சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் மாட்டிறைச்சிக்கு தடையா? சென்னை போலீசாரின் செயலால் கிளம்பிய சர்ச்சை!

Google Oneindia Tamil News

சென்னை: மாட்டுக்கறி விவகாரத்தில் சென்னை போலீசாரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகப் பலரும் சாடி வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே மாட்டுக்கறி என்பது சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறிவிட்டது. மாட்டுக்கறிக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கூட ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இருப்பினும், மற்றொரு தரப்பினர் இந்தியாவில் ஒருவர் விரும்பிய உணவைச் சாப்பிடக் கூட உரிமை இல்லையா என்றும் நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிட்ட உணவு குறித்து எதுவும் சொல்லவில்லை என்று பலரும் கூறி வருகின்றனர்.

நான் இந்து தான்! மாட்டுக்கறி சாப்பிடுவேன்! என்னைக் கேள்வி கேட்க நீ யார்? கொதித்தெழுந்த சித்தராமையா நான் இந்து தான்! மாட்டுக்கறி சாப்பிடுவேன்! என்னைக் கேள்வி கேட்க நீ யார்? கொதித்தெழுந்த சித்தராமையா

 வட மாநிலங்கள்

வட மாநிலங்கள்

உத்தரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் கூறி பலர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். வீட்டில் புகுந்து, உள்ளே வைத்திருப்பது மாட்டுக்கறி தானே என்று தாக்கப்பட்ட சம்பவங்களும் கூட அங்கு நடந்துள்ளன. இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் இப்போது சற்று குறைந்து இருந்தாலும் கூட, மாட்டுக்கறிக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோஷம் மட்டும் இருந்து கொண்டே இருக்கிறது.

 தமிழ்நாடு

தமிழ்நாடு

நல்வாய்ப்பாக வடமாநிலங்களைப் போலத் தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் இதுவரை பெரியளவில் நிகழாமல் இருந்து வருகிறது. இந்தச் சூழலில் சென்னை போலீசாரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது நாம் தமிழர் கட்சியின் மாணவர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் அபூபக்கர் தான் சாப்பிட்ட மாட்டுக்கறியைப் புகைப்படம் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். படத்திற்கு கேப்ஷனாக மாட்டுக்கறி என்று மட்டும் பதிவிட்டு இருந்தார்.

சர்ச்சை

சர்ச்சை

அவர் வேறு எந்தவொரு கருத்தையும் பதிவிடவில்லை. மேலும், யாரையும் டேக் கூடச் செய்யாமலேயே படத்தைப் பகிர்ந்து இருந்தார். இந்தப் பதிவுக்குப் பெருநகர சென்னை காவல் துறை தானாக முன்வந்து பதில் அளித்துள்ளது தான் இப்போது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அதாவது "இத்தகைய பதிவு இங்குத் தேவையற்றது, தேவையற்ற பதிவுகளைத் தவிர்க்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளனர்.

 சென்னை போலீஸ்

சென்னை போலீஸ்

ஒருவர் தனிப்பட்ட முறையில் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ஃபோட்டோவுக்கு சென்னை போலீசாரின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து இதுபோன்ற ரிப்ளே வந்து உள்ளது இணையத்தில் விவாதத்தைக் கிளப்பி உள்ளது. தமிழ்நாட்டில் மாட்டுக்கறிக்குத் தடை எதுவும் இல்லாத நிலையில், சென்னை போலீசார் எப்படி இப்படி சம்பந்தமே இல்லாமல் தானாக முன்வந்து பதில் கூறலாம் எனப் பலரும் கேள்வி எழுப்பினர்.

 விளக்கம்

விளக்கம்

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், பலரும் சென்னை போலீஸின் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து கேள்வி எழுப்பினர். சென்னை போலீசாரின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த சிலர், தமிழ்நாட்டிலும் கூட மாட்டுக்கறிக்குத் தடை விதிக்கப்படலாம் என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்நிலையில், அந்த பதிவை நீக்கிய சென்னை போலீசார், இது குறித்து விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளது.

Recommended Video

    ஒரே வயிற்று வலி! Anna Nagar Hotel-லில் அழுகிய இறைச்சியில் உணவு *TamilNadu
     தவறு

    தவறு

    அதாவது தவறுதலாக இந்த ட்வீட் பதிவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து அவர்கள் ட்விட்டரில், "அனபூபக்கர் தாங்கள் பதிவிட்ட ட்வீட், சென்னை காவல் துறையின் பக்கத்தில் Retweet செய்யப்பட்டதால், பொது மக்களின் பயன்பாட்டுக்கான Twitter பக்கத்தில் தனிப்பட்ட பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த பதிவு செய்யப்பட்டது. ஆனால் தவறுதலாக தங்களுடைய பக்கத்திலேயே இது பதிவிடப்பட்டதற்கு வருந்துகிறோம். இது தங்களுடைய தனிப்பட்ட உணவுத்தேர்வினைக் குறித்தல்ல" என்று கூறப்பட்டு உள்ளது.

    English summary
    Will Tamilnadu ban beef meat what experts says: (தமிழ்நாட்டில் மாட்டுக்குறிக்கு தடை விதிக்கப்படுமா) All things to know about beef in tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X