாதங்களில் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தோரின் எண்ணிக்கை 5 கோடியே 43 லட்சத்து 23 ஆயிரத்து 113 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய டிக்கெட் முறை என்ன?

தற்போதைய டிக்கெட் முறை என்ன?

சென்னை மெட்ரோ ரயிலில் தற்போது டிக்கெட் எடுக்க கவுண்ட்டர் டிக்கெட் வசதியோடு மேலும் 2 வகையான வசதிகள் உள்ளன. ஒன்று பயண அட்டை முறை, இன்னொன்று க்யூஆர் கோடு முறை. இதில் க்யூஆர் கோடு மற்றும் மெட்ரோ பயண அட்டைகளை பயன்படுத்துவோருக்கு 20 சதவீதம் வரை கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இதனால் க்யூஆர் கோடு, மெட்ரோ பயண அட்டைகளை அதிகமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தம் 62 ல்டசத்து 71 ஆயிரத்து 730 பயணிகள் பயணம் செய்த நிலையில் க்யூஆர் கோட் முறையில் 18 லட்சத்து 22 ஆயிதர்த 703 பேர் க்யூஆர் கோட் முறையிலும், 40 ல்டசத்து 23 ஆயிரத்து 296 பேர் பயண அட்டை முறையிலும் பயணம் செய்துள்ளனர்.

வாட்ஸ்அப் டிக்கெட் வசதி

வாட்ஸ்அப் டிக்கெட் வசதி

இந்நிலையில் தான் புதிதாக 3வது வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளுக்கு வழங்க உள்ளது. இதற்கான திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வடிவமைத்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் செல்போனில் உள்ள வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் எடுத்து எளிமையாக பயணம் செய்ய முடியும்.

அதிகாரி கூறுவது என்ன?

அதிகாரி கூறுவது என்ன?

இதுபற்றி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் (மெட்ரோ ரயில் இயக்கம்) ராஜேஷ் சதுர்வேதி கூறுகையில், ‛‛சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் வாட்ஸ்-அப் மூலம் டிக்கெட் எடுக்கும் வகையில் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த திட்டம் விரைவில் அறிமுகமாகும். இதன்மூலம் பொதுமக்கள் வீடு உள்பட எங்கிருந்தும் வேண்டுமானாலும் மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான டிக்கெட்டை வாட்ஸ் அப் மூலம் எடுத்து கொள்ள முடியும்.

என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்ய வேண்டும்?

அதன்படி மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு தனி வாட்ஸ் அப் எண் வழங்கப்படும். இந்த எண்ணுக்கு பொதுமக்கள் தங்களின் வாட்ஸ்அப்பில் இருந்து ‛ஹாய்' என மெசேஜ் செய்வதன் மூலம் ‛‛சார்ட் போட்'' (Chatbot) என்ற முறையில் கிடைக்கும். இதில் டிக்கெட் எடுக்கும் அம்சத்தை பொதுமக்கள் கிளிக் செய்து பயணிகள் தாங்கள் புறப்படும் ரயில் நிலையத்தின் பெயர், செல்லும் ரயில் நிலையத்தின் பெயரை பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை வாட்ஸ்-அப், ஜிபே, யு-பே மூலம் செலுத்தினால் போதும் டிக்கெட் எடுத்து விடலாம். அதன்பிறகு ரயில் நிலையங்களில் உள்ள க்யூஆர் ஸ்கேனரில் காண்பித்து பயணத்தை எளிமையாக தொடங்கலாம். அதன்பிறகு வெளியே செல்லும் இடத்தில் உள்ள க்யூஆர் ஸ்கேனரில் காண்பித்து ரயில் நிலையத்தில் இருந்து வெளியே செல்லலாம்'' என்றார்.

 பெங்களூர் பாணியில் திட்டம்?

பெங்களூர் பாணியில் திட்டம்?

மெட்ரோ ரயிலில் பயணிக்க வாட்ஸ்அப்பில் டிக்கெட் எடுக்கும் வசதி இந்தியாவில் தற்போது கர்நாடகா தலைநகர் பெங்களூரில் நடைமுறையில் உள்ளது. அங்கு 8105556677 என்ற வாட்ஸ்அப் எண் மெட்ரோ நிறுவனத்தின் எண்ணாக உள்ளது. இந்த எண்ணுக்கு பொதுமக்கள் Hai என மெசேஜ் அனுப்ப வேண்டும். இதையடுத்து 3 ஆப்ஷன்கள் வரும். ‛க்யூஆர் டிக்கெட்' (QR Tickets), கார்டு விபரம் மற்றும் ரீசார்ஜ்( Card Info and Recharge), More Options ஆகியவை ஆப்ஷன்களாக வரும். இதில் QR tickets எனும் ஆப்ஷனை கிளிக் செய்தால் போதும். Buy Ticket எனும் இன்னொரு ஆப்ஷன் வரும். அதன்மூலம் புறப்படும் ரயில் நிலையம், சென்றடையும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பிற விபரங்களை பதிவிட்டு டிஜிட்டல் பணபரிவர்த்தனை முறையில் கட்டணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்று கொள்ளலாம். அதில் கேன்சல் செய்யும் வசதி இருப்பதோடு, இந்த வசதியை பயன்படுத்தி எங்கெல்லாம் பயணித்தோம் என்பதையும் அறிந்து கொள்ளலாம். இந்த வகையில் தான் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமும் வாட்ஸ்அப் டிக்கெட் திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

English summary
The facility of collecting Chennai Metro train tickets from the comfort of a passenger's home through WhatsApp is going to be introduced soon. Full details on how to use it are now available.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X