Nallakannu: நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு! ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு விரைந்த ஸ்டாலின்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் விரைந்துள்ளார்.
நல்லகண்ணு வயது மூப்பின் காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி திடீரென வீட்டில் தவறி விழுந்ததில் காயமடைந்தார். இதையடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி மீண்டும் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் சிகிச்சை முடிந்து கடந்த மாதம் 8ஆம்தேதி குணமடைந்து வீடு திரும்பினார். தொடர்ந்து வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நல்லகண்ணுவுக்கு கடந்த 1 ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து அவர் உடனடியாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முதல் அவரது உடல்நிலை பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
வயது மூப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாகவே அவ்வப்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நல்லகண்ணு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு வீட்டுக்கு அனுப்பப்பட்டு ஓய்வு எடுத்து வந்தார்.
இந்த நிலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வீரபாண்டியன், முத்தரசன் உள்ளிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
அது போல் முதல்வர் ஸ்டாலினும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு எழுந்துள்ளது.
-
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை! -
கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்தேனா? நாக்கில் நரம்பிருக்கா பழனிசாமி? ஸ்டாலின் ஆவேசம் -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications