ஒரே நாள்.. இரண்டு சம்பவம்.. மகிழ்ச்சியில் ஸ்டாலின்.. மறக்க முடியாத நாளாகும் சுதந்திர தினம்
சென்னை: முதல் முறையாக முதல்வரான முக ஸ்டாலினுக்கு சுதந்திர தினத்தின் 75ம் ஆண்டில் கொடியேற்றும் வாய்ப்பு அமைந்துள்ளது. அதுவும் அவர் ஆட்சிக்கு வந்த 100வது நாள் அது என்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் ஸ்டாலின்.
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், போலீசாரின் அணிவகுப்பு என பிரம்மாண்டமான நிகழ்வாக குடியரசு தினம் கோட்டைக்கொத்தளத்தில் நடைபெறும்.
இந்த ஆண்டும் ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருகிறது. கடந்த 1997ம் ஆண்டு 50ம் ஆண்டு பொன்விழா என்பதால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. அப்போது தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலினின் தந்தையும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதி இருந்தார். சரியாக 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வாய்ப்பு அவரது மகனான ஸ்டாலினுக்கு கிடைத்துள்ளது.

உரிமை யாருக்கு
சுதந்திர தினத்தில் முதல்வர்கள் கொடியேற்றும் உரிமை பற்றி சில விஷயங்களையும் பார்ப்போம். இந்தியா விடுதலை பெற்ற பின்பு, ஜனவரி 26-குடியரசு நாளன்று நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவரும், ஆகஸ்ட்15-விடுதலை நாளன்று பிரதமரும் டில்லியில் தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர்.

கருணாநிதி கோரிக்கை
ஆனால் மாநில தலைநகர்களில் அந்த இரண்டு நாள்களிலும் ஆளுநரே தேசிய கொடியை ஏற்றி வந்தார். 1969-ஆகஸ்ட் 15-ம் நாள் மாலையில் சென்னை. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற விடுதலை நாள் விழாவில் பேசிய அன்றைய முதலமைச்சர் கருணாநிதி ஆகஸ்ட் 15-ம் நாள் மாநில தலைநகரங்களில் தேசிய கொடியை ஏற்றும் உரிமையை முதலமைச்சர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.

முதல் முறை
மத்திய அரசும் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று "மாநில தலைநகரங்களில் ஜனவரி 26 குடியரசு நாளன்று ஆளுநர்களும், ஆகஸ்ட் 15 விடுதலை நாளன்று முதலமைச்சர்களும் தேசிய கொடியை ஏற்றுவார்கள்" என்று ஆணை பிறப்பித்தது. 1974 ஆகஸ்ட் 15-ம் நாள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொடி மரத்தில் முதலமைச்சர் கருணாநிதி தேசிய கொடியை ஏற்றினார். எனவே சுதந்திர தினத்தன்று செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் முதன் முதலாக தேசிய கொடி ஏற்றிய பெருமை கருணாநிதிக்கு கிடைத்தது. 50வது சுதந்திர தினத்தன்று கொடியேற்றியதும் கருணாநிதி தான்.

ஸ்டாலின் ஏற்றுகிறார்
இப்போது 75வது சுதந்திர தினத்தில் கொடியேற்றும் வாய்ப்பு கருணாநிதியன் மகனும் , தமிழகத்தின் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்துள்ளது. அதுவும் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 100வது நாளில் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் உணமையில் ஸ்டாலினுக்கு இந்த சுதந்திர தினம் மறக்க முடியாத நாள் ஆக அமைந்துள்ளது.

பட்ஜெட்
உச்ச கட்ட மகிழ்ச்சியில் உள்ள ஸ்டாலின் தனது அரசின் முதல் பட்ஜெட்டை சுதந்திர தினத்திற்கு முன்பே தாக்கல் செய்ய வேண்டும் என்று விரும்பினார். அதன்படியே நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதேபோல் வரலாற்றில் இல்லாத நிகழ்வாக வேளாண் துறைக்கு தனிபட்ஜெட் தாக்கல் செய்ய விரும்பினார். அதுவும் ஆகஸ்ட் 14ம் தேதி நடக்க உள்ளது.
Recommended Video

பட்ஜெட்டில் வருகிறது
பட்ஜெட்டில் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் திமுகவின் சில கவர்ச்சியான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளது. அவற்றில் முக்கியமானது, முதியோர் உதவித்தொகை உயர்வு, நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்டவை அறிவிக்கப்படலாம். இன்னும் சில சர்ப்பைரஸ்கள் இருக்கலாம். ஆனால் அதை அறிய நாளை வரை காத்திருக்க வேண்டும்,.












Click it and Unblock the Notifications