சென்னை புறநகர் மின்சார ரயில் பயணிகள் கவனம்! ரயில்வே கொடுத்த முக்கிய அறிவிப்பு!
சென்னை: சென்னை புறநகர் ரயில் பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. யுடிஎஸ் செயலி வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் இயங்காது. இதற்கு பதிலாக ரயில் ஒன் செயலியில் பயணிகள் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளையும் புறநகர் மின்சார ரயில்களுக்கான டிக்கெட்டுகளையும் எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மின்சார ரயில் பயணிகள் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசலில் பயணிக்கு விடிவெள்ளி போல இருப்பது மின்சார ரயில்கள்தான் என்று சொன்னால் மிகையல்ல.

மின்சார ரயில்கள் மற்றும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வரப்பிரசாதம் போல இருப்பது ரயில்வேயின் யுடிஎஸ் செயலிதான். பயணிகள் டிக்கெட் எடுக்க கவுண்டருக்கு காத்திருக்கும் நேரத்தில் ஒன்றிரண்டு ரயில்களே செல்லும் அளவுக்கு பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இதுபோன்ற நேரத்தில் வீட்டில் இருந்து கிளம்பும் போதே யுடிஎஸ் செயலியில் பயணிகள் டிக்கெட் புக்கிங் செய்து விட்டால் நேராக வந்து ரயிலில் ஏற முடியும். இதனால் ரயில் பயணிகளுக்கான தவிர்க்க முடியாத செயலியாக யுடிஎஸ் இருந்தது. இந்த நிலையில்தான் யுடிஎஸ் செயலி வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் இயங்காது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு பதிலாக ரயில் ஒன் செயலியில் பயணிகள் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளையும் புறநகர் மின்சார ரயில்களுக்கான டிக்கெட்டுகளையும் எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கட்டுள்ளது. யுடிஎஸ் செயலியில் இருந்த டிகெட்டுகளையும் ரயில் ஒன் செயலிக்கு மாற்றிக்கொள்ளவும் முடியும் வசதிகளை தெற்கு ரயில்வே கொண்டு வந்துள்ளது.
ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளும் ரயில் ஒன் செயலியில் பெறலாம் என்ற அடிப்படையில் ரயில் ஒன் செயலி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications