சைக்கிள் ஓட்டிப் பாருங்க.. உடம்பு மட்டுமில்லை, மனசும் அப்படியே உற்சாகமடையும்: முதல்வர் ஸ்டாலின்
இளம் வயதிலேயே பலருக்கு ஏற்படும் உடல் நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு, உடற்பயிற்சியே சிறந்த தீர்வு.சைக்கிள் ஓட்டுவது என்பதும் சிறந்த உடற்பயிற்சியே என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: சைக்கிள் ஓட்டுவது, உடல் நலன் காப்பதோடு, மன நலம் பேணவும் உதவுகிறது. இன்றைய காலக்கட்டத்தில், இளம் வயதிலேயே பலருக்கு ஏற்படும் உடல் நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு, உடற்பயிற்சியே சிறந்த தீர்வு என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மனிதர்களின் பயணத்தை துரிதப்படுத்த பல வாகனங்கள் வந்திருந்தாலும் சைக்கிள்களுக்கு இருக்கும் மவுசு என்றும் குறையவில்லை. அதிலும் சைக்கிள் மீது உலக மக்கள் கொண்டுள்ள மோகம் கொரோனா முதல் அலைக்கு பிறகு அதிகரித்த வண்ணம் உள்ளது என்ற தகவலும் கிடைத்துள்ளது.
சிலர் உடல் ஆரோக்கியத்திற்காகவும், சிலர் சுற்றுச்சூழலை காக்கும் நோக்கிலும், சிலர் நிதி சிக்கலை சமாளிப்பதற்காகவும் மிதிவண்டியை மிதித்தபடி நம் ஊர்களின் சாலைகளில் பயணிக்கின்றனர். ஆண்டு தோறும் ஜூன் 3ஆம் உலக சைக்கிள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

மிதிவண்டி
20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் குறைந்து ஒரு சைக்கிள் ஆவது இருக்கும். காலப்போக்கில் இரண்டு சக்கர மேட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லச் செல்ல வீட்டுக்கு இரண்டு மேட்டார் வாகனங்கள் என்ற நிலை உருவானது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் சைக்கிளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சைக்கிள் பயணம்
சென்னையில் அதிகாலையில் பலர் சைக்கிள் ஓட்டிச் செல்லும் காட்சியை காண முடிகிறது. வார இறுதி நாட்களில் குழுக்களாக இணைந்து இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலையில் சைக்கிள் ஓட்டிச் செல்கின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரம் கிடைக்கும்போது எல்லாம் இசிஆர் சாலைகளில் சைக்கிள் ரைடு செல்கிறார். இவ்வாறு நாடு முழுவதும் சைக்கிள் பயன்பாடு தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் பயணம்
முதல்வர் மு.க ஸ்டாலின் அடிக்கடி சைக்கிளில் பயணம் செய்து உடற்பயிற்சி செய்வார். சைக்கிளில் பயணம் செய்வதை விரும்பும் முதல்வர் மு.க ஸ்டாலின் உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உடற்பயிற்சியே சிறந்த தீர்வு
உலக மிதிவண்டி நாளை ஒட்டி, முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் சைக்கிள் ஓட்டுவது, உடல் நலன் காப்பதோடு, மன நலம் பேணவும் உதவுகிறது. இன்றைய காலக்கட்டத்தில், இளம் வயதிலேயே பலருக்கு ஏற்படும் உடல் நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு, உடற்பயிற்சியே சிறந்த தீர்வு. சைக்கிள் ஓட்டுவது என்பதும் சிறந்த உடற்பயிற்சியே என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

கொரோனா காலத்திற்குப் பிறகு சைக்கிள் பயணம்
பள்ளி செல்லும் மாணவர்கள், உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துபவர்கள் மட்டுமே சைக்கிளை பயன்படுத்தும் நிலை உருவானது. இந்த நிலையில் தான் கடந்த சில ஆண்டுகளாக தனது மகத்துவத்தை மீண்டும் பெறத் தொடங்கியுள்ளது. கொரோனா முதல் அலைக்கு பிறகு இந்தியாவில் சைக்கிளில் பயணம் செய்ய பெரும்பாலான மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications