4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் முதல்வர் ஸ்டாலின். இதுதான் காரணம்.. மாஸ் லீடர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் சித்ரஞ்சன் ரோடு ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் வாழியாக அண்ணா அறிவாலயம் செல்லாமல், TTK வழியாக நேராக கதீட்ரல் ரோடு, அண்ணா மேம்பாலம் வழியாக 4 கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் சென்று வருகிறார், இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்று சில தகவல்கள் உலா வருகிறது. அவற்றை இப்போது பார்ப்போம்.

Recommended Video

    வழக்கமான வழியை விட 4 கிமீ சுற்றி செல்லும் Stalin.. இதான் காரணமாம்!

    தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் அபாரமாக வெற்றி பெற்றது. திமுக மட்டுமே அறுப்பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் வென்று ஆட்சியமைத்துள்ளது.

    இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக முதல்முறையாக கடந்த மே 7ம் தேதி பதவியேற்றார். பதவியேற்றது முதலே அவர் பல்வேறு அதிரடியாக அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தி வருகிறார்.

    பால்விலை குறைப்பு

    பால்விலை குறைப்பு

    குறிப்பாக கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்களுக்கு 4000 நிவாரண நிதி (முதல் தவணை 2000 இந்த மாதம் வழங்கப்பட உள்ளது) மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணம், ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாளில் தீர்வு ஏற்படுத்த தனித்துறை போன்ற உத்தரவுகளை பிறப்பித்தார்.

    அமைச்சர்களுக்கு எச்சரிக்கை

    அமைச்சர்களுக்கு எச்சரிக்கை

    மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் முதலமைச்சர் காப்பீடு திட்டம் மூலம்தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் அந்த சிகிச்சை கட்டணத்தை அரசே ஏற்கும் என்றும் அறிவித்தார். அவரது திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர்களை பதவியேற்பு விழாவில் முன்வரிசையில் உட்கார வைத்து மரியாதை செய்தது அமைச்சர்களை எச்சரித்தது, காவல்துறை நடவடிக்கையில் தலையிடக்கூடாது என கட்சியினரை எச்சரித்தது, அம்மா உணவகத்தை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது என பல விஷயங்களில் ஸ்கோர் செய்துள்ளார். இதனால் முதல்வர் ஸ்டாலினை சமூக வலைதளங்களில் மக்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

    வியப்புடன் பார்க்கிறார்கள்

    வியப்புடன் பார்க்கிறார்கள்

    இப்படி பல்வேறு தரப்பு மக்களிடம் பாராட்டுக்களை பெற்ற முதல்வர் ஸ்டாலினின் செயல்களை, சில நாட்களாக உற்று கவனிக்கும் திமுக உடன்பிறப்புகள் ஆச்சயர்த்தில் உள்ளனர் குறிப்பாக அவர் அண்ணா அறிவாலயம் செல்லும் வழி மாறியதை ஏன் என்று இன்றுவரை வியப்புடன் பார்க்கிறார்கள்.

    ஸ்டாலின் செல்லும் பாதை

    ஸ்டாலின் செல்லும் பாதை

    திமுகவினர் வியப்புடன் பார்க்கும் அளவுக்கு என்ன நடந்தது? ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கும் முன்பு வரை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது வீட்டிலிருந்து சித்ரஞ்சன் ரோடு ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் வாழியாக அண்ணா அறிவாலயம் செல்வது வழக்கம்.. இப்போது முலமைச்சர் ஆன பிறகு TTK வழியாக நேராக கதீட்ரல் ரோடு, அண்ணா மேம்பாலம் வழியாக அறிவாலயம் செல்கிறார். முன்பை விட இப்போது 4 கிலோ மீட்டர் அதிகமாக சுற்றிக்கொண்டு செல்கிறார் என்கிறார்கள் திமுகவினர்.

    சாலையோர கடைகள்

    சாலையோர கடைகள்

    இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என்று விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தது. முதல்வர் ஸ்டாலின் செல்லும் பாதையில் பாதுக்காப்பு காரணமாக சாலையோர கடைகளை அகற்றிவிடுவார்கள். எல்டாம்ஸ் ரோட்டில் சென்றால் அங்கு சாலையோர கடை வைத்திருக்கும் ஏழைகளின் வாழ்வாதாரம் தன்னால் பாதிக்கப்படும். அப்படி ஏதும் நடந்துவிட கூடாது என்பதற்காகவே இந்த மாற்றம் என்கிறார்கள் திமுகவினர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+