ஜெர்மனி பெண் - ஆர்யா விவகாரத்தில் திருப்பம்.. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விளக்கம்
சென்னை: ஜெர்மனி பெண்ணை ஏமாற்றியது நடிகர் ஆர்யா கிடையாது என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
முதல் தகவல் அறிக்கையின் படி நடந்த விசாரணையில் ஆர்யாவிற்கும் இவ்விவகாரத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறினார்.
பிரபல நடிகர் ஆர்யா, தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி ரூ.70 லட்சம் பெற்று மோசடி செய்ததாக இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஜெர்மனியை சேர்ந்த இளம்பெண் விட்ஜா, சென்னை பெருநகர காவல்துறையில் புகார் அளித்தார்.

ஜெர்மனி பெண்
ஆனால், அந்த புகாரின் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை நீதிமன்றத்தை அணுகினார். உயர் நீதிமன்றம், புகார் குறித்து விசாரணை செய்து பதிலளிக்குமாறு சென்னை சைபர் குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில், நடிகர் ஆர்யாவிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் குற்றப்பிரிவினர் விசாரணை நடத்தினர்.

வேறுநபர் மோசடி
இதன் தொடர்ச்சியாக அந்த பெண்ணிடமும் வீடியோ கால் மூலம் விசாரணை செய்தனர்.இதையடுத்து இந்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகர் ஆர்யா என்ற பெயரில் மாறுவேடத்தில் வேறு ஒரு நபர், அந்த பெண்ணிடம் பேசி பணம் மோசடி செய்திருப்பதை போலீஸார் உறுதி செய்தனர்.

இரண்டு பேர் கைது
அடுத்தக் கட்டமாக ஆர்யா என்ற பெயரில் விட்ஜாவிடம் பேசி மோசடி செய்ததாக சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த முகமது அர்மான் (32), உடந்தையாக இருந்ததாக முகமது அர்மானின் உறவினர் முகமது ஹூசைனி பையாக் (34) ஆகிய இருவரை கடந்த 10-ம் தேதி சென்னை போலீசார் கைது செய்தனர்.

காவல் ஆணையர்
இந்நிலையில், வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் சென்னை போலீஸார் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில், ஆர்யாவின் பெயர் முதல் குற்றவாளியாகவும், அவரது தாயார் 2-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டிருந்ததாகவும், எனவே அவர்களை கைது செய்யவேண்டும் எனவும் பாதிக்கப்பட்டபெண் தரப்பில் கோரினார். இந்நிலையில் நடிகர்ஆர்யா நேற்று பிற்பகல் 2.35மணி முதல் 2.55 மணிவரை காவல்ஆணையரை நேரில் சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

ஆர்யாவிடம் விசாரணை
இந்த விவகாரத்தில் நடிகர் ஆர்யா மீது தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறும்போது , புகாரின் அடிப்படையிலே நடிகர் ஆர்யாவின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அத்துடன் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ஆதாரங்கள் இல்லை
மொபைல் எண்ணை வைத்து இடத்தை கண்டுபிடித்த போது பெண் குரலில் பேசியது தெரியவந்தது. வழக்கில் ஆர்யாவுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இதுவரை இல்லை. உண்மை குற்றவாளிகளை கண்டறிந்ததற்காக என்னை சந்தித்து ஆர்யா நன்றி தெரிவித்தார் என்றார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications