கடலூருக்கு இன்றே செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. டெல்டா மாவட்டங்களில் 2 நாட்கள் நேரடி ஆய்வு..!
டெல்டா மாவட்டங்களில் 2 நாள் ஆய்வு செய்ய உள்ளார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: டெல்டா மாவட்டங்களில் முதல்வர் 2 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளார்... அதற்காக இன்று மாலையே கடலூருக்கு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது... வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று சாயங்காலம், மாமல்லபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்தே டெல்டா மாவட்டங்களில் அடைமழை கொட்டி வருகிறது..

தஞ்சை
குறிப்பாக, நாகை, திருப்பூண்டி, திருவாரூர், தஞ்சை என பல்வேறு மாவட்டங்களில் மட்டுமே கடந்த 24 மணி நேரத்தில் நல்ல மழைபொழிவு இருந்துள்ளது. இதனால், நாகையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விட்டன.. திருவாரூர் மாவட்டத்திலும், 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்களும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்களும் நிலத்தில் மூழ்கிவிட்டன.. தஞ்சை மாவட்டத்திலும் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின...

வயல்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வயல்களில் தண்ணீர் நிரம்ப தேம்பி உள்ளது.. இப்படி ஒட்டுமொத்தமாக டெல்டா மாவட்டங்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கர் அளவில் பயிர் நீரில் மூழ்கிவிட்டன.. இதில், பெருமளவு இளம் நாற்றுகளாம்.. அவைகள் கண்ணெதிரே நீரில் அழுகி வருவதை பார்த்து விவசாயிகள் கதிகலங்கி கண்ணீர் விடுகின்றனர். இதைதவிர, தொடர் மழையும் வர உள்ளதால், அதை பற்றின பீதியும் கவலையும் அவர்களுக்கு சேர்ந்து கொண்டுள்ளது..

மழைபாதிப்பு
எத்தனையோ இடங்களில் வெள்ள நீர் பாய்ந்து தரைப்பாலங்கள் அடித்து செல்லப்பட்டு வருகின்றன.. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.. தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினர் களத்தில் இறங்கி உள்ளனர் என்றாலும், டெல்டா மக்களின் பாதிப்புகள் குறையவில்லை.. இப்படிப்பட்ட சூழலில்தான் டெல்டா மாவட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விரைந்து சென்று நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை
சென்னையிலேயே 4 நாட்களும் நேரடி ஆய்வில் ஈடுபட்டு, நிவாரண உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார்.. இன்றும் மழை கொட்டி வருகிறது.. இன்று மாலைதான் சென்னை அருகே புயல் கரையைக் கடக்கும் என்று சொல்லி உள்ளனர்.. எனவே, தமிழக பாதிப்புகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் தற்போது முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.. தொடர்ச்சியான பாதிப்புகளிலிருந்து மக்களை காக்கவேண்டுமென அதிகாரிகளிடமும் போனில் முதல்வர் வலியுறுத்தி வருகிறார்.
Recommended Video

2 நாள் ஆய்வு
பிறகு, தமிழகத்தில் மிக அளவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களை நேரில் ஆய்வு செய்ய உள்ளார் முதல்வர்.. இந்த ஆய்வு 2 நாட்கள் தொடரும் என்கிறார்கள்.. இதற்காகவே இன்று மாலையே கடலூர் மாவட்டம் செல்ல இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன... டெல்டா மாவட்டங்களில், மழை பாதிப்பு மற்றும் மழையால் பாதிப்படைந்துள்ள விளைநிலங்களையும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளார்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications